ரூ.15 லட்சத்திற்குள் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள்... பாரத் என்சிஏபியில் அசத்திய கார்கள் பட்டியல்!

புதிய கார் வாங்கும்போது விலை, மைலேஜ், வசதிகள் ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, தற்போது பாதுகாப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பாரத் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பிறகு, விபத்து நேரத்தில் ஒரு கார் பயணிகளை எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

பாரத் என்சிஏபி சோதனையில் பிரபலமான ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி கார் மாடல்கள் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றுள்ளன. அதில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலை கொண்ட கார்களில் சில முக்கியமான மாடல்களை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறோம். பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இந்த பட்டியல் பயனுள்ளதாக இருக்கும்.

Tata Punch NCAP

1. டாடா பன்ச்

குறைந்த விலையில் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் கிடைக்கும் கார்களில் டாடா பன்ச் எஸ்யூவி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பாரத் என்சிஏபி மதிப்பீட்டில் டாடா பன்ச் கார் பெரியவர்களுக்கு பாதுகாப்பில் அதிகபட்சமான 32 என்ற புள்ளிகளுக்கு 30.58 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கு பாதுகாப்புப் பிரிவில் 49 என்ற அதிகபட்சமான மதிப்பெண்ணிற்கு 45 மதிப்பெண்களையும் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மைக்ரோ எஸ்யூவி என்ற சிறிய வகை பிரிவில் 5 பேர் பயணிக்கும் வசதியை வழங்கும் டாடா பன்ச் காரில் 1.2 லிட்டர் எஞ்சின், சிஎன்ஜி எரிபொருள் தேர்வு வகைகளிலும் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 18.8 கிமீ முதல் 20 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 27 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.5.80 லட்சம் என்பதால், குறைந்த பட்ஜெட்டில் பாதுகாப்பான காரை எதிர்பார்ப்பவர்களுக்கு பன்ச் முக்கியமான தேர்வாக உள்ளது. இருப்பினும், பாரத் என்சிஏபி ரேட்டிங் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டும்.

Also Read

2. டாடா அல்ட்ராஸ்

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் டாடா அல்ட்ராஸ் சிறந்த மாடலாக உள்ளது. பாரத் என்சிஏபி சோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் அதிகபட்சமான 32 புள்ளிகளில் 29.65 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 44.90 மதிப்பெண்களையும் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு வழங்கப்படுகிறது. இதனால் தங்களுடைய பயன்பாட்டுக்கு ஏற்ற எரிபொருள் வகையை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடிகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் 23 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 28 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.6.30 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது. பாரத் என்சிஏபி குறிப்பிட்ட பாதுகாப்பு தர மதிப்பீடு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வகைகளுக்கு பொருந்தும்.

Also Read

3. மாருதி டிசையர்

மாருதி நிறுவனத்தின் பிரபலமான செடான் மாடலான டிசையர், பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் அதிகபட்சமான 32 புள்ளிகளில் 29.46 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 41.57 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட நிலையில் லிட்டருக்கு 24.79 கிமீ வரையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.71 கிமீ வரையிலும் மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 33.73 கிமீ வரை மைலேஜ் தருவதாக சோதனை நிலைகளின்படி தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் ரூ.6.30 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும். அதிக மைலேஜுடன் பாதுகாப்பான காரை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு கவனம் பெறுகிறது. பாரத் என்சிஏபி மதிப்பீடு குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு பொருந்துகிறது.

Also Read

4. மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO கார் 5 ஸ்டார் பாரத் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளில் 29.36 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 43 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி வகை காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸைப் பொறுத்து லிட்டருக்கு 18 முதல் 21 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.7.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மிடுக்கான எஸ்யூவி தோற்றம், பல்வேறு வசதிகள் மற்றும் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவற்றை ஒரே காரில் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கார் முக்கியமான தேர்வாக உள்ளது.

5. ஸ்கோடா கைலாக்

ஸ்கோடா கைலாக் கார் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. பாரத் என்சிஏபி சோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 30.88 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 45 மதிப்பெண்களையும் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

கைலாக் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கு ரூ.7.60 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. சிறிய எஸ்யூவி காரில் நல்ல செயல்திறனுடன் பாதுகாப்பையும் எதிர்பார்ப்பவர்களுக்கு கைலாக் கவனிக்க வேண்டிய மாடலாக உள்ளது.

6. டாடா நெக்ஸான்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி காராக மாறி இருக்கும் டாடா நெக்ஸான், பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. நெக்ஸான் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளில் 29.41 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 43.83 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

நெக்ஸான் காரில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனால் நகரப் பயன்பாடு, நீண்ட தூரப் பயணம் என தங்களுடைய தேவைக்கு ஏற்ற வகையை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடிகிறது. ரூ.7.40 லட்சம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பாரத் என்சிஏபி மதிப்பீடு குறிப்பிட்ட வகைகளுக்கு பொருந்துவதால், கார் வாங்கும் முன்பு அந்த விபரத்தை சரிபார்ப்பது அவசியம்.

