பைக்கை விட குறைவான விலையில் புதிய கார்! உலகையே அண்ணாந்து பார்க்க வைக்க போகும் இந்திய நிறுவனம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Electric Vehicles) 'டிமாண்ட்' நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை உயர்வு போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கூட, அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.
இதில், பிளிங்க் மொபிலிட்டி (Blinq Mobility) நிறுவனமும் ஒன்றாகும். இது ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) பகுதியில் இயங்கி வரும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். தற்போதுதான் பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. ஆனால் பிற்காலத்தில் இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் போட் (Pod) என அழைக்கப்படுகிறது. இந்திய சாலைகளில் இதன் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
இந்த வைரல் வீடியோவை (Viral Video), ரன்டைம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் போட் எலெக்ட்ரிக் கார், அளவில் மிகவும் சிறியதாக உள்ளது. இது மைக்ரோ எலெக்ட்ரிக் கார் வகையை சேர்ந்தது ஆகும். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட டாடா நானோ (Tata Nano) போலவே, இந்த எலெக்ட்ரிக் கார் உள்ளது.

பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் போட் மைக்ரோ எலெக்ட்ரிக் கார் பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. எனினும் இது மைக்ரோ எலெக்ட்ரிக் கார் வகையை சேர்ந்தது என்பதால், இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
அனேகமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆட்டோ ரிக்ஸாக்கள் மற்றும் ஒரு சில பைக்குகளை காட்டிலும், பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் போட் மைக்ரோ எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்த போட் மைக்ரோ எலெக்ட்ரிக் காரில் மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம்தான் அந்த மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டால், பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் காத்து கொண்டிருக்க தேவையில்லை. சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை கழற்றி விட்டு, ஏற்கனவே சார்ஜ் உடன் இருக்கும் பேட்டரியை பொருத்தி கொண்டு பயணத்தை தொடரலாம்.
இதன் மூலம் சார்ஜ் நிரப்புவதற்காக காத்து கொண்டிருக்கும் நேரம் மிச்சமாகும். அத்துடன் இந்த தொழில்நுட்பம், உங்களின் தடையில்லா பயணத்தையும் உறுதி செய்யும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் போட் மைக்ரோ எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்கள்தான், தற்போதைய நிலையில் இந்திய சந்தையின் தேவையாக உள்ளன. எனவே பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் போட் மைக்ரோ எலெக்ட்ரிக் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








