டீசல் கார்களுக்கு இணையா எதுவும் வர முடியாது! மார்க்கெட்டில் இந்த 6 கார்களுக்கு டிமாண்ட் எப்போதும் குறையாது!

டீசல் கார்கள் (Diesel Cars)-ஐ புதியதாக வாங்குவது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. ஏனெனில், அந்த அளவிற்கு டீசல் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) டீசல் கார்களின் விற்பனையை நிறுத்திய பிறகு சாலைகளில் ஓடும் டீசல் கார்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் சிஇஓ மீண்டும் டீசல் என்ஜின் தொழிற்நுட்பம் பக்கம் எங்களது நிறுவனம் செல்லாது என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால், மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து கொண்டுவந்த மாசு உமிழ்வு விதிமுறைகள் ஆகும். அதுமட்டுமின்றி, மறுப்பக்கம் எலெக்ட்ரிக் கார்களுக்கும் மெல்ல மெல்ல மார்க்கெட் விரிவடைய துவங்கியது. இருப்பினும், தற்போதைய காலக்கட்டத்திலும் விற்பனைக்கும் கிடைக்கும் சிறந்த டீசல் எஸ்யூவி (Diesel SUV) கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

best diesel suv cars in india

மஹிந்திரா தார் (Mahindra Thar): இந்தியாவின் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமான தார், லேடார்-ஃப்ரேம் சேசிஸில் உருவாக்கப்படுகிறது. ஃபார்ச்சூனரை போல இதுவும் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இந்த வாகனத்தில் வழங்கப்படும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் ஆனது இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

கியா சிரோஸ் (Kia Syros): 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்கள் உடன் ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிரோஸ் ஆனது பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

best diesel suv cars in india

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இந்தியர்கள் மிகவும் விரும்பக்கூடிய எஸ்யூவி காராக விளங்கும் ஃபார்ச்சூனர் இன்னமும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. சாலையில் இயங்கும் தனித்துவமான திறனுக்காக பாராட்டப்படும் ஃபார்ச்சூனர் ஆனது 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இந்த காரில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது மைல்ட்-ஹைப்ரிட் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

கியா சொனெட் (Kia Sonet): இந்தியாவில் குறைந்த விலையில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் மிகவும் சில கார்களுள் சொனெட் ஒன்றாகும். 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காரில் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபின் வழங்கப்படுகிறது. இந்த கியா காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது மேனுவல், ஆட்டோமேட்டட் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா ஹாரியர் (Tata Harrier): ஃபார்ச்சூனரை போன்று வழக்கமான சாதாரணமான சாலைகள் மற்றும் ஆஃப்-ரோடு சாலைகள் என இரண்டிற்கும் ஏற்ற டீசல் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு ஹாரியர் ஏற்றதாக இருக்கும். அந்த அளவிற்கு, இந்த காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து 205மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இந்த காரில் 2 லிட்டர் டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் (Jeep Compass): ஹேண்ட்லிங் செய்வதற்கு மிகவும் சவுகரியமான டீசல் எஸ்யூவி காராக இதனை சொல்லலாம். இதனால், காம்பஸ் காரை தினசரி பயணங்களுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம். இந்த காரில் 2 லிட்டர் மல்டிஜெட்-2 டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் என்ஜின் கார்கள், சிஎன்ஜி (CNG) கார்கள், ஹைப்ரீட் (Hybrid) கார்களின் அறிமுகங்கள் அதிகரித்தாலும், டீசல் கார்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமின்றி, டீசல் கார்களில் மைலேஜும் அதிகமாக கிடைக்கிறது. அத்தகைய டீசல் கார்களுள் ஒன்றை இன்றைய கால மாடர்ன் எஸ்யூவி உடலமைப்பில் வாங்குவதற்கு, இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார் மாடல்கள் ஏற்றவையாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 21, 2026, 6:22 [IST]
English summary
Best diesel suv cars in india mahindra thar to jeep compass check all details here
மேலும்... #diesel cars #suv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+