7. மாருதி பிரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவி மாடலான பிரெஸ்ஸா கார் பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 30.41 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 43 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

பிரெஸ்ஸா காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வு உள்ளது. பெட்ரோல் மாடல் கியர்பாக்ஸைப் பொறுத்து லிட்டருக்கு 20 முதல் 21 கிமீ வரையிலும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 27 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.7.40 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இந்த காருக்கான பாரத் என்சிஏபி மதிப்பீடு குறிப்பிட்ட சில வகைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது என்பது கவனித்து வாங்க வேண்டும்.

8. ஹூண்டாய் வென்யூ

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியும் பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளில் 31.15 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 44.46 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸைப் பொறுத்து லிட்டருக்கு சுமார் 18 முதல் 21 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

9. ரெனால்ட் டஸ்ட்டர்

இந்திய சந்தைக்கு புதிய தலைமுறை மாடலாக வந்துள்ள ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியும் பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. டஸ்ட்டர் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 30.49 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

புதிய டஸ்ட்டர் காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதிக இடவசதி கொண்ட எஸ்யூவி என்பதால் குடும்பப் பயன்பாட்டை கருத்தில் கொண்டவர்களுக்கும் இது முக்கியமான மாடலாக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.10.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

10. மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO

மூன்று வரிசைகளுடன் ஏழு பேர் பயணிக்கும் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கும் ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் ஒரு 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி 7XO மாடல் உள்ளது. இந்த கார் பாரத் என்சிஏபி சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 30.76 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 44.97 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

எக்ஸ்யூவி 7XO காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏழு பேர் பயணிக்கக்கூடிய மூன்று வரிசை அமைப்பு இருப்பதால் பெரிய குடும்பங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.14 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பாரத் என்சிஏபி சோதனையில் குறிப்பிட்ட வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதால், கார் வாங்கும் முன்பு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு மதிப்பீடு எந்த வகைகளுக்கு பொருந்துகிறது என்பதை சரிபார்ப்பது அவசியம்.

11. கியா சைரோஸ்

கியா சைரோஸ் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் புதிய தலைமுறை வடிவமைப்பு மற்றும் அதிக வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. பாரத் என்சிஏபி சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 30.21 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 44.42 மதிப்பெண்களையும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. சைரோஸ் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.8.42 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

12. டாடா கர்வ்

கூபே வடிவிலான எஸ்யூவி மாடலான டாடா கர்வ், பாரத் என்சிஏபி சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 29.50 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 43.66 மதிப்பெண்களையும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. தற்போதைய கர்வ் சீரிஸ் எக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது. கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. மேனுவல் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

13. ஹோண்டா அமேஸ்

மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் செடான் கார் பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பெரியவர் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளில் 28.33 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 40.81 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற செடான்களில் இதுவும் ஒன்றாகும்.

புதிய அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.7.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கே பாரத் என்சிஏபி மதிப்பீடு பொருந்துவதால், வாங்கும் போது தேர்வு செய்யும் வேரியண்ட் அந்த பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

14. டாடா பன்ச் எலெக்ட்ரிக்

மின்சார கார் வாங்க விரும்புபவர்களுக்கும் ரூ.15 லட்சத்திற்குள் 5 ஸ்டார் பாரத் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற காராக டாடா பன்ச் உள்ளது. 2026ம் ஆண்டு மாடலாக வந்த டாடா பன்ச் மின்சார காரில் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளில் 31.09 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

15. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக்

மின்சார எஸ்யூவி பிரிவில் டாடா நெக்ஸான் எஸ்யூவி பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளில் 29.86 மதிப்பெண்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளில் 44.95 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

கார் வாங்கும்போது இதையும் பாருங்கள்

தற்போது பாரத் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடு என்பது கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், நீங்கள் வாங்கும் குறிப்பிட்ட வேரியண்ட்டிற்கு பாரத் என்சிஏபி மதிப்பீடு பொருந்துகிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். நகரத்தையும், தட்பவெப்ப நிலை மற்றும் இதர காரணங்களால் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் விலை, மைலேஜ் விபரங்களில் மாறுபாடு இருக்கலாம். அருகிலுள்ள சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொண்டு சரியான விபரங்களை கேட்டு வாங்கி முடிவு செய்வது நல்லது.

Article Published On: Friday, September 18, 2026, 11:05 [IST]
English summary
Bharat ncap 5 star rating cars under rs 15 lakh budget list
மேலும்... #maruti suzuki #mahindra #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out