இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார்கள் இவை தான்

பட்ஜெட் விலையில் குடும்பமாக பயணிக்க ஒரு கார் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் ஐந்து பேருக்கும் மேல் இருப்பதால் ஒரு 7 சீட்டர் காரை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ சரியான இடத்துக்குத் தான் வந்துருக்கீங்க. இந்தியாவில் தற்போது 10 லட்சம் ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும் நான்கு 7 சீட்டர் கார்களை இங்கே நாம் பார்க்கலாம்.

மாருதி எர்டிகா

எம்பிவி வகையைச் சேர்ந்த மாருதி எர்டிகா காரை 10 லட்சம் ரூபாய்க்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. LXi, VXi, ZXi மற்றும் ZXi+ என நான்கு வேரியன்ட்களாக இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் LXi மற்றும் VXi ஆகிய இரண்டு வேரியன்ட்களை மட்டுமே 10 லட்சம் ரூபாய்க்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்க முடியும்.

Maruti Suzuki Ertiga

ஸ்மார்ட் ஹைபிரிட் பவர்ட்ரெயினுடன் கூடிய அடிப்படையான LXi வேரியன்டானது 8.85 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. அதற்கு அடுத்து இருக்கும் ஸ்மார்ட் ஹைபிரிட் VXi வேரியன்டானது 9.90 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இந்தக் காரில்

இந்த எம்பிவி காரில் 1.5 K சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை, மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் சேர்த்துக் கொடுத்து வருகிறது மாருதி சுஸூகி. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த இன்ஜினுடன் கொடுக்கப்படுகின்றன. இதே இன்ஜின் பெட்ரோல் + CNG பவர்ட்ரெயினாவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் CNG-யுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே.

Nissan Gravite

மஹிந்திரா பொலேரோ நியோ

இங்கே நாம் பார்க்கவிருக்கும் நான்கு 7 சீட்டர் கார்களில் இருக்கும் ஒரே எஸ்யூவி இது தான். இதனை 8.85 லட்சம் ரூபாய் முதல் 10.49 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. N4, N8, N10(R), N10 Opt மற்றும் N11 என ஐந்து வேரியன்ட்களாக இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் N10 Opt வேரியன்டைத் தவிரித்து மற்ற வேரியன்ட்கள் 10 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையையே கொண்டுள்ளன.

டீசல் இன்ஜினுடன் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் கார் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இந்த பொலேரோ நியோ தான். இந்தக் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தியுள்ளது மஹிந்திரா. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே கொடுத்துள்ளது மஹிந்திரா. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

ரெனோ டிரைபர்

பட்ஜெட் 7 சீட்டரைப் பற்றிப் பேசும் போது ரெனோவின் சப் 4 மீட்டர் எம்பிவி காரான டிரைபரைப் பற்றி பேசமால் இருக்க முடியுமா. பொறியியல் அதிசயம் என்பார்களே, அதுபோல வெறும் 4 மீட்டர்கள் நீளத்திற்குள் 7 பேர் அமரும் படியான ஒரு காரை எப்படி ரெனோ கொடுத்து வருகிறது என்பது பெரும் அதிசயம் தான். அதுவும் மிகவும் குறைவான விலையில்.

டிரைபர் எம்பிவி காரை 5.81 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில், ஆத்தென்டிக், எவல்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் என நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ரெனோ. இந்தக் காரில் 1.0 லிட்டர், NA பெட்ரோல் இன்ஜினே கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. CNG கிட்டை டீலர்ஷிப்கள் மூலமாக பொருத்திக் கொள்ளலாம்.

நிஸான் கிரைவைட்

மேலே பார்த்த டிரைபரின் தம்பி கிராவைட். டிரைபரை அடிப்படையாகக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு நிஸான் வெளியிட்ட புதிய 7 சீட்டர் எம்பிவி கார் தான் கிராவைட். சீட்டிங் லேஅவுட், மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாமே டிரைபரைப் போலத் தான் கிராவைட்டிலும் இருக்கும். டிரைபரில் இருந்து சில கூடுதல் அம்சங்கள் மற்றும் வேறு டிசைன் வேண்டும் என்றால் கிராவைட்டைப் பார்க்கலாம்.

இந்த மற்றொரு சப் 4 மீட்டர் எம்பிவி காரை 5.73 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நிஸான் விற்பனை செய்து வருகிறது. விசியா, அசென்டா, என்-கனெக்டா, டெக்னா மற்றும் டெக்னா லாஞ்ச் எடிஷன் என ஐந்து வேரியன்ட்களாக இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் மேலே பார்த்த டிரைபரில் இருப்பது போன்று தான். எந்த மாற்றமும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா பொலேரோ நியோ ஆகிய இரண்டு 7 சீட்டர் கார்களும் எக்ஸ்-ஷோரூம் விலையே 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கின்றன. இவற்றின் ஆன்-ரோடு விலை 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக கொஞ்சம் அதிகமாக வரும். ஆனால், டிரைபர் மற்றும் கிராவைட் ஆகிய இரண்டு கார்களையும் 8 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலைக்கே நீங்கள் வாங்கலாம்.

Article Published On: Saturday, June 27, 2026, 14:03 [IST]
English summary
Budget 7 seater cars under rs 10 lakhs on sale in india
மேலும்... #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out