பணக்காரர்கள் வெறிக்கொண்டு காத்துனு இருக்காங்க... காரின் விலை எவ்வளவாக நிர்ணயித்தாலும் புக்கிங் குவிய போகுது!!
இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ எக்ஸ்3 30 எக்ஸ்டிரைவ் எம் ஸ்போர்ட் புரோ (BMW X3 30 xDrive M Sport Pro) எஸ்யூவி காருக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 30) மதியம் 12:30 மணி முதல் தொடங்கப்படுகிறது. கார் வருகிற பிப்ரவரி மாதத்தில் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த புக்கிங் துவங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைனில் நேரடியாகவோ முன்பதிவு செய்யலாம். சென்னை பிஎம்டபிள்யூ குழும ஆலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள இந்த அதிநவீன எஸ்யூவி கார் வருகிற பிப்ரவரி 16 அன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 30 எக்ஸ்டிரைவ் எம் ஸ்போர்ட் புரோ ஆனது தற்போதுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் மாடல்களை விட அதிக செயல்திறனுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எக்ஸ்3 வேரியண்ட், மிட்-சைஸ் சொகுசு எஸ்யூவி கார்கள் பிரிவில் பிரீமியம் தேர்வாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த எஸ்யூவி கார், M-ஸ்போர்ட் புரோ பேக்கேஜ் உடன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் கூர்மையான தோற்றத்தையும், சாலைகளில் ஒரு தனித்துவமான பழைமையையும் காரின் முன்பக்கத்தில் உள்ள பளபளப்பான 'கிட்னி' வடிவ கிரில் அமைப்பு அதிகரிக்கிறது. இது நவீன ஸ்டைலிங் ஹைலைட்களை ஒருங்கிணைத்து, புத்துணர்ச்சியூட்டும் அழகியலை வழங்குகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 30 எக்ஸ்டிரைவ் எம் ஸ்போர்ட் புரோ கார், குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் சிஸ்டத்துடன் வருகிறது. இது முந்தைய மாடலை விட கணிசமாக அதிக ஆற்றல் மற்றும் டார்க் திறனை வழங்குகிறது. இது அற்புதமான ஆக்ஸலரேஷனையும், வசீகரிக்கும் செயல்திறனையும் உறுதி செய்கிறது.
சர்வதேச சந்தைகளில், புதிய 30 எக்ஸ்டிரைவ் வேரியண்ட் ஆனது அதிகப்பட்சமாக 255 பிஎச்பி முதல் 258 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளியிடக்கூடிய 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, கூடுதலாக 11 எச்பி ஆற்றலையும், 25 என்.எம் டார்க் திறனையும் சேர்க்கிறது.
இந்த என்ஜின், 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்டிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் அனைத்து சக்கரங்களுக்கும் ஆற்றலை அனுப்புகிறது. இதன் மூலம், மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டும் திறனை இந்த புதிய கார் பெற்றுள்ளது.
சிறந்த வடிவமைப்பு, வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையாக, இது அதன் பிரிவில் ஒரு புதிய தரத்தை அமைக்கிறது. இது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்கள் https://www.bmw.in என்ற இணையதளத்திற்குச் சென்று புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 30 எக்ஸ்டிரைவ் எம் ஸ்போர்ட் புரோ காரை முன்பதிவு செய்வதுடன் அதன் சிறப்பம்சங்களையும் பார்வையிடலாம். அத்துடன், ஒரு டெஸ்ட்-டிரைவ் (Test Drive) அட்டவணையை அமைத்து, இந்த எஸ்யூவியின் தனித்துவமான டிரைவிங் (Driving) அனுபவத்தை ஓட்டிப் பார்த்து பெறவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








