டெஸ்லாவை மறக்கடிக்கும் டென்ஸா சொகுசு EV கார்கள் வருகை உறுதியானது: டீசரும் வெளியீடு

சீனாவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான BYD, இந்தியாவில் தனது அதிரடியை காட்டும் வகையில் புதிய கார் பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்திய சந்தையில் பல்வேறு மின்சார கார்களை விற்பனை செய்து வரும் BYD நிறுவனம், தனது சொகுசு கார் பிராண்டான டென்ஸாவை (DENZA) இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசரை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

BYD India மற்றும் Denza India-வின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரில் 'Denza - Arriving Soon'என்ற வாசகத்துடன் வருகை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், அறிமுக தேதி மற்றும் கார்களின் விபரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Denza D9

இந்தியாவில் BYD விற்பனை செய்து வரும் Atto 3, Seal, Sealion 7 போன்ற கார்களைக் காட்டிலும் டென்ஸா பிராண்டில் வரும் கார்கள் விலை உயர்ந்ததாக பிரிமீயம் ரகத்தில் இருக்கும். இந்தியாவுக்கு டென்ஸா பிராண்டின் கீழ் Z9 GT மற்றும் D9 ஆகிய இரண்டு மாடல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Z9 GT மிகவும் ஸ்டைலான தோற்றம் கொண்ட உயர் செயல்திறன் கொண்ட சொகுசு மின்சார காராகும். இந்த காரில் 122.5kWh பேட்டரி மற்றும் மூன்று மின்மோட்டார்கள் இடம்பெறுகின்றன.

Also Read

மூன்று மோட்டார்களின் உதவியுடன் Z9 GT அதிகபட்சமாக 1,156hp சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த உயர்வகை கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. சர்வதேச சந்தையில் இதன் WLTP ரேஞ்ச் 600 கிமீ என தெரிவிக்கப்படுகிறது.

Denza GT9

இந்தியாவில் Z9 GT அறிமுகமானால், ரூ.1.2 கோடி முதல் ரூ.1.5 கோடி விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பிரீமியம் மின்சார கார் சந்தையில் டென்ஸா புதிய போட்டியாளராக உருவெடுக்கும்.

அந்நிறுவனத்தின் மற்றொரு முக்கிய மாடலாக எதிர்பார்க்கப்படும் D9 சொகுசு எம்பிவி ரக மின்சார காரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்ப்பதற்கு டொயோட்டா வெல்ஃபயர், எம்ஜி எம்9 கார்களை நினைவூட்டும் இந்த கார் நிச்சயம் இந்திய பணக்கார வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Also Read

இந்த புதிய மின்சார சொகுசு எம்பிவி காரில் 103kWh பேட்டரி, 313hp சக்தி மற்றும் 360Nm டார்க் வழங்கும் மின்மோட்டார் இடம்பெறுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிமீ வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. விசாலமான கேபின், பிரீமியம் பின்புற இருக்கைகள் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.

ஆரம்பத்தில் Denza கார்களை முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என தெரிகிறது. பின்னர், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனைக்கு வரலாம். தற்போது வெளியாகியுள்ள டீசரில் Arriving Soon என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், எந்த மாடல் முதலில் அறிமுகமாகும், விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களை BYD விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் BYD நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் தொழில்நுட்பத்தில் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே, அதன் சொகுசு கார் பிராண்டான டென்ஸாவின் வருகையும் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிக சந்தைப்போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியர்களுக்கு தரமான தயாரிப்புகள் சரியான விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உருவாகும் என நம்பலாம்.

Article Published On: Friday, October 2, 2026, 13:37 [IST]
English summary
Byd denza luxury ev brand india entry confirmed teaser released
மேலும்... #electric car #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out