500கிமீ-க்கு சார்ஜே தேவை இல்லைன்றது அருமையான விஷயமா இருக்கே! சீனாக்காரன் சீனாக்காரன் தான்யா!!

பி.ஒய்.டி (BYD) நிறுவனம் தனது பிரபலமான அட்டோ 3 (ATTO 3) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான 'அட்டோ 3 எவோ' (Evo) குறித்த முழு விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. 1 வருடத்திற்கு முன்பே 2025 பிப்ரவரியில் புதிய வெளிப்புறத் தோற்றத்துடன் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டாலும், புதிய அட்டோ 3 காரின் தொழில்நுட்ப அம்சங்கள் அப்போதில் இருந்து ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, புதிய 'எவோ' பெயருடன், பெரிய பேட்டரி, மாற்று டிரைவ் அமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க திறன் மேம்பாடுகளுடன் புதிய அட்டோ 3 விற்பனைக்கு வருகிறது. புதிய அட்டோ 3 எவோ, முன்சக்கர-டிரைவ் (FWD) அமைப்பில் இருந்து பின்சக்கர-டிரைவ் (RWD) இயக்க முறைக்கு மாறியுள்ளது.

byd atto 3 evo

கூடுதலாக, அனைத்து-சக்கர-டிரைவ் (AWD) ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. RWD மாடல் 313 குதிரைத்திறன் மற்றும் 380 என்.எம் டார்க் திறனுடன், 0-100 கி.மீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ ஆகும். அனைத்து-சக்கர-டிரைவ் (AWD) பதிப்பு, அதிகப்பட்சமாக 449 குதிரைத்திறன் மற்றும் 560 என்.எம் டார்க் திறனில் இயங்கக்கூடியது.

இது 0 முதல் மணிக்கு 100 கி.மீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டி, மணிக்கு 200 கி.மீ அதிகபட்ச வேகத்தை அடையும். இதேபோல், புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் மற்றொரு முக்கிய அப்கிரேடாக, பேட்டரித் திறன் 60.5 kWh-இல் இருந்து 74.8 kWh ஆக உயர்ந்துள்ளது. RWD மாடல் WLTP தரத்தில் 510 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது, AWD மாடல் 470 கி.மீ ரேஞ்சுடன் வருகிறது.

byd atto 3 evo

மின் அமைப்பு 400 வோல்ட்டில் இருந்து 800 வோல்ட் ஆக மேம்படுத்தப்பட்டுள்ளதால், உச்சபட்ச சார்ஜிங் திறன் 88kW-இல் இருந்து 220kW ஆக அதிகரித்துள்ளது. பெரிய பேட்டரியாக இருந்தாலும், 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய இப்போது வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே போதும் (முன்பு 30-80% சார்ஜ் செய்ய 29 நிமிடங்கள் எடுத்தது).

3 கிலோவாட்ஸ் வரையிலான மின்சாரத்தை வெளிப்புற சாதனங்களுக்கு வழங்கும் V2L வசதியும் இதில் உள்ளது. இதன் மூலமாக, காரின் மின்சாரத்தின் வாயிலாக குறிப்பிட்ட சில மின்சாதனங்களை இயங்க வைக்கலாம். காரில் எலெக்ட்ரிக் மோட்டார் இடம் மாற்றப்பட்டதால், நான்கு இணைப்புகளுக்குப் பதிலாக ஐந்து இணைப்புகள் கொண்ட பல-இணைப்பு சஸ்பென்ஷன் வடிவமைப்பிற்கு அட்டோ 3 மாறியுள்ளது.

byd atto 3 evo

சிறந்த டிரைவிங் திறனை வழங்குவது மட்டுமின்றி, புதிய சஸ்பென்ஷன் அமைப்பினால் காருக்கு பின்பக்கத்தில் 50 லிட்டர் கூடுதல் பூட் ஸ்பேஸ் (Boot Space) கிடைத்து, மொத்த பூட் ஸ்பேஸ் கொள்ளளவு 490 லிட்டராக உயர்ந்துள்ளது. அத்துடன், முன்பகுதியில் 101 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'ஃபிரங்க்' (சேமிப்புப் பெட்டி) புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், ஸ்டீயரிங் காலத்தில் கியர் செலக்டர் பொருத்தப்பட்டுள்ளது. 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்ட மென்பொருளுடன் வருகின்றன. ஐரோப்பாவில், புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் RWD 'டிசைன்' வேரியண்ட் 44,990 யூரோ விலையிலும், AWD 'எக்ஸலன்ஸ்' வேரியண்ட் 50,990 யூரோ விலையிலும் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பாவில் புதிய பிஒய்டி அட்டோ 3 எவோ காரின் முதல் டெலிவரிகள் வசந்த காலத்தில் (மே மாதத்திற்கு பின்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் பிஒய்டி இந்தியா நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள பிஒய்டி அட்டோ 3 காரின், 49.92 kWh பேட்டரி கொண்ட அடிப்படை டைனமிக் வேரியண்டிற்கு ரூ.24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல், உயர்தர (60.48 kWh) சுப்பீரியர் வேரியண்டிற்கு ரூ.33.99 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 12, 2026, 15:05 [IST]
English summary
Byd has introduced a new variant of the atto 3 electric suv car in the international market
மேலும்... #byd #electric car #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X