5 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் எஸ்யூவி அறிமுகம்.. மற்ற வசதிகளும் மிரட்டி விட்டாங்க

இப்போதைய நிலையில் உலகளவில் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது சீனாவைச் சேர்ந்த BYD தான். எலெகட்ரிக் கார்களைத் தவிர்த்து வேறு சில விஷயங்களுக்கும் BYD பெயர் பெற்றது. ஜெர்மன் மற்றும் ஜப்பானிய கார்கள் அதன் இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் சிறப்பான கார்களுக்குப் பெயர் போனவை. அது போல ஒரு காரில் கொடுக்கப்படும் தொழில்நுட்பத்திற்கு பெயர் போனதாக BYD-யை சொல்லலாம்.

ஒரு காரில் இதையெல்லாம் கூட செய்ய முடியுமா என மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையிலான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவில் விற்பனை செய்து வரும் தங்களுடைய எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் BYD கொடுத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக யாங்வாங் U9 (Yangwang U9) காரைக் கூறலாம். யாங்வாங் என்பது சீனாவில் BYD-யின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சொகுசு எலெக்ட்ரிக் கார் பிராண்டு.

Fang Cheng Bao Bao 5

இந்த யாங்வாங் U9 காரில் DiSus-X இன்டலிஜன்ட் பாடி கண்ட்ரோல் சிஸ்டம் என்ற மேம்பட்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு வீல்களையும் ஒரே நேரத்தில் காற்றில் தூக்கி ஒரு சிறிய ஜம்ப அடிக்க வைக்கும் அளவிற்கு யாங்வாங் U9 காரின் சஸ்பெஷன் சிஸ்டம் சிறப்பாக இருந்தது. அதனை வைத்து அதிவேகங்களில் பள்ளங்களை ஜம்ப் செய்து கடக்க வைக்கும் வகையில் ஒரு சோதனையை செய்து காட்டி ஆச்சரியப்படுத்தியது BYD.

அதேபோல் யாங்வாங் U8 என்ற காரை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தக் காரால் தண்ணீரில் மிதக்க முடியும். இதன் டயர்களைக் கொண்டு மணிக்கு 3 கிமீ வேகத்தில் தண்ணீரில் காரை முன்னோக்கி நகர்த்தவும் பாதையை மாற்றவும் முடியும். தெரியமால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாலோ அல்லது வேறெதுவும் அசம்பாவிதங்களில் சிக்கிக் கொண்டாலோ பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வசதியினை BYD கொடுத்தது.

Fang Cheng Bao Bao 8

இப்போது அதே போல் வேறு சில கார்களில் இரண்டு புதிய வசதிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம். யாங்வாங்கைப் போலவே ஃபேங் செங் பாவ் (Fang Cheng Bao) என்பது BYD-யின் மற்றொரு துணை பிராண்டாகும். எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ஆஃப்-ரோடு எஸ்யூவிக்களை இந்த பிராண்டின் கீழ் அதிகளவில் BYD வெளியிட்டு வருகிறது.

பாவ் 5 (Bao 5) மற்றும் பாவ் 8 (Bao 8) என இரண்டு ஃபேங் செங் பாவ் கார்களின் ஃபிளாஷ் சார்ஜிங் எடிஷன்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது BYD. பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போலவே அதிவேக சார்ஜிங் வசதியை இந்தப் புதிய எடிஷன்கள் கொண்டுள்ளது. எவ்வளவு அதிகவேகம் என்றால் வெறும் 9 நிமிடங்களில் இவற்றின் பேட்டரியை 97% வரை சார்ஜ் செய்ய முடியுமாம். 5 நிமிடங்களில் 10-70% வரை சார்ஜ் செய்துவிடலாம்.

ஆனால் அனைத்து சார்ஜர்களாலும் இது போன்ற அதிவேக சார்ஜிங்கை செய்ய முடியாது. மாறாக BYD-யின் 1000V DC ஃபாஸ்ட் சார்ஜர்களால் மட்டுமே இவ்வளவு வேகத்தில் மேற்கூறிய எஸ்யூவிக்களின் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும். இதில் நல்ல விஷயம் (நமக்கு இல்லை) என்னவென்றால் 2026ம் ஆண்டின் முடிவிற்குள் சீனாவில் 20,000 1000V ஃபிளாஷ் சார்ஜர்களை அமைக்கவும் BYD திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார்களில் BYD கொடுத்திருக்கும் மற்றொரு அம்சம் DiSus P அல்ட்ரா சஸ்பென்ஷன் தொழில்நுட்பம். எந்த விதமான கடினமான பாதையற்ற பாதைகளிலும் நுழைந்து வெளிவர மேலே குறிப்பிடப்பட்டுள்ள கார் மாடல்களுக்கு இந்த சஸ்பென்ஷன் செட்டப் கைகொடுக்கும். ஜாக்கின் உதவி இல்லாமலேயே நான்கு வீல்களில் ஒன்றை மூன்று நிமிடங்களுக்கு காரால் மேலே தூக்கி வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி அசாதாரண நேரங்களில் மூன்று வீல்களிலேயே டிரைவ் செய்யவும் முடியுமாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை செய்து காட்டி வருகிறது BYD நிறுவனம். இப்போது இது அனைத்து கார்களிலும் சாத்தியம் இல்லை என்றாலும், அனைத்து கார்களிலும் கொடுக்கப்படும் அளவிற்கு தொழில்நுட்பம் மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கியிருக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இது போன்ற புதுமைகளையும் மேம்பாடுகளையும் தங்கள் கார்களில் செய்யுமா?

Article Published On: Thursday, May 14, 2026, 18:10 [IST]
English summary
Byd fang cheng bao bao 5 and bao 8 cars with flash charging tech launched
மேலும்... #byd #cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+