பல லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குவதை விட இந்த 5 வாகனங்களில் ஒன்றை வாங்கலாம்! சாலையே இல்லைனாலும் கவலை இல்ல!
இந்தியா போன்ற பல்வேறு விதமான நிலப்பரப்புகளை தன்னுள் கொண்டுள்ள நாட்டில் எப்போதும் ஒரு முறையான ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனத்தை கொண்டிருப்பது பல சமயங்களில் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், மலை பிரதேச பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வழக்கமான கார்களை காட்டிலும் கரடு முரடான பாதைகளிலும் இயங்கக் கூடிய ஆஃப்-ரோடு வாகனங்களே ஏற்றதாக இருக்கும்.
நகர்புறங்களில் வசிப்பவர்களும் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கும், அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்வதற்கும் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் வாகனங்கள் உகந்தவை ஆகும். கூகுள் மேப்ஸ் (Google Maps) காலை வாரினாலும், எந்தவொரு பாதையிலும் இயங்கி, செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை கொண்டு செல்லும் அத்தகைய சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா தார் (Mahindra Thar)
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் இதுவாகும். சாதாரணமான சாலைகளில் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதாக விளங்கும் தார், ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. லேடார்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்படும் இந்த வாகனத்தில் முறையான 4x4 டிரைவ் சிஸ்டத்தை மஹிந்திரா வழங்குகிறது.
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)
மேற்கூறப்பட்ட தார் வாகனத்திற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஜிம்னி ஆனது தாரை காட்டிலும் அளவில் சிறியதாக, எளிதாக ஹேண்ட்லிங் செய்யக்கூடியதாக விளங்குகிறது. இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) சற்று அதிகமாக ரூ.12.32 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. தார் வாகனத்தை போன்று லேடார்-ஃபிரேமில் உருவாக்கப்பட்டாலும், அதனை காட்டிலும் எடை குறைவானதாக ஜிம்னி விளங்குகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் (Toyota Hilux)
ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமாக நாங்கள் பரிந்துரைப்பது இந்த டொயோட்டா பிக்-அப் டிரக் வாகனம் ஆகும். இருப்பினும், அதற்கு ஏற்ப சற்று அதிகமாக ரூ.28.52 லட்சத்தில் இருந்து இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் துவங்குகின்றன. லேடார்-ஃபிரேம் சேசிஸில் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனம் உருவாக்கப்படுகிறது.
எம்ஜி மெஜெஸ்டர் (MG Majestor)
இந்த கார் இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும், எம்ஜி பிராண்டில் இருந்து மிகவும் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மேற்கூறப்பட்ட வாகனங்களை போல் இல்லாமல், கார் மாடலான இது சாதாரணமான சாலைகளில் ஓட்டுவதற்கு எந்த அளவிற்கு ஏற்றதாக உள்ளதோ அதே அளவிற்கு ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டு செல்வதற்கு சரியானது ஆகும். லேடார்-ஃபிரேமில் இல்லாமல், மாடர்ன் கார்களை போன்று பாடி-ஆன்-ஃபிரேமில் மெஜெஸ்டரை எம்ஜி உருவாக்குகிறது.
ஜீப் வ்ராங்க்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon)
அதிக விலையில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி வாகனத்தை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த ஜீப் வாகனம் ஏற்றதாக இருக்கும். அந்த அளவிற்கு ரூ.68.31 லட்சத்தில் இருந்து வ்ராங்க்லர் ரூபிகான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான விலைக்கு ஏற்ப லாக்கிங் டிஃப்ரென்ஷியல், ஹெவி-ட்யூட்டி ஆக்ஸல்ஸ் மற்றும் லோ-ரேஞ்ச் 4x4 டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த வாகனம் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள வாகனங்கள் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியவை கிடையாது; போக்குவரத்து நெரிசல் மிகுந்த அன்றாட நகர்புற பயணங்களுக்கும் பயன்படுத்தக் கூடியவை ஆகும். ஜீப் வ்ராங்க்லர் ரூபிகான் போன்ற வாகனங்கள் நேரில் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். இருப்பினும், குறைந்த விலையில் வாங்குவதற்கு ஏற்ற ஆஃப்-ரோடு வாகனம் எதுவென்று எங்களை கேட்டால், முதலாவதாக பார்த்த மஹிந்திரா தார் ஆகும்.


Click it and Unblock the Notifications








