டெஸ்லாவுக்கு விழுந்த மரண அடி! இனி சீன கம்பெனி தான் இப்ப உலகிலேயே நம்பர் 1!

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்தியது என்றால் அது டெஸ்லா நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த கார் பிரபலமாக இருக்கிறது. டெஸ்லா கார்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் கார்கள் என்றால் பொம்மை கார்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் டெஸ்லா கார்களில் உள்ள தரம் மற்றும் தொழிற்நுட்பத்தை பார்த்த பிறகு உலக அளவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான பார்வை மாறியது இதனால் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சர்வதேச அளவில் அதிகரித்தது. உலக அளவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் தான் மாறியிருந்தது.

இந்நிலையில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்போது புதிய இன்று வெளியாகியுள்ளது. இதன்படி நிறுவனத்தின் எலcக்ட்ரிக் வாகன பிராண்டான பிஒய்டி முந்தி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகில் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக இருந்த டெஸ்லா தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு பிஒய்டி நிறுவனம் அந்த இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BYD Sales 2025

கடந்த 2025-ஆம் ஆண்டு நல்ல காலமாக இல்லை. அந்த ஆண்டில் விற்பனை சரீவை சந்தித்துள்ளது. சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைவாக விற்பனையாகி உள்ளன. 2025ம் ஆண்டு இந்நிறுவனம் இது கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும் போது 9 சதவீதம் குறைவாகும் கடந்த 2023 ஆண்டு விற்பனையை ஒப்பிடும் போது கூட இது குறைவான எண்ணிக்கை தான்.

ஆனால் அதே நேரத்தில் சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை கட்டி காட்டியுள்ளது. 2.25 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டெஸ்லா காரை விட 6.10 லட்சம் பிஒய்டி நிறுவனத்தில் அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. நீ மட்டுமல்லாமல் கடந்த 2024ம் ஆண்டு நடந்த விற்பனையை ஒப்பிடும்போது இதம் விற்பனை அதிகரித்துள்ளது.

BYD Sales 2025

இதை இன்னும் ஆழமாக பார்த்தால் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை கடந்த காலாண்டில் தான் 16 சதவீதம் குறைந்துள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பீட்டில் படி தற்போது டெஸ்லா நிறுவனத்தை விட அந்நிறுவனம் தான் உலகிலேயே அதிக எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக தற்போது மாறியுள்ளது. அதே நேரத்தில் சீனா தான் தற்போது கார் ஏற்றுமதியிலும் சிறப்பாக இருக்கிறது. இது சீனாவில் உள்ள ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியாகும். குறைந்த விலை மற்றும் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் தரும் கார்களை அந்நிறுவனம் பெயர் பெற்றுள்ளது. ஐரோப்பா போன்ற மார்க்கெட்டுகளில் இந்த ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்திற்கு சர்வதேச அளவிலும் சரி உள்ளூர் மார்க்கெட்டிலும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுள்ளது. சீனாவில் சில நிறுவனங்கள் வந்த பிறகு டெஸ்லா மார்க்கெட்டின் சரிவு ஆரம்பமாகியுள்ளது. அதே நேரத்தில் பிஒய்டி நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்நிறுவனம் தங்கள் தயாரிப்புகளில் கொண்டு வந்துள்ள தொழிற்நுட்பம் மற்றும் புதுமைதான் மிக முக்கியமான காரணம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BYD Sales 2025

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் சரிவை சந்தித்து உள்ளதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பலன்களை நிறுத்தி உள்ளதால் நிறுவனத்திற்கு விற்பனை மிகக் குறைவாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தான் காலடி தடத்தை எடுத்து வைத்துள்ளது. தற்போது வரை மிக குறைவான விற்பனையை பெற்று வருகிறது. மாடல் ஒய் என்ற காரை மட்டுமே இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூ 59.9 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாவதால் பெரிய அளவில் இந்த காருக்கு ரெஸ்பான்ஸ் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனமாக மாறிவருகிறது. இந்தியாவில் கூட பிஒய்டி நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இது டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக வளர்ந்து வருகிறது. விரைவில் இந்நிறுவனம் இந்தியாவிலும் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 3, 2026, 11:55 [IST]
English summary
Byd sales 2025 beats tesla global ev sales 225 million
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X