520 கிமீ ரேஞ்ச், ரூ.41.90 லட்சம் விலை... BYD சீ லயன் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!!

இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம், தனது சீ லயன் 7 (Sea Lion 7) எலெக்ட்ரிக் எஸ்யூவியில் டயனமிக் என்ற பெயரில் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.41.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்ற அறிமுக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிமீயம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகள் விற்பனையில் உள்ள நிலையில், டயனமிக் வேரியண்ட் இந்த காரின் விலை குறைவான தேர்வாக வந்துள்ளது.

இந்த புதிய வேரியண்ட்டில் 71.8 kWh பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி NEDC சோதனை சான்றுகளின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கி.மீ வரை பயணிக்கும் திறனை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் செயல்திறனிலும் சிறப்பானதாக இருக்கும். இந்த புதிய வேரியண்ட்டானது 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டும் என பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

BYD Sea Lion 7 Dynamic Variant

இது விலை குறைவான புதிய வேரியண்ட் என்றாலும், சீ லயன் 7 எஸ்யூவியின் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் பிஒய்டி சமரசம் செய்யவில்லை. பிஒய்டி நிறுவனத்தின் e-Platform வெர்ஷன் 3.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் Blade Battery மற்றும் Cell-to-Body தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளன.

Also Read

இதனுடன் டார்க் மேலாண்மை தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு ADAS மற்றும் driver assistance அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் நகரப் பயன்பாடு மட்டுமின்றி நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற பிரீமியம் எலெக்ட்ரிக் கார் மாடலாக இந்த டயனமிக் வேரியண்ட்டை நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை, சீ லயன் 7 குடும்பத்தின் சிறப்பான ஏரோடைனமிக் வடிவமைப்பு சிறப்பானதாக இருக்கிறது. இந்த காரில் அட்லான்டிஸ் க்ரே, காஸ்மோஸ் பிளாக், அரோரா ஒயிட் மற்றும் ஷார்க் க்ரே ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Also Read

இந்த புதிய காரை வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகளையும் பிஒய்டி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வரும் 'Celebrate Your Dreams with BYD' என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் சீ லயன் 7 எஸ்யூவியின் டயனமிக் வேரியண்ட்டை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7kW வீட்டு சார்ஜர் மற்றும் வீட்டில் வந்து நிறுவுவதற்கு கட்டணமில்லா சலுகை வழங்கப்படுகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி திட்டத்திற்கான நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகள் உள்ளன.

கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான பிஒய்டி சீ லயன் 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனையாகி பயன்பாட்டில் உள்ளதாக பிஒய்டி தெரிவித்துள்ளது. இந்த கார் யூரோ என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளதுடன், பல்வேறு ஆட்டோமொபைல் விருதுகளையும் வென்றுள்ளது.

பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாங்க விரும்புவோருக்கு சீ லயன் 7 குடும்பத்தில் தற்போது மூன்று வெவ்வேறு தேர்வுகள் கிடைக்கின்றன. குறிப்பாக, ரூ.41.90 லட்சம் என்ற தொடக்க விலையுடன் வந்திருப்பதால், இதுவரை சீ லயன் 7 எஸ்யூவியை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, August 20, 2026, 20:51 [IST]
English summary
Byd sealion 7 dynamic entry level variant launched india rs 41 90 lakh 520km range
மேலும்... #new launches #electric car #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out