ரூ.29,999 மாதத் தவணையில் BMW கார்... எந்த மாடலுக்கு எவ்வளவு EMI? சலுகைகளின் முழு விபரம்

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய மும்மூர்த்திகள் இடையே கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. இதனை சமாளிக்கும் விதத்தில், பல கார் மாடல்களை வரிசை கட்டி வைத்திருக்கும் இந்த நிறுவனங்கள், ஆஃபர்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை கவர முற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் சேமிப்புச் சலுகைகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் நிபந்தனைகளுடன் அள்ளி வீசி வருகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பெரும்பலான சொகுசு கார்களுக்கு இந்த குறைவான மாதத் தவணை மற்றும் குறைவான வட்டி விகிதம் கொண்ட கடன் திட்டங்கள் மற்றும் சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், ஆரம்ப நிலை மாடல்களுக்கு ரூ.29,999 மாதத் தவணைத்தையும் நிபந்தனைகளுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலமாக வழங்குகிறது.

BMW 2 Series Gran Coupe

1. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் ரூ.45.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான குறிப்பிட்ட கடன் திட்டத்தில் ரூ.29,999 மாதத் தவணையும், 7.49 சதவீத சிறப்பு வட்டியுடன் அதிக ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் வசதியுடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த காருக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான கூடுதல் சேமிப்புச் சலுகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Also Read

2. பிஎம்டபிள்யூ எக்ஸ்1

அதேபோல் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் ஆரம்ப விலை ரூ.50.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கும் ரூ.29,999 என்ற மாதத் தவணை திட்டம் உள்ளது. மேலும் 6.49 சதவீத சிறப்பு வட்டி, சாலை வரியில் 50 சதவீத சேமிப்பு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பராமரிப்பு தொகுப்பு உள்ளிட்டவற்றுடன் ரூ.2 லட்சம் வரையிலான கூடுதல் சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட இந்த இரண்டு மாடல்களுக்கும் அதிக திருப்பிச் செலுத்தும் காலத்துடன் குறைவான மாதத் தவணை திட்டம் உள்ளது.

BMW 3 Series

3. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ்

பிஎம்டபிள்யூவின் சலுகைகள் குறைந்த மாதத் தவணை திட்டங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சில மாடல்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடலுக்கு 4.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கார் ரூ.62.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Also Read

4. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ்

பிஎம்டபிள்யூவின் 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடல் ரூ.76.60 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இந்த காருக்கு 6.49 சதவீத வட்டி விகிதத்துடன், ரூ.80,000 அளவிலான மாதத் தவணை திட்டம் வழங்கப்படுகிறது. நடுத்தர வகை சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் இந்த கார் மிக முக்கிய போட்டியாளராக இருக்கும் நிலையில், இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

BMW X3

5. பிஎம்டபிள்யூ எஸ்யூவி மாடல்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் ரூ.69.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காருக்கு 6.49 சதவீத வட்டி விகிதம், ரூ.2 லட்சத்திற்கு சேமிப்புச் சலுகைகள் உள்ளிட்ட இதர சலுகைகளும் உள்ளன. அதேபோன்று, எக்ஸ்5 எஸ்யூவி கார் ரூ.96.90 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், ரூ.79,999 மாதத் தவணைத் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இந்த காருக்கும் ரூ.2 லட்சம் சேமிப்புச் சலுகைகள் மற்றும் திரும்பி காரை வாங்கிக் கொள்வதற்கான உத்தரவாதம் ஆகியத் திட்டங்களும் உள்ளன. பிஎம்டபிள்யூவின் விலை உயர்ந்த எக்ஸ்7 எஸ்யூவி மாடலை ரூ.1.10 லட்சம் மாதத் தவணையில் வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த காருக்கும் ரூ.2 லட்சம் சேமிப்புச் சலுகைகளுடன் திரும்பி வாங்குவதற்கான உத்தரவாத திட்டமும் உள்ளது.

6. விலை உயர்ந்த மாடல்கள்

மேலும் அதிக விலை கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு செடான் கார் மாடலுக்கு 4.99 சதவீத வட்டி விகிதமும், பிஎம்டபிள்யூ i7 எலெக்ட்ரிக் காருக்கு 3.49 சதவீதம் என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பிஎம்டபிள்யூ i7 கார் ரூ.2.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காருக்கு 3.49 சதவீத வட்டியும், ரூ.3 லட்சத்திற்கான சேமிப்புச் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

BMW 7 Series

நிபந்தனைகளுடன் கூடிய திட்டங்கள்

இதில், ரூ.29,999 என்பது அனைவருக்கும் கிடைக்கும் வழக்கமான கடன் தவணை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சிறப்புக் கடன் திட்டங்கள் சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது. அதிக முன்பணம் செலுத்துவது, நீண்ட கடன் காலத்தைத் தேர்வு செய்வது அல்லது இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வது போன்றவற்றின் மூலமாக மாதத் தவணையை குறைவாக தேர்வு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

குறிப்பு: இந்த சலுகைகள் குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடும் என்றும், இறுதி நிதி ஒப்புதல் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே அருகிலுள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமை அணுகி இந்த கடன் திட்டங்கள் மற்றும் சலுகை விபரங்களை தெரிந்து கொண்டு முடிவு எடுப்பது அவசியமாகிறது.

Article Published On: Saturday, August 22, 2026, 16:37 [IST]
English summary
Bmw car 29999 emi special offers x1 2 series india
மேலும்... #car loan #bmw
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X