ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும் சூப்பரான பட்ஜெட் கார்கள்!

பண்டிகைக் காலத்தில் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது பல இந்திய குடும்பங்களின் திட்டமாக உள்ளது. குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு குறைவான பட்ஜெட் விலை கார் வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும், பலர் எக்ஸ்ஷோரூம் விலையை மனதில் வைத்து ஷோரூமுக்கு சென்று விடுகின்றனர். அங்கு எக்ஸ்ஷோரூம் விலையுடன் சாலை வரி, காப்பீடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து டீலர் விற்பனை பிரதிநிதி கூறும்போது குழப்பம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், முதல்முறை கார் வாங்குவோர் அல்லது நகர்ப்புற பயன்பாட்டிற்காக சிறிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு ஏதுவாக சில சிறந்த பட்ஜெட் கார் மாடல்களை இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம். ரூ.6 லட்சம் ஆன்ரோடு விலைக்குள் இருக்கும் கார்களில் தேர்ந்தெடுத்து வழங்கி உள்ளோம். பட்ஜெட் மட்டுமின்றி நகரப் போக்குவரத்துக்கு ஏற்ற அளவு, எரிபொருள் சிக்கனம், குடும்பப் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக கார் வாங்க நினைப்பவர்கள் முதல் தினசரி அலுவலகப் பயணத்திற்குக் கார் தேடுபவர்கள் வரை, தங்கள் தேவைக்கு ஏற்ற மாடலை இந்தப் பட்டியலில் தேர்வு செய்யலாம்.

Maruti S Presso

1. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ

எஸ்யூவி போன்ற தோற்றத்தில் சிறிய காரை விரும்புபவர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பொருத்தமாக இருக்கும். உயரமான இருக்கை அமைப்பு, சிறிய அளவு ஆகியவை நெரிசலான சாலைகளில் ஓட்டுவதற்கும் குறுகிய இடங்களில் நிறுத்துவதற்கும் உதவுகின்றன. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

Also Read

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 எச்பி திறனையும் 91 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இந்த கார் லிட்டருக்கு 24.12 முதல் 25.30 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் அடிப்படை வசதிகள் மாடலின் ஆன்ரோடு விலை ரூ.4.30 லட்சமாக உள்ளது.

Maruti Alto K10

2. மாருதி சுஸுகி ஆல்டோ கே10

குறைந்த செலவில் முதல் கார் வாங்க நினைப்பவர்கள் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மாடலைப் பரிசீலிக்கலாம். சிறிய அளவு, எளிதான கையாளுமை, குறைவான பராமரிப்புச் செலவு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம். நகரத்திற்குள் தினசரி அலுவலகப் பயணம் மற்றும் குடும்பத் தேவைகளுக்கு ஏற்ற காராக இது இருக்கும்.

Also Read

இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 69 எச்பி திறனையும் 91 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றன. லிட்டருக்கு 24.39 முதல் 24.90 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் அடிப்படை வசதிகள் மாடலின் விலை ரூ.4.32 லட்சமாக உள்ளது.

Renaut Kwid

3. ரெனால்ட் க்விட்

சிறிய காராக இருந்தாலும் வித்தியாசமான தோற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ரெனால்ட் க்விட் ஒரு தேர்வாக இருக்கும். பார்ப்பதற்கு ஒரு எஸ்யூவி போன்ற கம்பீரமான தோற்றம் இதற்கு பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை பெற்று தந்துள்ளது. தோற்றம் மட்டுமின்றி, உட்புறத்தில் வசதியான இடவசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் உள்ளது. நகரப் பயணங்களுக்கு ஏற்ற சிறிய காராகவும் இது விளங்குகிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.சென்னையில் அடிப்படை மாடலின் ஆன்ரோடு விலை ரூ.5.28 லட்சமாக உள்ளது. தொடுதிரை உள்ளிட்ட வசதிகள் தேர்ந்தெடுக்கும் மாடலைப் பொறுத்து மாறுபடும்.

