பணக்காரர்களின் ஒரே சாய்ஸ் BMW எலெக்ட்ரிக் கார்கள் தான்... எங்கு திரும்பினாலும் சாலையில் பார்க்கலாம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், லக்சரி தரத்திலான எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. இருந்தாலும், அந்த மெதுவான வேகமே கடந்த மாதத்தில் 105.6% ஆக பதிவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மிகவும் சில மட்டுமே உள்ளன. கடந்த மாதத்தில் ஏழு லக்சரி கார் நிறுவனங்களில் இருந்து மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் அதிக எண்ணிக்கையில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனம் என்று பார்த்தால், அது BMW ஆகும்.

நடந்து முடிந்த கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் BMW நிறுவனத்தில் இருந்து மொத்தம் 489 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது கடந்த 2025ஆம் ஆண்டில் BMW விற்பனை செய்த எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 102.1% அதிகமாகும். இதற்கடுத்து 2வது இடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளது.
இந்தியாவில் லக்சரி கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் முதலிடமும், BMW 2வது இடமும் வகித்தாலும், எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் BMW முதலிடமும், மெர்சிடிஸ் 2வது இடமும் வகிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 234 ஆகும்.

இது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 107.1% அதிகம் ஆகும். BMW, மெர்சிடிஸ் என இவை இரண்டும் இல்லாமல் வேறு சில நிறுவனங்களும் கடந்த மாதத்தில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. ஆனால், அவை இந்த இரு நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகள் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் வால்வோ உள்ளது.
கடந்த மாதத்தில் வால்வோ நிறுவனத்தில் இருந்து 36 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மிக குறைவாக தோன்றினாலும், 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 24.1% அதிகமாகும். அப்படியென்றால், அந்த மாதத்தில் வால்வோ எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை எந்த அளவிற்கு குறைவாக பதிவாகி உள்ளது என்று யோசித்து பாருங்கள்.
| Luxury OEM | June 2026 | Diff (vs June 2025) | % Change YoY | % Share Luxury EV |
| BMW | 489 | 247 | 102.07 | 60.82 |
| Mercedes-Benz | 234 | 121 | 107.08 | 29.10 |
| Volvo | 36 | 7 | 24.14 | 4.48 |
| Tesla | 35 | — | — | 4.35 |
| Porsche | 8 | — | — | 1.00 |
| Audi | 1 | -1 | -50.00 | 0.12 |
| Lotus | 1 | -1 | -50.00 | 0.12 |
| Total | 804 | 413 | 105.63 | 100.00 |
இந்த வரிசையில் 4வது இடத்தில் உலகின் மிக பெரும் எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா உள்ளது. ஆனால், இந்தியாவில் கடந்த மாதத்தில் வெறும் 35 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டெஸ்லா விற்பனை செய்துள்ளது. அதாவது, வால்வோவை காட்டிலும் வெறும் ஒரு யூனிட் மட்டுமே குறைவு. 2025 ஜூலை சமயத்தில் இந்தியாவில் டெஸ்லா செயல்பட துவங்கவில்லை.
இவற்றிற்கு அடுத்து ஆச்சிரியப்படுத்தும் விதமாக போர்ஷே 5வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் போர்ஷேவில் இருந்து 8 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் ஆடி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் தலா ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்துள்ளன. ஆனால், இவை இரண்டும் கடந்த 2025 ஜூனில் தலா இரு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஏழு சொகுசு கார் நிறுவனங்களில் இருந்து தான் கடந்த ஜூன் மாதத்தில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இவற்றில் BMW நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், ஒட்டுமொத்தமாக விற்பனையானவற்றில் BMW நிறுவனத்தின் பங்களிப்பு பாதிக்கும் மேல் உள்ளது.


Click it and Unblock the Notifications