BYD சீ லயன் 7 பிரீமியம் EV காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, அதிக ரேஞ்ச், நவீன தொழில்நுட்பம், சொகுசு வசதிகள் கொண்ட பிரீமியம் மின்சார கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் BYD சீ லயன் 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கடந்த 2025 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட BYD சீ லயன் 7, இதுவரை 5,000 வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே இந்த எண்ணிக்கையை எட்டியிருப்பது, இந்திய சந்தையில் இந்த பிரிமீயம் எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள வரவேற்பை எடுத்துக்காட்டுகிறது.

BYD Sea Lion 7 Dynamic Variant

ரேஞ்ச், செயல்திறன்

BYD சீ லயன் 7 காரின் பிரீமியம் வேரியண்ட்டில் 82.56 kWh பேட்டரி வழங்கப்படுகிறது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 567 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் BYD-யின் பிளேடு பேட்டரி தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் இன்னும் கூடுதல் திறன் கொண்டதாக உள்ளது. இரட்டை மோட்டார் அமைப்புடன் வரும் இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 390 kW பவர் மற்றும் 690 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதனால் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.5 விநாடிகளில் எட்ட முடியும். வேகம் மற்றும் செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது முக்கியமான தேர்வாக இருக்கும்.

புதிய வேரியண்ட்

வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் BYD சீ லயன் 7 காரில் புதிதாக டைனமிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரூ.41.90 லட்சம் அறிமுக எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 71.8 kWh பிளேடு பேட்டரி வழங்கப்பட்டுள்ளதுடன், 520 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீ லயன் 7 மாடல் வரிசையில் குறைந்த விலை தேர்வாக இது அறிமுகமாகியுள்ளது. அதே நேரத்தில், பனோரமிக் கண்ணாடி கூரை மற்றும் 15.6 அங்குல சுழலும் தொடுதிரை உள்ளிட்ட முக்கிய வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாங்க விரும்பும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த வேரியண்ட் அமைந்துள்ளது.\

Also Read

ஸ்பெஷல் எடிஷன்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபரில் BYD சீ லயன் 7 ஃபெஸ்டிவ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரூ.50.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டது. பிரீமியம் வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிறப்புப் பதிப்பு, வெறும் 150 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த எடிஷனில் டான் மற்றும் கருப்பு நிற இன்டீரியர், குயில்டு நப்பா லெதர் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ஷேடு வசதியுடன் கூடிய பனோரமிக் கண்ணாடி கூரை மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. வழக்கமான மாடலை விட கூடுதல் சொகுசு வசதிகளை விரும்புபவர்களுக்கு இது சிறப்பான தேர்வாக இருக்கும்.

Also Read

பாதுகாப்பிலும் சிறப்பு

BYD சீ லயன் 7 விற்பனையில் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் வாகனத் துறை விருதுகளிலும் கவனம் ஈர்த்துள்ளது. யூரோ NCAP பாதுகாப்பு சோதனையில் அதிகபட்சமாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் பல்வேறு வாகன விருது வழங்கும் விழாக்களில் சிறந்த பிரீமியம் எலெக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

இந்தியாவில் BYD நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இந்த சாதனை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 40 நகரங்களில் 49 ஷோரூம்களுடன் செயல்பட்டு வரும் பிஒய்டி நிறுவனம், இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய மாடல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் தனது விற்பனையை மேலும் அதிகரிக்க BYD திட்டமிட்டுள்ளது.

Article Published On: Monday, November 2, 2026, 17:42 [IST]
English summary
Byd sealion 7 crosses 5000 deliveries india
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out