1,000 புதிய EV சார்ஜிங் நிலையங்கள்... 480kW ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் CHARGEZONE!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான சார்ஜிங் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களின்போது சார்ஜிங் வசதி கிடைக்குமா என்ற கவலை பலரிடம் இன்னும் இருக்கிறது. இதற்குத் தீர்வளிக்கும் வகையில் சார்ஜ்ஸோன் நிறுவனத்திடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடுமுழுவதும் 1,000 புதிய மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க CHARGEZONE நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக Ador-Quench நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய நிலையங்களில் அதிகபட்சமாக 480kW திறன்கொண்ட அதிவேக DC சார்ஜிங் வசதிகள் இடம்பெற உள்ளன. இதனால் தனியார் கார்கள் மட்டுமின்றி வர்த்தக வாகனங்களும் பயன்பெறும் வாய்ப்பு ஏற்படும்.

Chargezone

1,000 புதிய சார்ஜிங் நிலையங்கள்

சார்ஜ்ஸோன் நிறுவனத்தின் இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் CHARGEZONE கட்டமைப்புடன் இவை இணைக்கப்படும். இதன் மூலம் நெடுஞ்சாலைகள், நகர்ப்புறங்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் சார்ஜிங் வசதியை மேம்படுத்துவது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது CHARGEZONE நிறுவனம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் 15,000-க்கும் அதிகமான சார்ஜிங் பாயிண்ட்டுகளை நடத்தி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரிவாக்கத்தின் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சார்ஜிங் கட்டமைப்பு மேலும் வலுப்பெற உள்ளது. மொத்தமாக 300 மெகாவாட் திறனை எட்டுவதும் இலக்காக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read

கார்களுக்கு 120kW சார்ஜர்கள்

புதிய நிலையங்களில் வாகனங்களின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு திறன்கொண்ட சார்ஜர்கள் பொருத்தப்பட உள்ளன. குறிப்பாக, நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் மின்சார கார்களுக்காக 120kW திறன்கொண்ட DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் நிறுவப்பட உள்ளன. நீண்ட தூரப் பயணங்களுக்கான சார்ஜிங் வசதியை இது அளிக்கும்.

அதேபோல், மின்சார பேருந்துகள், லாரிகள் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்களுக்காக 360kW மற்றும் 480kW திறன்கொண்ட சார்ஜிங் அமைப்புகள் நிறுவப்பட உள்ளன. அதிக மின்சாரத் தேவை கொண்ட இந்த வாகனங்களுக்குப் பொருத்தமான வகையில் சார்ஜிங் வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் சரக்கு போக்குவரத்துத் துறைக்கும் உதவியாக இருக்கும்.

குறிப்பாக, ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சார்ஜிங் வழங்கக்கூடிய அதிக திறன்கொண்ட அமைப்புகளும் இடம்பெறுகின்றன. இதனால் பேருந்துகள் மற்றும் லாரிகள் அதிகம் வந்து செல்லும் சார்ஜிங் மையங்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடியும். வர்த்தக வாகனங்களின் இயக்க நேரத்தை அதிகரிக்கவும் இது உதவக்கூடும்.

Also Read

'மேட் இன் இந்தியா' சார்ஜர்கள்

இந்த புதிய திட்டத்திற்குத் தேவையான சார்ஜிங் கருவிகளை Ador Powertron நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான Quench Chargers வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் சார்ஜர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதில் முக்கியமான Rectifier மற்றும் Controller பாகங்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சார்ஜர்களில் 30kW மாடுலர் AC-DC கன்வெர்ட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைக்கு ஏற்ப 30kW முதல் 480kW வரையிலான திறன்களில் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்க முடியும். மேலும், இந்தக் கருவிகள் 96 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரச் செயல்திறனை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ChargeCloud மூலம் கண்காணிப்பு

புதிய சார்ஜிங் நிலையங்கள் அனைத்தும் CHARGEZONE நிறுவனத்தின் ChargeCloud டிஜிட்டல் தளத்துடன் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சார்ஜர்களின் செயல்பாட்டு நிலை, மின்சாரப் பயன்பாடு மற்றும் வெப்பநிலை உள்ளிட்ட விவரங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். மேலும், பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து பராமரிப்புப் பணிகளையும் திட்டமிடலாம்.

இந்தியாவில் மின்சார கார்கள் மட்டுமின்றி பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் CHARGEZONE நிறுவனத்தின் 1,000 புதிய சார்ஜிங் நிலையங்கள் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட நிலையங்கள் எப்போது நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன என்பதில்தான் இதன் உண்மையான பலன் அமையும்.

Article Published On: Saturday, November 7, 2026, 15:55 [IST]
English summary
Chargezone plans 1000 new ev charging stations india upto 480kw
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out