கார் கருப்புப் பெட்டிக்கு புதிய தரநிலையை வெளியிட்டது மத்திய அரசு

விமான விபத்து நடந்தால் என்ன காரணத்தால் விபத்து ஏற்பட்டது என்பதைக் கண்டறிய கருப்புப் பெட்டி உதவுகிறது. இந்த கருவிகள் மிக அதீத வெப்பம், குளிர் உள்ளிட்டவற்றால் பாதிக்ப்படாதவாறு தயாரிக்கப்படுகிறது. இதேபோல், கார்களிலும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கருப்புப் பெட்டியை பொருத்துவதற்கான திட்டம் அரசு வசம் இருக்கிறது. இந்த நிலையில், இந்த கருவி எந்த நிலையிலும் பாதிக்கப்படாதவாறு இருப்பதற்கு ஏதுவாக புதிய தரநிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், ஈவென்ட் டேட்டா ரெக்கார்டர் (Event Data Recorder - EDR) எனப்படும் இந்த கருப்புப் பெட்டி போன்ற கருவியை கார்களில் பொருத்தும்போது, அது AIS-192 என்ற தொழில்நுட்பத் தரநிலைக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Car Black Box

கருவியின் பயன்

விமான விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளில் கருப்புப் பெட்டி மிக முக்கிய சான்றாக அமையும். அதேபோன்று, கார்களிலும் EDR மூலமாக விபத்து தொடர்பான குறிப்பிட்ட தகவல்களைப் பதிவு பெற்று ஆய்வு செய்ய வழிவகுக்கும். ஆனால், விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி கருவியில் விமானிகளின் உரையாடல்களும், தொழில்நுட்பப் பிரச்னை குறித்த விஷயங்களும் பதிவாகி இருக்கும்.

ஆனால், கார்களில் பொருத்தப்பட இருக்கும் EDR கருவி தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களில் ஏதேனும் பிரச்னை இருந்ததா என்பதை மட்டும் பதிவு செய்யும். விபத்து ஏற்படுவதற்கு முன்பு கார் எவ்வளவு வேகத்தில் சென்றது, ஓட்டுனர் பிரேக் பயன்படுத்தினாரா, ஓட்டுனரும், பயணிகளும் பாதுகாப்புப் பட்டையை அணிந்திருந்தனரா, காற்றுப்பை எப்போது செயல்பட்டது போன்ற விபரங்களை இந்த கருவி பதிவு செய்யும். இதன் மூலம் விபத்து நடந்த விதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, ஒரு கார் திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதுகிறது என்றால், அந்த நேரத்தில் காரின் வேகம் என்னவாக இருந்தது, ஓட்டுனர் பிரேக் பயன்படுத்தினாரா என்பது போன்ற கேள்விகளுக்கு EDR தகவல்கள் மூலமாக எளிதாக காரணத்தை கண்டறிய முடியும். இதனால் விபத்து விசாரணையின்போது கிடைக்கும் தொழில்நுட்ப ஆதாரங்களை அதிகாரிகள் இன்னும் சிறப்பாக ஆய்வு செய்ய முடியும்.

Also Read

எல்லா கார்களுக்கும் இல்லை

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய விதியின்படி, வரும் 2029ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் இந்த கருப்புப் பெட்டி பொருத்தப்பட்ட கார்கள் AIS-192 தொழில்நுட்பத் தரநிலையை பின்பற்ற வேண்டும். ஆனால், இந்த கருப்புப் பெட்டி அனைத்து கார்களிலும் பொருத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த வாகனங்களில் இந்த கருப்புப் பெட்டி பொருத்தப்பட்டாலும், அது AIS-192 என்ற தரநிலைக்கு இணைக்கமாக தயாரிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த EDR கருவி நேரடியாக விபத்துகளைத் தடுக்கும் சாதனம் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். விபத்து நடந்த பிறகு அதற்கான காரணங்களை ஆராய இந்த கருவி உதவும். இந்த கருவியில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி, வாகனங்களின் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும், எதிர்கால மாடல்களின் வடிவமைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Also Read

அதேநேரத்தில், இந்தக் கருவியில் பதிவாகும் தகவல்களை யார் அணுக முடியும், அவை எந்தச் சூழலில் பயன்படுத்தப்படும், வாகன உரிமையாளர்களின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதும் முக்கியமான கேள்விகளாக உள்ளன. தொழில்நுட்பத் தரநிலைகளுடன், தரவுகளைப் பொறுப்புடன் கையாள்வதற்கான தெளிவான நடைமுறைகளும் அவசியமாகிறது. மேலும், விபத்துக்கான காப்பீடு வழக்கு விசாரணைகளிலும் இது முக்கிய சான்றாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

விபத்து நடந்த பிறகு யார் தவறு செய்தார்கள் என்பதைக் கண்டறிவதைவிட, விபத்து ஏன் ஏற்பட்டது என்பதை துல்லியமாகப் புரிந்துகொள்வது எதிர்காலத்தில் உயிரிழப்புகளைக் குறைக்க உதவும். EDR போன்ற கருவிகள் அந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் உண்மையில் எந்தெந்த வாகனங்களுக்குப் பொருந்தும், அதன் தகவல்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் தெளிவான வழிமுறைகள் தேவைப்படுகின்றன. இந்த கருவி மூலமாக கிடைக்கும் தரவுகளின் பயன்பாடு மற்றும் தனியுரிமை உள்ளிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியமாகிறது.

Article Published On: Monday, October 26, 2026, 11:23 [IST]
English summary
Car black box edr ais 192 standard india 2029
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out