அடிமாட்டு விலையில் கார்களை வாங்கியது போதும்! பணக்காரர்களிடம் இதில் ஒரு கார் நிச்சயமாக இருக்கும்!
சொகுசு கார்கள் என்றாலே குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்துவதற்கும், எப்போதாவது தொலைத்தூர பயணங்களுக்காக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கும் தான் அதிகமாக உபயோகிக்கப் படுத்தப்படுகின்றன. ஆனால், விலையுயர்ந்த கார்களிலும் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பயன்படுத்தக்கூடிய கார்கள் உள்ளன. அவ்வாறான விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (Mercedes-Benz G-Class): மிகவும் விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக இது உள்ளது. ஏனெனில், இதில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கான அம்சங்கள் மட்டுமின்றி, சொகுசான பயணங்களுக்கான வசதிகளும் உள்ளன. பெட்டகம் வடிவிலான உடலமைப்பில் உருவாக்கப்படும் இந்த பென்ஸ் வாகனத்தில் தட்டையான பாடி பேனல்கள் பொருத்தப்படுகின்றன.

ஜீப் வ்ராங்க்லர் (Jeep Wrangler): ஆஃப்-ரோடு பயணங்களுக்காகவே உருவாக்கப்படும் எஸ்யூவி வாகனம் இதுவாகும். நம் இந்திய கார் மார்க்கெட்டிற்கு இந்த வாகனத்தின் விலை அதிகமாக உள்ளதால், இதனை விலையுயர்ந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக கருதுகிறோம். வ்ராங்க்லரில் ராக்-ட்ராக் 4-வீல்-டிரைவ் சிஸ்டம், ட்ரூ-லாக் லாக்கிங் டிஃப்ரென்ஷியல், எலெக்ட்ரானிக் ஸ்வே பார் டிஸ்கனெக்ட் உள்ளிட்ட மெக்கானிக்கல் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender): மேற்கூறப்பட்ட ஜி-கிளாஸை போலவே, லக்சரி, அன்றாட பயன்பாடு மற்றும் கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணம் என மூன்றும் கலந்த கலவையாக டிஃபெண்டர் உள்ளது. பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் டிஃபெண்டர் கார்களில் டெர்ரன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம், தானாக தகவமைத்துக் கொள்ளக்கூடிய ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்-அப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser): நீடித்து உழைக்கும் தன்மை, சவுகரியம் மற்றும் அட்வான்ஸான ஆஃப்-ரோடு கருவிகளுக்காக பெயர் பெற்றது லேண்ட் க்ரூஸர் ஆகும். இந்த காரில் பல்வேறு விதமான பாதைகளுக்கு ஏற்ற மோட்கள், க்ரவ்ல் கண்ட்ரோல் மற்றும் வளைவுகளில் திரும்புவதற்கான உதவி சிஸ்டங்களை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Discovery): மேலே கண்ட லேண்ட் க்ரூஸரையும், லேண்ட் ரோவரையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இரண்டுமே முற்றிலும் வேறுப்பட்டவை ஆகும். ரேஞ்ச் ரோவர் கார்கள் உலகளவில் பிரபலமானவைகளாக விளங்கும் நிலையில், அவற்றுள் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆனது வேகமாக இயங்கும் திறனை, அட்வான்ஸான நீடித்து உழைக்கும் 4-வீல்-டிரைவ் திறன்களுடன் கொண்டுள்ளது.
லெக்ஸஸ் எல்.எக்ஸ் (Lexus LX): கார்களை வடிவமைப்பதில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் பாடி-ஆன்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்பட்ட மிகவும் சில மாடர்ன் சொகுசு கார்களுள் ஒன்று இந்த லெக்ஸஸ் கார் ஆகும். வளைக்கப்பட்ட முன்பக்க கிரில், சதுர வடிவிலான வீல் ஆர்ச்கள் மற்றும் நிமிர்ந்த உடலமைப்பு உள்ளிட்டவற்றினால் எல்.எக்ஸ் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.
லேண்ட் ரோவர் டிஸ்கவரி (Land Rover Discovery): லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் கார்களை போலவே, ஆஃப்-ரோடு பயணங்களுக்கு டிஸ்கவரி கார் ஏற்றதாகும். 7 இருக்கைகளை கொண்ட லக்சரியான எஸ்யூவி காரான இதில் டெர்ரன் ரெஸ்பான்ஸ் 2 உள்ளிட்ட அதிநவீன ஆஃப்-ரோடு டெக்னாலஜிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்கள் ஒவ்வொன்றும் கோடி ரூபாய்க்கு மேல் விலையை கொண்டுள்ளன. இருப்பினும், பெரும்பாலான இந்திய பணக்காரர்களிடம் இந்த ஆஃப்-ரோடு கார்கள் உள்ளன. இவை அனைத்துமே செயல்படுதிறன் மற்றும் சொகுசு வசதிகள் மிக்கவை என்பதால் இதில் குறிப்பிட்டு ஒரு காரை தேர்வு செய்வது என்பது சிரமமான காரியமே.


Click it and Unblock the Notifications