Maruti Celerio

4. மாருதி சுஸுகி செலெரியோ

தினசரி அலுவலகம் மற்றும் அதிக தூரம் பயணம் செய்பவர்களும் எரிபொருள் செலவைக் குறைக்க நினைப்பவர்களும் மாருதி சுஸுகி செலெரியோ காரை பரிசீலிக்கலாம். ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ கார்களைவிட வேறுபட்ட வடிவமைப்பையும் குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற உட்புற அமைப்பையும் இது வழங்குகிறது. 292 லிட்டர் பொருட்கள் வைக்கும் இடவசதியும் இதில் உள்ளது.

இதில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 எச்பி திறனையும் 91 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இந்த கார் லிட்டருக்கு 24.97 முதல் 26 கி.மீ வரை மைலேஜ் தரும் என்று மாருதி தெரிவிக்கிறது. சென்னையில் அடிப்படை வசதிகள் கொண்ட மாடலின் ஆன்ரோடு விலை ரூ.5.71 லட்சமாக உள்ளது. இந்த காரின் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் மாடலுக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், ரீசேல் மதிப்பும் அதிகமாக உள்ளது.

Tata Tiago

5. டாடா டியாகோ

சிறிய காரில் சற்றே அதிக திறன் கொண்ட எஞ்சினுடன் குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற வசதிகளையும் விரும்புபவர்கள் டாடா டியாகோவை தேர்வு செய்யலாம். இதன் வடிவமைப்பு, உட்புற அமைப்பு ஆகியவை மற்ற சிறிய கார்களிலிருந்து இதனை வேறுபடுத்துகின்றன. பாதுகாப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் மாடலில் உள்ள அம்சங்களையும் சரிபார்க்கலாம்.

இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 86 எச்பி திறனையும் 113 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அடிப்படை மாடலில் கிடைக்கிறது. தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது. சென்னையில் அடிப்படை ஸ்மார்ட் பெட்ரோல் மாடலின் ஆன்ரோடு விலை ரூ.5.55 லட்சமாக உள்ளது.

Compact Cars

எந்தக் காரைத் தேர்வு செய்யலாம்?

மிகக் குறைந்த விலையில் கார் வாங்க நினைப்பவர்கள் எஸ்-பிரெஸ்ஸோ அல்லது ஆல்டோ கே10 மாடல்களைத் தேர்வு செய்யலாம். ஸ்டைலான தோற்றம் விரும்புபவர்களுக்கு ரெனால்ட் க்விட், எரிபொருள் சிக்கனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கும், அதிக ரீசேல் மதிப்பை எதிர்பார்ப்பவர்களுக்கும் செலெரியோ சிறந்த தேர்வாக அமையும். குடும்பப் பயன்பாட்டுடன் அதிக எஞ்சின் திறனும் வேண்டும் என்றால் டாடா டியாகோ காரை தேர்வு செய்யலாம். ஆனால், இந்த 5 மாடல்களில் நச்சுனு ஒரு மாடலை பரிந்துரை செய்யுங்கள் என்றால், மாருதி செலிரியோ அனைத்து விதத்திலும் சிறந்த மாடலாக கூறலாம்.

குறிப்பு: கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு சென்று விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு முடிவு செய்யவும். ஒவ்வொருவரின் விருப்பம் மற்றும் தேவைகளை பொறுத்து இங்கே கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் மாற்றம் இருக்கலாம். மேலும், பல நிறுவனங்கள் பண்டிகை காலத்தையொட்டி சிறப்புச் சலுகைகளையும் வழங்குகின்றன. எனவே, தீர விசாரித்து புக்கிங் செய்து கொள்ளுங்கள்.

Article Published On: Saturday, October 10, 2026, 10:52 [IST]
English summary
Best budget cars below 6 lakh on road price buy festive season india
மேலும்... #maruti suzuki #renault #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X