இந்தியர்களின் புதிய சொப்பன சுந்தரியாக மாறும் டென்ஸா டி9 கார்.. இந்தியாவில் முதல் தரிசனம்!

இந்திய சொகுசு கார் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரீமியம் ரக எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. சொகுசு எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில், தனது வர்த்தகத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும், இந்தியாவில் பிரிமீயம் எலெக்ட்ரிக் கார்களுக்கு இருக்கும் சந்தையை கருத்தில்கொண்டும், டென்ஸா என்ற தனது பிரிமீயம் ரக எலெக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் ஸ்தாபிதம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. முதல்கட்டமாக டென்ஸா பிராண்டில் டி9 மற்றும் இசட்9 ஜிடி ஆகிய இரண்டு மாடல்களை கொண்டு வர இருக்கிறது.

Denza D9

இதில், டி9 என்ற சொகுசு ரக எம்பிவி கார் மாடலானது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, எம்ஜி எம்9, டொயோட்டா வெல்ஃபயர் போன்ற சொகுசு ரக கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். இந்த நிலையில், டி9 சொகுசு எம்பிவி கார் டீலருக்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

வரும் நவம்பர் 13ந் தேதி இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், முதல்முறையாக இந்திய மண்ணில் இந்த காரை காணும் பாக்கியம் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே கிட்டியுள்ளது.

மும்பையில் கன்டெய்னர் லாரியிலிருந்து இறக்கப்படும் டி9 காரின் வீடியோ வெளியாகி இருக்கிறது. சாம்பல் நிற வெளிப்புற வண்ணத்துடன் எந்தவித மறைப்பும் இல்லாமல் இருப்பது காரின் பின்புறத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்புறத்தில் முழு அகலத்திற்கும் நீளமான எல்இடி டெயில் லைட், DENZA எழுத்துகள் மற்றும் D9 பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், பின்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக் விளக்குடன் கூடிய ரூஃப் ஸ்பாய்லர், பெரிய பின்புற கண்ணாடி மற்றும் பம்பரின் கீழ்ப்பகுதியில் குரோம் அலங்காரம் ஆகியவை காணப்படுகின்றன. Denza D9 காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் பிரம்மாண்டமான தோற்றம் முக்கியமானதாக இருக்கிறது. இதனால், மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும் எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடலாக இருக்கும்.

Also Read

இந்த எம்பிவி சுமார் 5,250 மிமீ நீளமும், 1,960 மிமீ அகலமும், 1,920 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 3,110 மிமீ ஆக இருக்கும். ஏழு பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாவது வரிசையில் அமர்பவர்களின் வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்லைடிங் கதவுகள், கேப்டன் இருக்கைகள், கால்களை நீட்டி ஓய்வெடுக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இரண்டாவது வரிசை இருக்கைகளில் ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் பொழுதுபோக்குவதற்கான தனித்துவமான திரைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் எந்தெந்த வசதிகள் இடம்பெறும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Also Read

சர்வதேச சந்தையில் Denza D9 கார் பிளக்-இன் ஹைபிரிட் மற்றும் முழுமையான மின்சார மாடல் என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முழுமையான மின்சார மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கான பேட்டரி மற்றும் மோட்டார் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சர்வதேச மாடலில் 103 kWh பேட்டரி வழங்கப்படுகிறது. முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 313 எச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கி.மீ வரை பயணிக்கலாம் என சோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதிகபட்சமாக 200 kW திறனில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இந்த கார் ஆதரிக்கும்.

இந்தியாவில் எம்ஜி M9, டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்சஸ் LM போன்ற பிரீமியம் எம்பிவி கார்களுக்குப் போட்டியாக அமையும். இந்த கார் விலை ரூ.90 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Monday, November 9, 2026, 8:59 [IST]
English summary
Byd denza d9 mpv spotted india ahead launch november 13
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out