பெட்ரோல் போட்டு முன்னுக்கு வர முடியலயா? எலெக்ட்ரிக் பவரிலும் ஒடக்கூடிய ஐந்து ஹைப்ரீட் கார்கள்!

ஹைப்ரீட் கார்கள் விற்பனை இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விலையுயர்ந்த கார்களை தான் ஹைப்ரீட் தரத்தில் பலர் வாங்கி வந்த நிலையில், சமீப காலமாக பட்ஜெட் விலையிலும் ஹைப்ரீட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. அவற்றுள் டாப் 5 கார் மாடல்கள் ஒவ்வொன்றும் கடந்த ஏப்ரல் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross): டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார்களுக்கு இந்தியாவில் எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உண்டு. இதனாலேயே ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் இன்னோவா கார்களை விற்பனை செய்யும் முயற்சியாக இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. அதேநேரம், பழைய இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் தொடர்ந்து விற்பனையில் உள்ளது.

best selling hybrid cars

இன்னோவா கார்கள் மொத்தமாக 9,630 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், இன்னோவா ஹைகிராஸ் ஆனது 5,602 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸ் ஆனது பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஹைப்ரீட் ஆப்ஷனில் மட்டும் 4,100 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder): டொயோட்டாவின் மற்றொரு ஹைப்ரீட் காராக ஹைரைடர் விற்பனை செய்யப்படுகிறது. 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட காம்பாக்ட் எஸ்யூவி காரான இது மாருதி சுஸுகியின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஸ்ட்ராங் ஹைப்ரீட் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

best selling hybrid cars

இன்னோவா கார்களுக்கு இணையாக ஹைரைடர் கார்கள் கடந்த மாதத்தில் 9,115 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னோவாவை போன்று ஹைரைடரும் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஹைப்ரீட் ஆப்ஷனில் மொத்தம் 2,657 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து 2025 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைப்ரீட் காரான விக்டோரிஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 701 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஹைப்ரீட் ஆப்ஷன் ஆனது 793 யூனிட்கள் மட்டுமே ஆகும்.

Rank Model April 2026 Sales MoM Growth / Decline (%)
1 Toyota Innova Hycross 4,100 -35.5%
2 Toyota Hyryder 2,657 -16.7%
3 Maruti Suzuki Victoris 793 116.1%
4 Maruti Suzuki Grand Vitara 426 5.4%
5 Maruti Suzuki Invicto 237 24.1%

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara): மேலே கண்ட ஹைரைடர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுஸுகி ஹைப்ரீட் கார், கிராண்ட் விட்டாரா ஆகும். விக்டோரிஸ் அளவிற்கு இல்லையென்றாலும், கிராண்ட் விட்டாரா கடந்த மாதத்தில் 7,718 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஹைப்ரீட் ஆப்ஷனில் 426 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto): இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹைப்ரீட் காரான இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்சன் தான் இன்விக்டோ ஆகும். ஆனால், இன்னோவா ஹைகிராஸ் அளவிற்கு இல்லாமல், கடந்த மாதத்தில் மொத்தம் 237 இன்விக்டோ கார்கள் மட்டுமே ஹைப்ரீட் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள ஐந்து கார் மாடல்களும் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என இரு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் ஹைப்ரீட் ஆப்ஷனில் இந்த கார்கள் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவற்றில் எந்த ஹைப்ரீட் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Tuesday, May 19, 2026, 10:27 [IST]
English summary
Best selling hybrid cars in india toyota innova hycross and hyryder and maruti suzuki victoris
மேலும்... #hybrid car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+