டொயோட்டா வெல்ஃபயரை ஒரு கை பார்க்க வரும் டென்ஸா சொகுசு எம்பிவி EV கார்... அடுத்த மாதமே ஆட்டம் ஆரம்பமாகிறது!!

இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் தனது சொகுசு கார் பிராண்டான Denza-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. வரும் நவம்பர் 13ஆம் தேதி டென்ஸா மின்சார சொகுசு கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தற்போது BYD நிறுவனம் Atto 3, Seal, Sealion 7 உள்ளிட்ட மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதைவிட அதிக விலை கொண்ட சொகுசு கார் சந்தையில் கால்பதிப்பதற்காக Denza பிராண்டை இந்தியாவில் கொண்டு வருகிறது பிஒய்டி நிறுவனம். இதன் மூலம் விலை உயர்ந்த மின்சார கார்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் குறிவைக்க BYD திட்டமிட்டுள்ளது.

Denza D9

டென்ஸா டி9 எம்பிவி கார்

இந்தியாவில் Denza பிராண்டின் கீழ் முதற்கட்டமாக D9 சொகுசு எம்பிவி (MPV) காரையும் மற்றும் Z9 GT என்ற ஸ்போர்ட்டியான மின்சார காரையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதில், Denza D9 என்பது பெரிய அளவிலான சொகுசு எம்பிவி கார் ஆகும். அதாவது, டொயோட்டா வெல்ஃபயர் உள்ளிட்ட சொகுசு ரக எம்பிவி கார்களுடன் நேரடியாக மோதும். குடும்பத்தினருடன் வசதியாகப் பயணிக்க விரும்புபவர்கள் மட்டுமின்றி, ஓட்டுனரை அமர்த்தி பயணிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் இரண்டாவது வரிசையில் உள்ள கேப்டன் இருக்கைகள் அதிக வசதியை வழங்குகின்றன.

சர்வதேச மாடலில் 103 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார மோட்டார் சுமார் 313 எச்பி திறனையும், 360 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சர்வதேச சோதனை முறையான டபிள்யூஎல்டிபி (WLTP) அடிப்படையில் ஒருமுறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 520 கிமீ வரை பயணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

அடுத்து D9 எம்பிவி காரில் 2+2+3 இருக்கை அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது வரிசை இருக்கைகளில் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி, வெப்பம், குளிர்ச்சியை தரும் வசதிகள் மற்றும் மசாஜ் செய்யும் வசதியையும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ.80 லட்சம் முதல் ரூ.90 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Denza Z9GT

Denza Z9 GT ஸ்போர்ட்ஸ் கார்

அடுத்து Z9 GT என்ற அதிசெயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் டென்ஸா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான செடான் அல்லது எஸ்யூவி வடிவமைப்பிலிருந்து மாறுபட்டு, ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட ஷூட்டிங் பிரேக் (Shooting Brake) வகை காராக இது உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மின்சார மாடலில் 122.5 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் மூன்று மின்சார மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 1,156 எச்பி திறனை வழங்கும். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக நிறுவனம் கூறுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கிமீ என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரில் ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டமும் உள்ளது. இதன் மூலம் குறுகிய இடங்களில் காரை எளிதாகத் திருப்புவது மட்டுமின்றி, சில சூழல்களில் பக்கவாட்டிலும் நகர்த்த முடியும். பல திரைகளைக் கொண்ட டேஷ்போர்டு, ADAS பாதுகாப்பு அம்சங்கள், உயர்தர ஆடியோ சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் இருக்கைகள் போன்ற வசதிகளும் சர்வதேச மாடலில் உள்ளன. Z9 GT காரின் இந்திய விலை ரூ.1.2 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு டென்ஸா கார் நிறுவனம் BYD மற்றும் Mercedes-Benz ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் Mercedes-Benz தனது பங்குகளை விலக்கிக்கொண்ட நிலையில், 2024ஆம் ஆண்டு முதல் டென்ஸா கார் நிறுவனம் முழுமையாக BYD நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்தியாவில் Denza கார்களைத் தனி விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்வது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் நவம்பர் 13ந் தேதி நடைபெற உள்ள அறிமுக நிகழ்ச்சியில் முழுமையானத் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, October 24, 2026, 9:48 [IST]
English summary
Byd denza india launch november 13 d9 z9 gt price range
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out