1,036 கிமீ ரேஞ்சு, வெறும் 5 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங் அம்சங்களுடன் வெளியானது புதிய எலெக்ட்ரிக் கார்!

எலக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு பெரிய மனத்தடையை ஏற்படுத்துவது அதன் சார்ஜிங் நேரம் தான். வீட்டிலேயே சார்ஜ் செய்ய முடியும் என்றாலும், மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் நமது மனது யோசிக்கும் போது அதன் சார்ஜிங் நேரம் பெரிய தடையாக இருக்கிறது. இப்படி யோசியுங்கள், காலை அலுவலகம் செல்ல காரின் உள்ளே அமர்கிறீர்கள். காரின் பேட்டரி 5% மட்டுமே சார்ஜ் இருப்பதாகக் காட்டுகிறது. இப்போது என்ன செய்ய முடியும்?

குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது சார்ஜ் செய்து விட்டு பின்னர் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வேறு வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். எரிபொருள் கார்களில் அந்தப் பிரச்சினை இல்லை. பெட்ரோல் நிலையத்தில் நுழைகிறோம், ஐந்து நிமிடங்களில் எரிபொருள் நிரப்புகிறோம், எந்தப் பிரச்சினையும் இன்றி காரை ஓட்டிச் செல்கிறோம். இதே போல் எலெக்ட்ரிக் கார்களும் இருந்தால் எப்படி இருக்கும்?

Denza Z9GT

உண்மையிலேயே அப்படி ஐந்து நிமிடங்களில் சார்ஜ் ஆகக்கூடி எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD. ஆனால் இந்தியாவில் இல்லை, ஐரோப்பாவில். BYD நிறுவனம் பல்வேறு பிராண்டுகளில் கீழ் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் டென்ஸா என்ற பிராண்டின் கீழ் புதிதாத Z9GT என்ற எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு சீனாவிலும், அதனைத் தொடர்ந்து இப்போது ஐரோப்பாவிலும் இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் 122.49 kWh பேட்டரி பேக் மற்றும், மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட பவர்ட்ரெயின் செட்டப்பைக் கொடுத்துள்ளது அந்நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பானது 1,140 hp பவர் மற்றும் 1,210 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

Denza Z9GT EV

இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரிய பேட்டரி பேக்கை 10% முதல் 70% வரை வெறும் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும், இதனை 10% முதல் 97% வரை வெறும் 9 நிமிடங்களிலும், -30 டிகிரி குளிரில் கூட 20% முதல் 97% வரை 12 நிமிடங்களிலும் சார்ஜ் செய்து விட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனையெல்லாம் கடந்து இதன் ரேஞ்சு தான் மலைக்க வைப்பதாக இருக்கிறது. சிங்கிள் சார்ஜில் சுமார் 1,036 கிமீ வரை பயணம் செய்ய முடிகிற வகையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது புதிய டென்ஸா Z9GT எலெக்ட்ரிக் கார். இந்தக் காரில் பிளேடு பேட்டரி 2.0 மற்றும் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறது BYD.

இந்த மேம்பட்ட அம்சங்களுடன் ஐரோப்பாவில் இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.1.27 கோடி என்ற எவிலையில் வெளியாகியுள்ளது இந்த அதிக ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் கார். இது சீனாவில் அந்நிறுவனம் விற்பனை செய்வதை விட மூன்று மடங்கு கூடுதல் விலையாகும். சீனாவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்கள் மீது ஐரோப்பாவில் அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதும் இந்த அதிக விலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

சீனாவில் இதே டென்ஸா Z9GT எலக்ட்ரிக் காரை இந்திய மதிப்பிற்கு ரூ.36.58 லட்சம் என்ற விலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்தக் காரை BYD விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. எனினும் இதே தொழில்நுட்பங்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார் மாடல்களிலும் அந்நிறுவனம் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் கார் இந்தியாவில் இல்லையே என வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு காரில் கொண்டு வரப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம், மொத்த தொழிற்துறையையும் அதே பாதையை நோக்கி நகர வைக்கும். எனவே BYD இந்தத் தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்குக் கொண்டு வரவில்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் இதே அளவிற்கு இல்லையென்றாலும் தற்போதிருப்பதை விட மேம்பட்ட எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் கட்டமைப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.

BYD நிறுவனமும் மேலே கூறியது போல இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களில் இதே போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொடுக்கக்கூடும். விரைவில் அதனை அந்நிறுவனம் செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதனையெல்லாம் குறைவான விலையில் செய்வதே BYD-யின் சிறப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 11, 2026, 23:20 [IST]
English summary
Byd denza z9gt electric car launched with 5 minutes charging technology
மேலும்... #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+