ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் மலிவான கார்கள்... சிட்டிக்குள் பயன்படுத்த காம்பாக்ட்டான உடலமைப்பு!
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் எளிதாகவும், விரைவாகவும் பயணம் செய்ய அளவில் சிறியதான மைக்ரோ எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக் வகை கார்களே ஏற்றவை ஆகும். இவற்றில் அதிக என்ஜின் பவர் இருக்காது என்றாலும், இன்றைய கால நடைமுறைக்கு இவையே சிறந்தவை ஆகும். அத்தகைய இந்தியாவின் சிறந்த மைக்ரோ எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் சிலவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா பன்ச் (Tata Punch): 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களில் அதிக பேர் தேர்வு செய்யக்கூடியதாக பன்ச் விளங்குகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அளவில் சிறியதான காராக இருப்பினும், இருக்கைகள் நன்கு உயரமாக வழங்கப்படுவதால் சாலையை பார்த்து எளிதாக இந்த காரை ஓட்ட முடிகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 NIOS (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான ஹேட்ச்பேக் கார் இதுவாகும். சற்று தாழ்வான ஹேட்ச்பேக் காராக இருப்பினும், பயணிகளுக்கு போதுமான உட்புற இடவசதியை வழங்குகிறது. இந்த காரில் டிரைவர் இருக்கையின் உயரத்தை தேவைக்கேற்ப சரிசெய்துக் கொள்ளலாம்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவின் மிக பிரபலமான ஹேட்ச்பேக் கார் இதுவாகும். ஏனெனில் அந்த அளவிற்கு நகர சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஸ்விஃப்ட் ஏற்றதாக விளங்குகிறது. இதன் ஸ்டீயரிங் சக்கரத்தை கண்ட்ரோல் செய்வது எளிதாக உள்ளதுடன், அதற்கேற்றவாறு இதன் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினில் இருந்து சீராக இயக்க ஆற்றல் கிடைக்கிறது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): நிசான் நிறுவனத்தில் இருந்து ஒரு சிறந்த காரை குறைந்த விலையில் வாங்க ஆசைப்பட்டால், மேக்னைட் ஏற்றதாக இருக்கும். கம்பீரமான எஸ்யூவி உடலமைப்புடன், தொழிற்நுட்ப வசதிகள் மிக்கதாக இந்த கார் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, 360-டிகிரி கேமரா ஆனது நெரிசல் மிகுந்த சாலைகளில் காரை ஓட்டவும், பார்க் செய்யவும் உதவுகிறது.
ரெனால்ட் க்விட் (Renault Kwid): வித்தியாசமான பிரெஞ்சு ஸ்டைலிலான கார் இதுவாகும். பார்ப்பதற்கு எஸ்யூவி வகை காரை போன்று நிமிர்ந்த தோற்றத்தில் இருந்தாலும், உண்மையில் இது ஒரு ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த கார் ஆகும். மிகவும் குறைவாக ரூ.4.29 லட்சத்தில் இருந்து கிடைத்தாலும், 8-இன்ச் தொடுத்திரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை போன்றவை வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): சிறப்பாக செயல்படக்கூடிய என்ஜினை கொண்ட எக்ஸ்டரில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டான அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி எக்ஸ்டரில் தொழிற்நுட்ப அம்சங்களும் அதிகமாக கிடைக்கிறது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உடன் இது CNG ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
ரெனால்ட் கைகர் (Renault Kiger): ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டுச் செல்லக்கூடிய விசாலமான கேபினை எதிர்பார்ப்பவர்களுக்கு கைகர் எஸ்யூவி கார் ஏற்றதாக இருக்கும். பள்ளம், மேடான சாலைகளுக்கும் கொண்டுச் செல்வதற்கு ஏற்ப இந்த காரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து நன்கு உயரமாக வழங்கப்படுகிறது. அதேபோல், பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கான பூட் ஸ்பேஸ் அளவிலும் எந்த குறையையும் சொல்ல முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெரிசலான சாலைகளை கொண்ட நகர்புறத்தில் எளிதாக பயன்படுத்துவதற்கு சிறிய அளவிலான கார்களே ஏற்றவை ஆகும். அதற்கு ஏற்ற சில ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார் மாடல்களை தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இதில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications