இந்தியா வறுமை நாடுனு இனி சொல்லாதீங்க... 2025இல் பி.எம்.டபிள்யூ ஷோரூம்களுக்கு ஓய்வே இல்ல!!

சவாலான வர்த்தகச் சூழலிலும், பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா (BMW Group India) 2025ஆம் ஆண்டில் தனது மிக உயர்ந்த கார் விற்பனையை மீண்டும் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில், நிறுவனம் 18,001 கார்களை விற்று, இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டை விட 14% உயர்வான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதில் பிஎம்டபிள்யூ கார் பிராண்ட் 17,271 கார்களையும், மினி (MINI) பிராண்ட் 730 கார்களையும் கடந்த 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்துள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் பிஎம்டபிள்யூ க்ரூப் மொத்தமாகவே வெறும் 15,723 கார்களை மட்டுமே விற்றிருந்தது. இதில் 15,014 பிஎம்டபிள்யூ கார்களும், 709 மினி கார்களும் அடங்கும்.

bmw group india registers record-breaking annual sales

கடந்த ஆண்டில் பிஎம்டபிள்யூ லாங் வீல்பேஸ் கார் மாடல்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்தன. அவற்றின் விற்பனை 162% அதிகரித்து 8,608 யூனிட்களை எட்டியது. இந்த லாங் வீல்பேஸ் கார்கள் தான் மொத்த பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனையில் ஏறக்குறைய 50% பங்கைக் கொண்டுள்ளன; இது 2024ஆம் ஆண்டில் 29% ஆக இருந்தது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சுமார் 200% அதிகரித்து, பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டில் இருந்து கடந்த ஆண்டில் 3,753 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ க்ரூப்பின் மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு 2024ஆம் ஆண்டின் 8%-இல் இருந்து 2025இல் 21% ஆக உயர்ந்துள்ளது. இது இந்திய சந்தையில் ஆடம்பர எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் பிஎம்டபிள்யூவின் மிகப்பெரிய சந்தைப் பங்கைக் குறிக்கிறது.

bmw group india registers record-breaking annual sales

இவை இல்லாமல், பிஎம்டபிள்யூ மோட்டராட் (BMW Motorrad) 5,841 இருசக்கர வாகனங்களை விநியோகித்துள்ளது. இதில் மோட்டார்சைக்கிள்கள் தான் அதிகம். கடந்த 2025ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆடம்பர கார்கள் பிரிவின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியை விட பிஎம்டபிள்யூ க்ரூப்பின் வளர்ச்சி விகிதங்கள் அதிகமாக இருந்தன. குறிப்பாக, 2025இன் நான்காவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை 6,023 யூனிட்கள் என சாதனை அளவை எட்டியது.

இது 2024ஆம் ஆண்டின் இதே நான்காம் காலாண்டை விட 17% வளர்ச்சியைக் காட்டுகிறது. 2025ஆம் ஆண்டில், பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா நிறுவனம் தீவிர தயாரிப்புத் தாக்குதலை மேற்கொண்டது. பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் பிராண்டுகளில் 20 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

bmw group india registers record-breaking annual sales

இந்த பல்வகைப்பட்ட அறிமுகத்தில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் (BMW iX1 Long Wheelbase), பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (X3), பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூபே (2-Series Gran Coupe), மினி கன்ட்ரிமேன் ஆல்4 (MINI JCW Countryman All4) மற்றும் மினி கன்வெர்ட்டிபிள் (MINI Convertible) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் (R1300 GS) என்கிற அட்வென்ச்சர் பைக் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்.ஆர் (S1000 RR) போன்ற புதிய மோட்டார்சைக்கிள்களின் வருகையால் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் பிரிவும் வலுப்படுத்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வாடிக்கையாளர்களிடையே வலுவான நற்பெயரையும் பிராண்ட் பிடிப்பையும் கொண்டுள்ள பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியையும், அதிகபட்ச விற்பனையையும் பதிவு செய்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு 3 மாதங்களிலும் பிஎம்டபிள்யூ க்ரூப் நிறுவனங்கள் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. அதேபோல், பிஎம்டபிள்யூ மற்றும் மினி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்திற்கு எதிர்கால நன்மையாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 9, 2026, 5:00 [IST]
English summary
Bmw group india registers record breaking annual sales in 2025 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X