சிட்டி டிராஃபிக்கில் நின்று நின்று செல்ல இந்த மாதிரி சின்ன சைஸில் கார் வாங்கனும்! குறைந்த விலையில் 7 கார்கள்!

சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் சில கிலோ மீட்டர் பயணத்திற்கே மணிக்கணக்கில் ஆகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் ஆமை போல் மெதுவாகவே ஊர்ந்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் காருக்குள் அதிக நேரத்தை செலவிட வேண்டியதாக உள்ளது. இதன் காரணமாகவே பலரும் குறுகிய உட்புற இடவசதி கொண்ட செடான் (Sedan) ரக கார்களை காட்டிலும், உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக காரை வாங்க விரும்புகின்றனர். அவ்வாறு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் புகுந்து புகுந்து செல்வதற்கு ஏற்ற எஸ்யூவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாய் நிறுவனத்தின் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட காரான வென்யூ ஆனது காம்பாக்ட்டான அளவு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் என இரண்டும் கலந்த கலவையாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் வென்யூவில் லெவல்-2 அடாஸ் (Level-2 ADAS), வெண்டிலேட்டட் இருக்கைகள், டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் இரு திரைகள் உள்ளிட்டவை பயணத்தை எளிதாக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

best compact cars

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): ரூ.8.25 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பிரெஸ்ஸா ஆனது அதன் காம்பாக்ட்டான உடலமைப்பின் மூலமாக நகர்புறங்களில் ஹேண்ட்லிங் செய்வதற்கு மிகவும் எளிமையான கார் ஆகும். அந்த அளவிற்கு இந்த காரின் செயல்திறனை நம்மால் யூகிக்க முடியும். அதேநேரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் நிறுத்தித் நிறுத்தி ஓட்டிச் சென்றாலும் சிறந்த மைலேஜை வழங்கக்கூடியதாக பிரெஸ்ஸா விளங்குகிறது.

கியா சொனெட் (Kia Sonet): வென்யூ காரை போன்று கொரியன் ஸ்டைல் எஸ்யூவி காரான இது வெண்டிலேட்டட் இருக்கைகள் போன்ற அட்வான்ஸ்டு வசதிகள் மூலம் சவுகரியமான பயணத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. அதேநேரம், சொனெட்டில் மைலேஜும் சிறப்பாக கிடைக்கிறது. குறிப்பாக, டீசல் என்ஜின் உடன் சொனெட்டின் மைலேஜ் அதிகம் ஆகும்.

best compact cars

எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV): வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கார், இந்த எம்ஜி எலெக்ட்ரிக் கார் ஆகும். தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக விளங்கும் இது BaaS ஆப்ஷனில் ரூ.10 லட்சத்திற்கு உள்ளான விலையில் கிடைக்கிறது.

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): மாடர்ன் வசதிகள் கொண்ட லேட்டஸ்ட் ஸ்கோடா காராக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கைலாக் ஆனது அளவில் காம்பாக்ட்டான கார் ஆகும். அதற்கேற்ப ரூ.7.59 லட்சத்தில் இருந்து இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. 1,783மிமீ குறைவான அகலத்தை கொண்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த காரில் பயணிப்பது எளிதாக இருக்கும்.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara): நெரிசல் மிகுந்த சாலைகளில் பயன்படுத்த போகிறீர்கள் என்றாலும், சற்று அளவில் பெரியதான சிட்டி-டிரைவ் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு கிராண்ட் விட்டாரா ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இந்த கார் ஆனது ஹைப்ரீட் (Hybrid) வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஹைப்ரீட் வேரியண்ட்களில், போக்குவரத்து நெரிசலில் நின்று நின்று பயணிப்பதற்கு எலெக்ட்ரிக் மோட்டாரின் பவரை மட்டும் பயன்படுத்த முடியும் என்பதால், அதிக மைலேஜை பெற முடியும்.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இதுவாகும். சிறிய அளவிலான இந்த காரை, சற்று கூடுதல் தொகையில் பவர்ஃபுல்லான 40kWh பேட்டரி உடன் வாங்கினால் ஏறக்குறைய 120 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறுவதுடன், 468கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொலைத்தூர பயணங்களுக்காக கார் வாங்கினாலும், அதனை நாம் அதிகமாக தினந்தோறும் நகர்புறத்திற்குள் ஓட்டுவதற்கே பயன்படுத்துவோம். ஆகையால், அதற்கேற்ப ஒரு காரை தேர்வு செய்வது முக்கியமாகும். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்கள் அனைத்தும் அளவில் சிறியவை ஆகும்; அதிக பயணிகளுடன் குடும்பமாக பயணிப்பதற்கு ஏற்ற காரை விரும்புபவர்கள் அளவில் சற்று பெரியதான மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) காரை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 15, 2026, 14:17 [IST]
English summary
Best compact and features rich cars for city use hyundai venue to tata punch ev
மேலும்... #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+