பிஎஸ்-7 மாசுக்கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்? கார் விலை கணிசமாக உயரும்?

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், அடுத்த தலைமுறை மாசுக்கட்டுப்பாடு விதிகளான பாரத் ஸ்டேஜ் 7 (BS-VII) குறித்த முன்மொழிவுகள் கவனம் பெற்றுள்ளன. இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் கார் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 (BS-VI) மாசுக்கட்டுப்பாடு விதிகள் நடைமுறையில் உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்தன. அப்போது வாகன உற்பத்தியாளர்கள் தங்களது பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்தனர். தற்போது அடுத்த கட்டமாக, வாகனங்களின் மாசு உமிழ்வை மேலும் குறைப்பதற்கான புதிய விதிமுறைகள் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதன்படி, பிஎஸ் 7 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கையில் எடுத்துள்ளது.

Vehicle Pollution
Photo Credit:

பிரேக், டயர்களால் மாசு

புதிய பிஎஸ்-7 விதிகளின் முக்கிய அம்சம், எஞ்சினிலிருந்து வெளியேறும் புகையை மட்டுமே கண்காணிக்காமல், வாகனத்தின் பிற பாகங்களால் ஏற்படும் மாசு விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். குறிப்பாக, பிரேக் பிடிக்கும்போது பிரேக் பாகங்கள் தேய்வதாலும், சாலையில் டயர்கள் உராய்வதாலும் உருவாகும் நுண்ணிய துகள்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

Also Read

மின்சார கார்களின் பேட்டரிக்கும் புதிய விதிகள்

மின்சார கார்கள் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்களின் பேட்டரி செயல்திறனுக்கும் புதிய விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, பேட்டரியின் ஆரம்ப சார்ஜ் நிற்கும் திறன் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்க வேண்டும். மேலும், வாகனங்கள் உண்மையான சாலைச் சூழலில் இயங்கும்போது வெளியாகும் மாசு உமிழ்வை கண்காணிக்கவும், எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றல் பயன்பாட்டுத் தகவல்களைப் பதிவு செய்யவும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Also Read

மூன்று கட்டங்களாக அமலாக்கம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வரைவு முன்மொழிவின்படி, புதிய விதிகள் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டம் 2029 ஏப்ரல் 1 முதல் பயணிகள் கார்களுக்கும், அடுத்த கட்டமாக 2031 மற்றும் 2035ம் ஆண்டுகளில் கூடுதல் கட்டுப்பாடுகளுடனும் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. வணிக வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் தனியான கால அட்டவணையும் முன்மொழியப்பட்டுள்ளது.

கார் விலை உயருமா?

புதிய தொழில்நுட்பங்கள், சென்சார்கள் மற்றும் மாசுக் கண்காணிப்பு அமைப்புகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், கார் தயாரிப்பு நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக, வருநம் 2029ம் ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் புதிய கார்களின் விலை கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: TOI

Article Published On: Thursday, October 15, 2026, 16:03 [IST]
English summary
Bs7 emission norms proposal india 2029 car price may increase considerably
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out