இந்த சீன கம்பெனியின் கார் எல்லாம் இனி இப்படித்தான் இருக்கும்! எங்கேயும் நிறுத்தாம 1,200கிமீ-க்கு ஓட்டலாம்!

BYD நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ட்யூயல்-மோட் இண்டெலிஜண்ட் பிளக்-இன் ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பிளக்-இன் ஹைப்ரீட் காரில் இரு விதமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும் இந்த தொழிற்நுட்பம் சுருக்கமாக DM-i பிளக்-இன் ஹைப்ரீட் என அழைக்கப்படுகிறது. BYD உருவாக்கியுள்ள இந்த புதிய தொழிற்நுட்பத்தை பற்றிய சுவாரஸ்யமான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனமான BYD இந்தியாவில் அடுத்தடுத்து புதியதாக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடிய பிளக்-இன் ஹைப்ரீட் கார்களும் இந்திய சந்தைக்கான BYD நிறுவனத்தின் திட்டத்தில் உள்ளன.

byd plug-in hybrid cars

அத்தகைய BYD பிளக்-இன் ஹைப்ரீட் கார்களில் பொருத்துவதற்கான தொழிற்நுட்பமாகவே புதிய DM-i உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான எரிபொருள் என்ஜினுக்கும், எலெக்ட்ரிக் மோட்டாருக்கும் இடையேயான பாலமாக இந்த தொழிற்நுட்பம் இருக்கும் என BYD தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழிற்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட போகும் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் கார், சீல் யு எனவும் BYD தெரிவித்துள்ளது.

இதுதான் இந்தியாவில் BYD நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் காராகவும் இருக்கும். ஏனெனில், BYD எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே இதுவரையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பொதுவாகவே பிளக்-இன் ஹைப்ரீட் கார்களில் ஹைப்ரீட் சிஸ்டம் ஆனது காரின் பெட்ரோல் என்ஜினை சார்ந்தே இருக்கும். ஆனால், BYD புதியதாக உருவாக்கி இருக்கும் DM-i தொழிற்நுட்பம் ஆனது எலெக்ட்ரிக் மோட்டாரை முதலில் அணுகக்கூடியதாக உள்ளது.

byd plug-in hybrid cars

இதனால், இந்த தொழிற்நுட்பத்துடன் உருவாக்கப்படும் BYD பிளக்-இன் ஹைப்ரீட் கார்கள் முதலில் எலெக்ட்ரிக் பவரில் இயங்கக்கூடியதாகவே இருக்கும். பெட்ரோல் என்ஜின் ஒரு ஜெனரேட்டர் ஆகவும், தேவைப்பட்டால் கூடுதல் ஆற்றலை காருக்கு வழங்கக் கூடியதாகவுமே இருக்கும். குறிப்பாக, அதிவேக பயணங்கள் மற்றும் அதிக சுமைகளை சுமந்து செல்லும்போது பெட்ரோல் என்ஜினின் தேவை இருக்கும்.

இதனால், பெட்ரோல் என்ஜின் சாதாரணமானதாக இல்லாமல், நன்கு செயல்திறன்மிக்கதாக வழங்கப்படும். எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் ரேஞ்ச் குறித்த பயம் இருக்கிறது. ஆனால், அது இந்த DM-i தொழிற்நுட்பத்தால் இருக்காது என கூறும் BYD, இந்த தொழிற்நுட்பம் மென்மையாக ஆற்றலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது. DM-i தொழிற்நுட்பத்தின் முக்கியமான சிறப்பம்சமே அதன் ரேஞ்ச் ஆகும்.

பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டால் அதிகப்பட்சமாக சுமார் 1,200 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாமாம். BYD பிளக்-இன் ஹைப்ரீட் கார்களில் 1.5 லிட்டர் ஸியோயுன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: BYD நிறுவனத்தில் இருந்து தற்சமயம் அட்டோ 3, சீல், இமேக்ஸ் 7 மற்றும் சீலயன் 7 என நான்கு விதமான எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு மத்தியில் தனது முதல் பிளக்-இன் ஹைப்ரீட் காரை இந்தியாவில் களமிறக்க BYD தயாராகி வருகிறது.

இதற்காக இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள DM-i பிளக்-இன் ஹைப்ரீட் தொழிற்நுட்பம் இந்தியாவின் ஹைப்ரீட் கார்கள் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது, BYD நிறுவனத்தை பார்த்து மற்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பவரை முதன்மையாக கொண்ட பிளக்-இன் ஹைப்ரீட் கார்களை வருங்காலத்தில் அறிமுகம் செய்யலாம்.

Article Published On: Wednesday, June 10, 2026, 6:19 [IST]
English summary
Byd introduced dual mode intelligent plug in hybrid technology in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out