வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கண்ணை மூடிட்டு இதில் ஒரு காரை வாங்குறது நல்லது! பின்னால் வருத்தப்பட தேவையில்ல!
நமது இந்தியா ஓர் பரந்து விரிந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா என்கிற ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு விதமான கால நிலைகளில் பகுதிகள் இருக்கும் நிலையில், அவை ஒவ்வொன்றிற்கும் இடையேயான பயண தூரமும், நேரமும் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியாவில் கார் வாங்குபவர்கள், தொலைத்தூர பயணங்களையும் நினைவில் வைத்து கார் வாங்குவது நல்லது.
தொலைத்தூர பயணங்களுக்கான காரை எவ்வாறு தேர்வு செய்வது என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். இவ்வாறான பயணங்களுக்கான கார்களில் சஸ்பென்ஷன் செட்-அப் (Suspension Set-up) சிறந்த நிலையில் இருப்பதுடன், குறிப்பாக பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு மிகவும் சவுகரியமான சீட் பொசிஷன் (Seat Position) இருத்தல் வேண்டும். அத்தகைய அம்சங்களுடன் இந்தியாவில் கிடைக்கும் சில கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO): மஹிந்திரா நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யூவி காராக விளங்கும் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மூன்று வரிசைகளில் இருக்கைகள் உடன் பயணிகளுக்கு மிகவும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்குகிறது. இதன் சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது பள்ளம் மேடான சாலைகளையும் சிறப்பாக கையாண்டு, நீண்ட தூர பயணங்களின்போது உடல் சோர்வை தவிர்க்கிறது. மிகவும் அகலமாக திறக்கும் இந்த காரின் பின் கதவுகள் வயதானவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
டாடா சியரா (Tata Sierra): டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் அறிமுகமான இது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டதினாலேயே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. மாடர்ன் டாடா எஸ்யூவி காரான புதிய சியரா மிகவும் ரிலாக்ஸான பயணத்தை வழங்கக்கூடிய இருக்கைகளை கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ காரை போன்று மூன்று வரிசைகளில் இருக்கைகளை கொண்டிருக்கும் இந்த காரின் இரண்டாவது வரிசையில் 980மிமீ-இல் லெக்ரூம் வழங்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross): இந்தியாவில் பிரபலமான இன்னோவா காரின் ஹைப்ரீட் வெர்சனான இது, வெறும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளே வழங்கப்படும் என்ஜின் ஒவ்வொரு கால இடைவெளியில் மாற்றப்பட்டாலும், இப்போதும் இந்தியர்கள் பலரது தொலைத்தூர பயணங்களுக்கான ஃபேவரட் காராக இன்னோவா கார்கள் விளங்குகின்றன. அந்த வகையில் இன்னோவா ஹைகிராஸிலும் நன்கு விசாலமான கேபின் இடவசதி கிடைக்கிறது.
எம்ஜி விண்ட்சர் புரோ (MG Windsor Pro): இது தொலைத்தூர பயணங்களுக்கான வழக்கமான டீசல் கார் கிடையாது; எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இருப்பினும், இதனை தொலைத்தூர பயணங்களுக்கு தாராளமாக பயன்படுத்தலாம். 18-இன்ச்சில் நன்கு பெரிய அளவிலான அலாய் சக்கரங்கள் உடன் உருவாக்கப்படும் இந்த காரில் லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்படுவது நீண்ட தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt): இந்திய கார் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு பெரியதாக சோபிக்காமல் போன பிரெஞ்சு-ஸ்டைல் சிட்ரோன் கார் இதுவாகும். இருப்பினும், அடிக்கடி தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு குறைந்த விலையில் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு பசால்ட் ஏற்றதாக இருக்கும். இதில் இரண்டு வரிசைகளில் மட்டுமே இருக்கைகள் வழங்கப்பட்டாலும், பின் இருக்கை வரிசையில் 980மிமீ-இல் அதிகப்படியான லெக்ரூம் இடவசதியை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொலைத்தூர பயணங்களில் வயதானவர்களை காரில் அழைத்து செல்வதுதான் சிரமமான காரியம் ஆகும். ஆதலால், அத்தகையவர்கள் உங்களது வீட்டில் உள்ளார்கள் என்றால், மேற்கூறப்பட்ட ஐந்து கார்களுள் ஒன்றை தேர்வு செய்வது சிறந்தது. இதில் எங்களது பரிந்துரை எதுவென்று கேட்டால், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகும். இன்னோவா க்ரிஸ்டா காரும் விற்பனையில் உள்ளது; ஆனால் அதன் விற்பனை 2027ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








