669 கி.மீ ரேஞ்ச், 99 First Edition கார்கள்... BMW i5 LWB இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய i5 Long Wheelbase (LWB) எலெக்ட்ரிக் செடான் காருக்கான புக்கிங்கை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. குறிப்பாக, முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல் பேஸ் கார் 99 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்தியாவில் உற்பத்தி

புதிய பிஎம்டபிள்யூ ஐ5 எல்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் செடான் கார் என்ற பெருமையை இது பெறுகிறது.

BMW i5 LWB

இந்திய சாலைநிலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப காரின் சஸ்பென்ஷன் அமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸும் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்திய சாலைகளில் இருக்கும் வேகத்தடைகள் மற்றும் சீரற்ற சாலைகளை சமாளிக்க இது உதவும்.

Also Read

ரேஞ்ச்

இந்த காரின் மிக முக்கிய அம்சமாக, பிஎம்டபிள்யூ ஐ5 எல்டபிள்யூ காரில் 81.6kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 669 கி.மீ வரை MIDC சோதனை நிலைகளின்படி ரேஞ்ச் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் இது குறிப்பிடத்தக்க ரேஞ்சாக இருக்கும். இதன் எலெக்ட்ரிக் மோட்டார் சுமார் 268எச்பி சக்தியை வழங்குகிறது. 0-100 கி.மீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. எனவே, பின்புற இருக்கை வசதியை மையமாகக் கொண்ட நீளமான செடான் காராக இருந்தாலும் செயல்திறனிலும் இதர பிஎம்டபிள்யூகளை போல சிறப்பானதாக இருக்கும்.

BMW i5 LWB

பின் இருக்கையில் அதிக இடவசதி

புதிய ஐ5 எல்டபிள்யூ காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பின்புற பயணிகளுக்கு கூடுதல் இடவசதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வீல்பேஸ் 3,105மிமீ என்பதும் கவனித்தக்க விஷயம். காரின் மொத்த நீளம் 5,175மிமீ ஆக உள்ளது. இந்த காரின் நீளமான வீல்பேஸ் காரணமாக பின்புற பயணிகளுக்கு அதிக லெக்ரூம் மற்றும் தாராளமான இடவசதி கிடைக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் செடான்களில் பின்புற இருக்கை வசதி முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், பிஎம்டபிள்யூ இந்த மாடலில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

Also Read

99 பேருக்கு மட்டும் First Edition

முதல் கட்டமாக விற்பனை செய்யப்படும் ஐ5 எல்டபிள்யூ ஃபர்ஸ்ட் எடிசன் மாடலில் வெறும் 99 கார்களுக்கு மட்டுமே புக்கிங் ஏற்கப்பட உள்ளது. இதில் பின்புற பயணிகளுக்கான பிரத்யேக என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ், டேப்லெட் மற்றும் டேப்லெட் ஹோல்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். மேலும், இதன் முதல் பதிப்பு என்பதற்கான பல்வேறு தனித்துவமான அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும்.

BMW i5 LWB

விலை அறிவிப்பு?

இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல்பேஸ் மாடலுக்கு புக்கிங் தொடங்கிவிட்டாலும், விலை மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிக ரேஞ்ச், பின்புற இருக்கைகளுக்கு அதிக இடவசதி மற்றும் பிரீமியம் வசதிகளுடன் வரும் ஐ5 லாங் வீல்பேஸ் கார் இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் செடான் சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு முக்கியமான புதிய மாடலாக அமைய உள்ளது.

Article Published On: Saturday, August 22, 2026, 11:44 [IST]
English summary
Bmw i5 lwb booking open india 669 km range first edition
மேலும்... #bmw
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X