ADAS உடன் கார் வாங்குவதே இனி வரும் காலத்தில் புத்திசாலித்தனம்! குறைந்த விலையை கொண்ட 6 மாடல்கள்!

இன்றைய கால மாடர்ன் கார்களில் அடிப்படை அம்சமாக மாறிவிட்ட ஒன்று ADAS ஆகும். அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் என்பதன் சுருக்கமே ADAS ஆகும். அதாவது, டிரைவர்களுக்கு தேவையான அதிநவீன உதவி அம்சங்களை வழங்கும் வசதிகளின் தொகுப்பு என்பது இதன் அர்த்தம் ஆகும். கார்களை சுற்றிலும் வழங்கப்படும் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக இவை செயல்படுகின்றன.

விலையுயர்ந்த கார்களில் மட்டுமே முன்பு ADAS வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை குறைவான கார்களிலும் இவை லெவல்-1 மற்றும் லெவல்-2 நிலைகளில் வழங்கப்படுகின்றன. லெவல்களை பொறுத்து ADAS பேக்கேஜில் உதவி வசதிகள் கிடைக்கும். அவ்வாறு, இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ADAS கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cheapest adas cars in india

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்தியாவில் மிகவும் அண்டர்ரேட்டட் காராக அமேஸை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு குறைந்த விலையில் பல அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளை வழங்கக் கூடியதாக அமேஸ் விளங்குகிறது. அதன்படி, அமேஸ் காரின் ZX வேரியண்ட்டில் இருந்து லெவல்-2 ADAS கிடைக்கிறது. ADAS உடன் அமேஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.15 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திராவின் மாடர்னான எஸ்யூவி வகை கார்களுள் ஒன்றாக இது விளங்குகிறது. இந்த காரிலும் அதன் AX5L வேரியண்ட்டில் இருந்து லெவல்-2 ADAS வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டின் விலைகள் ரூ.12.17 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன. முன்பக்கமாக கார் மோதலுக்கு உள்ளாகுவது குறித்த எச்சரிக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்டவற்றை இந்த காரின் ADAS தொகுப்பில் பெறலாம்.

cheapest adas cars in india

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாயின் இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரில் லெவல்-1 ADAS வழங்கப்படுகிறது. இதனால், லெவல்-2 ADAS-ஐ காட்டிலும் இதன் ADAS-இல் சில வசதிகள் இல்லை. வென்யூவின் SX (O) வேரியண்ட்டில் இருந்து ADAS வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ஹோண்டா சிட்டி (Honda City): இந்தியாவில் தற்போதைக்கு அமேஸ் மாடலுக்கு அடுத்து பிரபலமாக இருக்கும் ஒரெயொரு ஹோண்டா காரான சிட்டியில் மிட்-லெவல் V வேரியண்ட்டில் இருந்து ADAS வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட்டின் விலைகள் தற்சமயம் ரூ.12.40 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இது இல்லாமல், சிட்டி காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 'ஹோண்டா சென்சிங்' தொகுப்பு வழங்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற, இந்தியாவில் அதிக பேர் வாங்கும் கார், நெக்ஸான் ஆகும். ADAS வசதியை ஃபியர்லெஸ்+ PS வேரியண்ட்டில் இருந்து இந்த கார் வழங்குகிறது. இந்த வேரியண்ட்டின் விலை தற்போதைக்கு ரூ.12.16 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. நெக்ஸானில் வழங்கப்படுவது லெவல்-2 ADAS ஆகும்.

கியா சொனெட் (Kia Sonet): நெக்ஸானுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் கொரியன் ஸ்டைல் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் இதுவாகும். சொனெட்டில் GTX+ வேரியண்ட்டில் இருந்து ADAS வழங்கப்படுகிறது. ஆனால், லெவல்-1 அடாஸ் தான். GTX+ வேரியண்ட்டின் விலைகள் ரூ.13.50 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பான கார் பயணத்திற்கு ADAS முக்கியமானதாக மாறி வருகிறது. இன்னும் சில வருடங்களில் விலை குறைவான கார்களிலும் ADAS ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவிடும் என எதிர்பார்க்கிறோம். ஆகையால், இப்போதே ADAS உடன் கார் வாங்குவது நல்லது. அத்தகைய கார்களுள் விலை குறைவான 6 கார் மாடல்களை இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ளோம். இதில் நீங்கள் வாங்க நினைப்பது எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Thursday, May 14, 2026, 23:55 [IST]
English summary
Cheapest adas cars in india may 2026 honda amaze to kia sonet
மேலும்... #car technologies #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+