கார் ஏசி சிஸ்டத்தை பற்றி ஒருத்தரும் கண்டுகுறது இல்ல! கொளுத்தும் வெயிலுக்கு இனிமையான கூலிங்கை தரும் 7 கார்கள்!
தமிழ்நாடு முழுக்க கோடை வெயில் (Summer Heat) கொளுத்துகிறது. இந்த சூழலில், காரில் ஏசி (Air Conditioner) வசதி இல்லை என்றால் காருக்குள் அமரவே முடியாது. ஏனெனில், கார்களின் உடலமைப்பானது உலோகங்களால் செய்யப்படுகிறது. இந்திய கோடைக்காலம் ஆனது சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரையில் கூட செல்லக்கூடியது என்பதால், இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் சிறந்த ஏசி வசதிகளை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. அந்த வகையில் சிறந்த ஏசி மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் (Climate Control) சிஸ்டத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): கார்களில் சிறந்த ஏசி வசதியை வழங்குவதில் மாருதி சுஸுகியை அடித்துக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்திய கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறான கார்களை வழங்குவதில் நீண்ட வருடங்களாக செயல்பட்டுவரும் மாருதி சுஸுகி அதன் பலேனோ காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை வரிசைக்கும் ஏசி மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டாடா பன்ச் (Tata Punch): இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எஸ்யூவி காராக விளங்கும் பன்ச் ஆனது 'க்ளைமா டச்' (Clima Touch) என்கிற ஆட்டோமேட்டிக் டெம்ரேச்சர் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் வருகிறது. மேலும், பின் இருக்கை வரிசை பயணிகளுக்கும் என தனியாக ஏசி காற்றுத்துளைகள் மற்றும் குளிர்ச்சியான க்ளோவ்பாக்ஸ் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ள இந்த டாடா மைக்ரோ-எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.64 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தின் விலை குறைவான, காம்பாக்ட் ஹேட்ச்பேக் காரான கிராண்ட் ஐ10 நியோஸ் அதன் பவர்ஃபுல்லான ஏசி சிஸ்டத்திற்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது. இந்த காரின் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை வரிசைக்கும் ஏசி காற்றுத்துளைகள் மற்றும் ஸ்ட்ராங் ப்ளோயர் உள்ளிட்டவை பயணிகள் அனைவருக்கும் சிறந்த கூலிங் சிஸ்டத்தை வழங்குகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): சிறந்த ஏசி சிஸ்டத்துடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மற்றொரு மாருதி சுஸுகி கார் இதுவாகும். இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் ரக காரான ஸ்விஃப்ட்டில் திறன்மிக்க கம்பிரெஸர் (Compressors) உடன் ஏசி சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.78 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டாடா நெக்ஸான் (Tata Nexon): பன்ச்சை போன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரிலும் சிறப்பான ஏசி சிஸ்டத்தை வழங்குகிறது. ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் நெக்ஸானின் விலை குறைவான வேரியண்ட்களில் கூட ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உடன் விரைவான கேபின் கூலிங் வசதி வழங்கப்படுகிறது.
சிட்ரோன் சி3 (Citroen C3): சிட்ரோன் கார்கள் அவற்றின் சிறந்த ரைடிங் தரத்திற்கு பிரபலமாக உள்ள நிலையில், சி3 ஆனது செயல்படுதிறன்மிக்க ஏசி சிஸ்டத்தை கொண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், வெளியில் வெயில் கொளுத்தினாலும், சி3 காருக்கு உள்ளே 14 டிகிரி என்கிற மிகவும் குறைந்த வெப்பநிலையை பெற முடியும். இந்த காரின் விலைகள் வெறும் ரூ.4.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்தியாவில் மிகவும் அண்டர்ரேட்டட் கார் என்று இதனை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு பல்வேறு மாடர்ன் வசதிகளை 10 லட்ச ரூபாய்குள் அமேஸ் வழங்குகிறது. அந்த வகையில், பவர்ஃபுல்லான ஏசி சிஸ்டத்தையும் இந்த ஹோண்டா செடான் கார் வழங்குகிறது. ஹோண்டாவில் இருந்து விற்பனை செய்யப்படும் மிகவும் சில கார் மாடல்களுள் ஒன்றான அமேஸ், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் மிகவும் சில பட்ஜெட்-விலை செடான் கார்களுள் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பெரும்பாலானோர் கார் வாங்கும்போது காரின் மைலேஜ் (Mileage) மற்றும் விலையை தான் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஆனால், அதற்கு இணையாக காரின் ஏசி சிஸ்டத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், உலகின் வெப்பமான நாடுகளுள் ஒன்று இந்தியா ஆகும். பல சமயங்களில் பனிகாலத்தில் கூட காரில் ஏசி வசதி தேவைப்படுகிறது. அதற்கு இந்த 7 கார்களுள் ஒன்றை வாங்குவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








