3 BYD எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் முக்கிய அனுமதி... அதிகம் விற்பனை செய்ய வாய்ப்பு!

இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனத்திற்கு தற்போது முக்கியமான அனுமதி கிடைத்துள்ளது. அந்நிறுவனத்தின் மூன்று எலக்ட்ரிக் கார் மாடல்களுக்கு இந்தியாவில் ஹோமோலோகேஷன் (Homologation) சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்வதில் அந்த நிறுவனத்திற்கு இருந்த முக்கியமான கட்டுப்பாடு நீங்கியுள்ளது.

இதுவரை இறக்குமதி விதிமுறைகளின்படி, இந்திய அங்கீகாரம் பெறாத வெளிநாட்டு சான்றிதழ் அடிப்படையில் ஒரு மாடலுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 2,500 கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். தற்போது பிஒய்டி நிறுவனத்தின் மூன்று மாடல்களுக்கு இந்திய அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அந்த மாடல்களுக்கான இந்த எண்ணிக்கை கட்டுப்பாடு நீங்குகிறது. இதனால் BYD நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

BYD Sea Lion 7 Dynamic Variant

எந்தெந்த கார்களுக்கு அனுமதி?

BYD நிறுவனத்தின் இந்திய வரிசையில் இடம்பெற்றுள்ள நான்கு மாடல்களில் மூன்று கார்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி சங்கத்தின் (ARAI) சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி BYD Atto 3, eMax 7 மற்றும் Sealion 7 ஆகிய மூன்று கார்களும் தற்போது இந்திய ஹோமோலோகேஷன் அனுமதியைப் பெற்றுள்ளன.

இந்நிறுவனத்தின் BYD Seal எலெக்ட்ரிக் செடான் காருக்கு மட்டும் இதுவரை இந்த அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அந்த மாடலுக்கு பழைய இறக்குமதி கட்டுப்பாடு தொடர்ந்து பொருந்தும். மற்ற மூன்று கார்களையும் இனி ஆண்டுக்கு 2,500 என்ற எண்ணிக்கை கட்டுப்பாட்டு இல்லாமல், வரம்பின்றி இறக்குமதி செய்ய முடியும்.

Also Read

BYD Sealion 7 காருக்கு அதிக பலன்

இந்தியாவில் BYD நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கி வரும் கார்களில் Sealion 7 எலெக்ட்ரிக் எஸ்யூவியும் ஒன்றாக உள்ளது. கடந்த 2025 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கார், பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, இந்த காருக்கு இறக்குமதி எண்ணிக்கை கட்டுப்பாடு நீங்குவதால், சிறப்பான விற்பனையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, அதிக வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க விரும்பும் சூழலில், இறக்குமதி எண்ணிக்கை கட்டுப்பாடு காரணமாக காத்திருப்பு காலம் அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது அந்தச் சிக்கல் குறையும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வண்ணங்கள் மற்றும் வேரியண்ட்டுகளை அதிக எண்ணிக்கையில் கொண்டு வருவதற்கும் நிறுவனத்திற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

Also Read

விற்பனை வளர்ச்சி

இந்தியாவில் BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் விற்பனையும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பான FADA வெளியிட்ட தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டில் BYD நிறுவனம் 5,361 எலெக்ட்ரிக் கார்களைப் பதிவு செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3,481 ஆக இருந்தது.

இதன் மூலம் ஓராண்டில் சுமார் 54 சதவீத விற்பனை வளர்ச்சியை BYD பதிவு செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி உள்நாட்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், BYD நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இந்தியாவில் தொழிற்சாலை

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்வதற்காக BYD நிறுவனம் தற்போது உள்ளூர் உற்பத்தி ஆலையை அமைக்கப்போவதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான இந்திய அரசின் கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், உடனடியாக தொழிற்சாலை அமைப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

மேலும், BYD நிறுவனம் தனது பிரீமியம் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து Denza என்ற சொகுசு கார் பிராண்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் Denza D9 எலக்ட்ரிக் எம்பிவி மற்றும் Z9 GT ஆகிய கார்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த கார்களுக்கான இந்திய ஹோமோலோகேஷன் குறித்து நிறுவனம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை.

Via- The Mint

Article Published On: Monday, November 16, 2026, 10:54 [IST]
English summary
Byd atto 3 emax 7 sealion 7 india homologation approval
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out