7 இருக்கைகள் உடன் கார் வாங்குவோரின் முதல் சாய்ஸ்! மாருதிக்கு அடுத்து மஹிந்திரா!

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அந்த அளவிற்கு, 7 இருக்கைகள் உடன் அளவில் பெரியதான கார்களை வாங்கவே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனாலேயே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் 7-சீட்டர் கார் மாடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப 7-சீட்டர் கார்களின் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த 2026 ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 78 ஆயிரத்து 640 யூனிட் 7-சீட்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, 67 ஆயிரத்து 416 7-சீட்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 16.6% அதிகமாகும்.

best selling 7-seater cars

SUV மற்றும் MPV வகை என இரு வகைகளிலும் 7-சீட்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் 7-சீட்டர் கார்களில் கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 111 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 13.9% அதிகமாகும். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் மாருதி சுஸுகி கார் இருந்தாலும், இதற்கடுத்த மூன்று இடங்களில் மஹிந்திராவின் 7-சீட்டர் கார்கள் உள்ளன. அவையாவன, மஹிந்திரா ஸ்கார்பியோ, XUV 7XO மற்றும் பொலேரோ என்பன ஆகும். இவை கடந்த மாதத்தில் முறையே 14097, 9244 மற்றும் 9115 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

best selling 7-seater cars

இதில், இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஸ்கார்பியோ கார்களின் விற்பனை 2025 ஜூன் மாதத்தை விட 10.7% அதிகரித்துள்ள நிலையில், XUV 7XO கார்களின் விற்பனை சுமார் 49.1% அதிகரித்துள்ளது. 4வது இடத்தில் உள்ள பொலேரோ கார்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 21.9% அதிகரித்துள்ளது.

இந்த வரிசையில் 5வது இடத்தில் டொயோட்டா இன்னோவா 7,332 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இது 2025 ஜூனை காட்டிலும் 16.7% அதிகம் எனும் நிலையில், இந்தியாவில் இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என இரு விதமான இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Rank 3-Row Vehicle Model June 2026 June 2025 Diff % Change YoY
1 Maruti Suzuki Ertiga 16,111 14,145 1,966 13.90
2 Mahindra Scorpio 14,097 12,734 1,363 10.70
3 Mahindra XUV 7XO 9,244 6,200 3,044 49.10
4 Mahindra Bolero 9,115 7,477 1,638 21.90
5 Toyota Innova 7,332 8,802 -1,470 -16.70
6 Kia Carens Clavis 4,847 7,920 -3,073 -38.80
7 Mahindra XEV 9S 4,018
8 Maruti Suzuki XL6 2,711 2,011 700 34.80
9 Toyota Fortuner 2,514 2,742 -228 -8.30
10 Toyota Rumion 2,376 1,415 961 67.90
11 Renault Triber 1,871 1,421 450 31.70
12 Nissan Gravite 1,839
13 Tata Safari 1,271 922 349 37.90
14 MG Majestor 587
15 Hyundai Alcazar 304 1,174 -870 -74.10
16 Toyota Vellfire 140 156 -16 -10.30
17 Skoda Kodiaq 106 130 -24 -18.50
18 Jeep Meridian 84 107 -23 -21.50
19 Volkswagen Tayron 43
20 Kia Carnival 30 47 -17 -36.20
- Total 78,640 67,416 11,224 16.65

6வது இடத்தை மாடர்ன் கியா காரான கேரன்ஸ் கிளாவிஸ் 4,847 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 38.8% அதிகமாகும். 7வது இடத்தில், எலெக்ட்ரிக் காரான மஹிந்திரா XEV 9S உள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 7-சீட்டர் எலெக்ட்ரிக் காராக விளங்கும் இந்த மஹிந்திரா கார் கடந்த மாதத்தில் 4,018 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

8வது இடத்தை விலையுயர்ந்த மாருதி கார்களுள் ஒன்றான XL6 2,711 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டை விட 34.8% அதிகரித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் 9வது மற்றும் 10வது இடங்களில் டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் மற்றும் ரூமியன் கார்கள் முறையே 2,514 மற்றும் 2,376 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றிற்கு அடுத்தும் இன்னும் 10 7-சீட்டர் கார் மாடல்கள் உள்ளன. அதாவது, இந்தியாவில் மொத்தம் 20 7-சீட்டர் கார் மாடல்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை தான் மேலே பார்த்த 78,640 யூனிட்கள் ஆகும். 7-சீட்டர் கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து பெரியதாகி வருவதால், இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுக் கொண்டே போகிறது.

Article Published On: Friday, July 10, 2026, 23:39 [IST]
English summary
Best selling 7 seater cars of india maruti suzuki ertiga and mahindra scorpio top on list
மேலும்... #car sales #suv car #mpv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out