வரும் ஏப்.1 முதல் கடுமையான CAFE-III விதிகள்: பெட்ரோல், டீசல் கார்களுக்கு கிடுக்கிப்பிடி!!

பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும் புதிய கஃபே 3 (CAFE 3 - Corporate Average Fuel Economy Phase III) விதிகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதிலிருந்து 2032 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றும் தயாரிக்கப்படும் அனைத்து புதிய பயணிகள் வாகனங்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். மேலும், கார்களின் சராசரி எரிபொருள் நுகர்வைக் கணிசமாகக் குறைப்பதே இந்த விதிகளின் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.

Toyota Innova Crysta

புதிய விதிகளின்படி, கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வாகன மாடல்களின் சராசரி எரிபொருள் நுகர்வு 16.7 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று இந்த விதியில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2027-28 நிதியாண்டில் 100 கிலோமீட்டருக்கு 3.996 லிட்டராக இருக்கும் வாகனங்களின் எரிபொருள் நுகர்வு அளவு, படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2031-32 நிதியாண்டிற்குள் 100 கிலோமீட்டருக்கு 3.3273 லிட்டராக குறைக்க வேண்டும்.

Also Read

இந்த விதிகள் ஒரு குறிப்பிட்ட காரின் மைலேஜை மட்டும் குறி வைக்காமல், ஒரு நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அனைத்து கார்களின் சராசரி எரிபொருள் பயன்பாட்டைக் கணக்கில் கொண்டு இது கணக்கிடப்படும். இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்பு வரிசையில் அதிக மைலேஜ் தரும் கார்களையும், எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களையும் கட்டாயமாக அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய கஃபே 3 விதிகளில் சூப்பர் கிரெடிட்ஸ் (Super Credits) என்ற சிறப்புச் சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்ச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also Read

அதாவது, ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு எலக்ட்ரிக் கார், அந்நிறுவனத்தின் சராசரி கணக்கீட்டில் 3 கார்களாகக் கருதப்பட்டு, நிறுவனத்தின் ஒட்டுமொத்த உமிழ்வு அளவு கணக்கிடப்படும். பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் எத்தனால் ஹைப்ரிட் கார்களுக்கு இது 2.5 கார்களாக கணக்கிடப்பட உள்ளது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் எரிபொருள் வகைக்கு 1.6 கார்கள் என்ற அளவிலும், ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வகைக்கு 1.1 கார்கள் என் அளவிலும் கணக்கிடப்படும்.

அதேவேளையில், சிறிய பெட்ரோல் கார்களுக்கு (909 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட கார்கள்) தனியாக விலக்கு அல்லது சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து சிறிய மற்றும் பெரிய கார்களுக்கும் எடை அடிப்படையிலான ஒரே மாதிரியான விதிகள் மட்டுமே பொருந்தும்.

எத்தனால் கலந்த E20 பெட்ரோல், சிஎன்ஜி (CNG) மற்றும் பயோ-ஃப்யூல் போன்ற மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்தும் கார்களுக்கு 'கார்பன் நியூட்ராலிட்டி ஃபாக்டர்' (Carbon Neutrality Factor) மூலம் உமிழ்வு கணக்கீட்டில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. E20 பெட்ரோல் கார்களுக்கு 8 சதவீதமும், ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கார்களுக்கு 22.3 சதவீதமும் கார்பன் உமிழ்வு தள்ளுபடி கிடைக்கிறது.

காரின் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைப் பொருத்தும் நிறுவனங்களுக்குச் கூடுதல் பலன்கள் உண்டு. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து 12-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி விளக்குகள், சோலார் பிரதிபலிப்பு பெயிண்ட்டுகள், செம்மையான ஏசி அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுவனங்கள் கிலோமீட்டருக்கு 9 கிராம் வரை கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுச் சலுகையைப் பெற முடியும்.

புதிய சட்டத்தின்படி, நிறுவனங்கள் தங்களது இலக்குகளை 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் கொண்ட இரு பகுதிகளாகப் பூர்த்தி செய்யலாம். இலக்கை விடக் குறைவான உமிழ்வை எட்டும் நிறுவனங்கள் கிரெடிட்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். போதிய இலக்கை எட்டாத நிறுவனங்கள், கூடுதல் கிரெடிட் வைத்துள்ள மற்ற நிறுவனங்களிடம் இருந்து கிரெடிட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளும் முறையும் இதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய கஃபே 3 விதிகளால் வாடிக்கையாளர்களுக்கு விலை உள்ளிட்டவற்றில் நேரடியான நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் மீது கார் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தும்.

இருப்பினும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கடுமையான இலக்குகளை எட்டுவதற்காக, இந்தியச் சந்தையில் அதிக மைலேஜ் தரும் நவீன பெட்ரோல் கார்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியக் கார் வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலத்தில் நவீன மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல புதிய வாகனத் தேர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Article Published On: Thursday, October 1, 2026, 11:20 [IST]
English summary
Cafe 3 norms 2027 ev hybrid flex fuel cars india
மேலும்... #petrol #diesel #e20 #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out