BMW கார்களை வாங்க இத்தனை கஸ்டமர்ஸா... ஷோரூமில் நிற்கும் கூட்டம்!

BMW குழுமம் இந்தியாவில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் கார்கள் விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு சுமார் 78% வளர்ச்சியை கண்டுள்ளது. BMW குழுமம் எனும்போது இதில் BMW கார்கள், மினி கார்கள் மற்றும் BMW பைக் & ஸ்கூட்டர்களின் விற்பனை அடங்குகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மனியை சேர்ந்த BMW குழுமம் இந்திய ஆட்டோமொபைல் துறையில் நன்கு வலுவாகவே கால் பதித்துள்ளது. இந்த குழுமத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரிய மார்க்கெட் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த குழுமத்தின்கீழ் BMW, மினி கார் பிராண்ட்கள் உடன் BMW 2-வீலர் பிராண்டும் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து பெட்ரோல்/டீசல் என்ஜின் வாகனங்கள் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

bmw group record break sales

இந்த நிறுவனங்களில் இருந்து மொத்தமாக கடந்த 6 மாதங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்ல வேண்டுமென்றால், நடப்பு 2026ஆம் ஆண்டின் ஜனவரி- ஜூன் வரையிலான ஆறு மாதத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 75 யூனிட் வாகனங்கள் BMW குழுமத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் BMW குழுமத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் 17% அதிகமாகும். எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், ஏற்கனவே கூறியதுபோல் கடந்த 2025ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 78% வளர்ச்சியை விற்பனையில் BMW குழுமம் கண்டுள்ளது.

bmw group record break sales

BMW கார்களில் SUV வகை கார்களின் விற்பனை ஆனது BMW கார்களின் மொத்த விற்பனையில் 60 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது. அதாவது, BMW நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பாதிக்கும் மேல் நிமிர்ந்த தோற்றம் கொண்ட SUV வகை கார்கள் ஆகும்.

இதேபோன்று, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு 4 கார்களிலும் ஒரு எலெக்ட்ரிக் கார் உள்ளதாக BMW நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுப்பக்கம், மினி கார்களின் விற்பனையை பொறுத்தவரையில், இதனைப் பற்றி ஏற்கனவே முந்தைய தொகுப்பு ஒன்றில் பார்த்திருந்தோம். இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மொத்தம் 504 மினி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை காட்டிலும் 70% அதிகமாகும். இதில், மினி கண்ட்ரிமேன் காரின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. மினி கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் காரையும் பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மினி கார்களில் இருக்கும் BMW குழுமத்தின் என்ஜீனியரிங் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடப்பு 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மற்ற கார் நிறுவனங்களை போன்று BMW குழுமமும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, BMW எலெக்ட்ரிக் கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கத் துவங்கியிருப்பதன் காரணமாகவே தனது மற்ற பிராண்ட்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக கொண்டுவர BMW குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்து சொகுசு கார்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனமாக இரண்டாவது இடத்தில் இருக்கும் BMW நிறுவனத்திற்கு விற்பனையில் ஆடி, வால்வோ மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனங்கள் முக்கிய போட்டியாக விளங்குகின்றன. BMW மோட்டார்ராட் 2-வீலர் பிராண்ட் உள்பட தனது அனைத்து பிராண்ட்களிலும் இந்த 2026ஆம் ஆண்டிற்கு உள்ளாக புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய BMW குழுமம் தயாராகி வருகிறது.

Article Published On: Friday, July 10, 2026, 15:59 [IST]
English summary
Bmw group achieved record break sales in first half of 2026 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out