வெறும் 2 லட்ச ரூபாய்க்கு கார்! பைக், ஆட்டோ கம்பெனிகளை இழுத்து மூட போறாங்க! உலகையே மிரள விடும் இந்திய நிறுவனம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களுக்கான (Electric Cars) 'டிமாண்ட்' முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளன.

இந்தியாவை சேர்ந்த டாடா (Tata), மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்கள் உடன், டெஸ்லா (Tesla), பிஒய்டி (BYD), ஹூண்டாய் (Hyundai), கியா (Kia) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது நுழைந்துள்ளன.

Blinq Mobility Car1

மேற்கண்ட பெரிய நிறுவனங்கள் உடன், சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் (Startup Companies), இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைவதற்காக மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதில், ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) நகரை சேர்ந்த பிளிங்க் மொபிலிட்டி (Blinq Mobility) நிறுவனமும் ஒன்றாகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் கூட ஓட்டுவதற்கு மிகவும் எளிதான சிறிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதன் சோதனை ஓட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கின. இது குறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Blinq Mobility EV

இந்த சூழலில், பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் இந்த சிறிய எலெக்ட்ரிக் காரை, 'கார்1' (Car1) என்ற குறியீட்டு பெயரில் அழைத்து வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. RuntimeBRT என்ற டியூப் சேனலில் (YouTube Channel) இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் முதலில் இந்த சிறிய எலெக்ட்ரிக் காரை 'போட்' (Pod) என்ற பெயரில் அழைத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் நிறுவனரான நிகேஷ் பிஷ்த் (Nikesh Bisht) உடன் பேசியபோது, பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் இந்த சிறிய எலெக்ட்ரிக் காரை, 'கார்1' என்ற குறியீட்டு பெயரில் அழைப்பது தெரிய வந்ததாக RuntimeBRT யூடியூப் சேனலில் தோன்றும் யூடியூபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறியீட்டு பெயர் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பொதுவாக வாகன நிறுவனங்கள் ஒரு புதிய வாகனத்தை உருவாக்கும்போது, ஒரு குறியீட்டு பெயரை சூட்டி, அவற்றை அழைக்கும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில், அவற்றுக்கு புதிய பெயர் சூட்டப்படும்.

பொதுவாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஆகும் நேரம்தான், எலெக்ட்ரிக் வாகனங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் 'கார்1' எலெக்ட்ரிக் காரில், அந்த பிரச்சனை இருக்காது என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த எலெக்ட்ரிக் காரில் 'பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பம்' (Battery Swapping Technology) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இருக்கும்பட்சத்தில், சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை கழற்றி விட்டு, ஏற்கனவே முழுமையாக சார்ஜ் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் பேட்டரியை மாட்டி கொண்டு, பயணத்தை தொடரலாம்.

எனவே பேட்டரி சார்ஜ் ஏறும் வரை நீங்கள் காத்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி திறன் மற்றும் வசதிகள் போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் அந்த தகவல்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார்கள்தான் தற்போது இந்தியாவின் தேவையாக உள்ளன. ஏனெனில் இந்தியாவின் பெரு நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் கூட தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. அப்படிப்பட்ட சாலைகளில் பயணம் செய்வதற்கு சிறிய எலெக்ட்ரிக் கார்கள்தான் பொருத்தமாக இருக்கும்.

அத்துடன் அவற்றின் விலை மிகவும் குறைவாக இருந்தால் இன்னும் சிறப்பு. பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரின் விலை, அனேகமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஸாக்களின் விலையை விட மிகவும் குறைவாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

அதாவது 3வீலர் விலையில் 4வீலர். இதன்படி பார்த்தால், இந்த சிறிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 2 - 3.50 லட்ச ரூபாய்க்குள் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. சொல்லப்போனால் இது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதும், விலை குறைவாக இருப்பதும்தான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம். இதேபோல் பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தின் சிறிய எலெக்ட்ரிக் காரும் விற்பனையில் சாதிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 13, 2026, 14:03 [IST]
English summary
Blinq mobilitys first affordable ev car1 to get battery swapping technology
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+