இந்தியாவின் டாப் - 10 சிஎன்ஜி கார் மாடல்கள் - மைலேஜ், விலை விபரம்

இந்திய கார் சந்தையில் சிஎன்ஜி எரிபொருள் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனையில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி பயணிகள் வாகனங்கள் மட்டும் 25.28 சதவீத பங்கை பெற்றுள்ளன. சிஎன்ஜி, ஹைப்ரிட், எலெக்ட்ரிக் ஆகியவை சேர்ந்து 41.95 சதவீதத்தை எட்டிய நிலையில், பெட்ரோல் மற்றும் பெட்ரோல் எத்தனால் கலப்பு எரிபொருள் கார்களின் பங்கு 40.85 சதவீதமாக இருந்தது.

தற்போது இந்தியாவில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுடன் 26 கார் மாடல்கள் விற்பனையில் உள்ளன. அவற்றில் தினசரி தனிநபர் பயன்பாடு மற்றும் குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற அதிக மைலேஜ் மற்றும் நடைமுறைக்கு சிறந்த சிஎன்ஜி கார்களை இனம் கண்டு, அதில் சிறந்த 10 மாடல்களின் விபரங்களை இங்கே வழங்கி இருக்கிறோம்.

Maruti Celerio

1. மாருதி செலிரியோ

நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த சிஎன்ஜி எரிபொருள் தேர்வு கொண்ட மாடல்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மாடலாக மாருதி செலிரியோ உள்ளது. இந்த காரில் உள்ள 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் - சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் எஞ்சின் 56.6எச்பி பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த மாடல் கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 34.43 கிமீ மைலேஜ் தரும் என கணக்கீடுகளின்படி தெரிவிக்கப்படுகிறது. ரூ.5.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

2. மாருதி வேகன் ஆர்

நாட்டின் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் வகை கார்களில் ஒன்றாக விளங்கும் மாருதி வேகன் ஆர் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. போதுமான இடவசதியுடன் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க வல்லதாக பெயர் பெற்றுள்ளது. இந்த காரின் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் உள்ளது. இந்த கார் கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 34.05 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.5.94 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

Maruti Wagon R

3. மாருதி டிசையர்

நகர்ப்புற பயன்பாடு மட்டுமின்றி நீண்ட தூர பயணங்களும் செல்வோருக்கு ஏற்ற சிறந்த சிஎன்ஜி தேர்வாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது மாருதி டிசையர். இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 70 எச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் கிலோ சிஎன்ஜிக்கு 33.73 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.8.03 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

4. மாருதி ஸ்விஃப்ட்

ஸ்டைலான ஹேட்ச்பேக் கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக கூறலாம். இந்த காரில் இருக்கும் 3 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி எரிபொருள் எஞ்சின் அதிகபட்சமகா 70 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 32.85 கிமீ மைலேஜ் தரும் என மாருதி தெரிவிக்கிறது. ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

5. மாருதி பிரெஸ்ஸா

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி பிரெஸ்ஸா சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா காரில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு வேரியண்ட்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88 எச்பி பவரையும், 121 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.09 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.9.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Maruti Ertiga

6. மாருதி எர்டிகா

பெரிய குடும்பத்திற்கு ஏற்ற அம்சங்களுடன் 7 சீட்டர் மாடலாக விற்பனையில் சக்கைப்போடு போட்டு வரும் மாருதி எர்டிகா கார் சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது. இந்த கார் நடைமுறை பயன்பாட்டுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 88 எச்பி பவரையும், 121 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.11 கிமீ தூரம் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.10.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

7. டாடா பன்ச்

எஸ்யூவி தோரணையுடன் அடக்கமான வகையிலான இந்த மினி எஸ்யூவி காருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.99 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.6.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

8. டாடா நெக்ஸான்

இதர சிஎன்ஜி கார்களைவிட செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் சிறந்த மாடலை தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக முன்னிறுத்திக் கொள்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளில் 17.44 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.9.57 லட்சத்தில் கிடைக்கிறது.

Hyundai Exter

9. ஹூண்டாய் எக்ஸ்டர்

அடக்க வகை எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 4 சிலிண்டர் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 69 எச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 27.1 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

10. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலில் விற்பனையில் கலக்கி வரும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 14 சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சின் அதிகபட்சமாக 88 எச்பி பவரையும், 121 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.6 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.13.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்த பட்டியலில் உள்ள 10 கார்கள் தவிர்த்து, மாருதி பலேனோ, மாருதி ஃபிரான்க்ஸ், மாருதி விக்டோரிஸ், மாருதி க்ராண்ட் விட்டாரா, மாருதி எக்ஸ்எல்6, டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஹூண்டாய் ஆரா, டொயோட்டா க்ளான்ஸா, டொயோட்டா டெய்ஸர், ரூமியான் உள்ளிட்ட மாடல்களும் தேர்வில் கிடைக்கின்றன. இதில், மாருதி பலேனோ மற்றும் டாடா அல்ட்ராஸ் கார்கள் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, September 8, 2026, 12:15 [IST]
English summary
Best cng cars in india personal use mileage engine gearbox price 2026
மேலும்... #maruti suzuki #cng car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X