குறுகலான சிட்டி சாலைகளுக்கு இந்த கார்கள் தான் ஏற்றவைனு பலருக்கு தெரியல! உடனே புக்கிங் போட 7 கார் மாடல்கள்!

நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) கார்களை வாங்குவதா அல்லது தாழ்வான செடான் (Sedan) ரக கார்களை வாங்குவதா என பலருக்கு குழப்பமாக இருக்கலாம். இவை இரண்டிற்கும் மத்தியில் ஹேட்ச்பேக் (Hatchback) வகை கார்கள் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலான விலை குறைவான கார்கள் ஹேட்ச்பேக் வடிவமைப்பில்தான் கிடைக்கின்றன. அத்தகைய விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைகும் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி பலேனோ & டொயோட்டா க்ளான்ஸா (Maruti Suzuki Baleno & Toyota Glanza): இந்த இரு கார்களையும் ஒன்றாக பார்ப்பதற்கு காரணம், இவை இரண்டுமே ஒரே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுபவை ஆகும். இதனால் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக 5-ஸ்பீடு ஏஎம்டி வழங்கப்படுகிறது.

cheapest automatic hatchback cars

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் விலை குறைவான காராக இருப்பினும், ஸ்விஃப்ட் காரில் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பலேனோ, க்ளான்ஸா அளவிற்கு இதன் ஏஎம்டி கியர்பாக்ஸின் செயல்திறன் பெப்பியாக இல்லாவிடினும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டிற்கு சரியானதாக உள்ளது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த காராக ஐ20 விளங்குகிறது. இந்த காரில் சிவிடி (CVT) மற்றும் டிசிடி (DCT) என இரு விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. இதில் சிவிடி ஆனது நகர்புறத்தில் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் காரை ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. அதுவே, டிசிடி ஆனது விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கேற்ப இது, ஜாலியான டிரைவிங்கை எதிர்பார்க்கும் கார் ஆர்வலர்களுக்கானது.

cheapest automatic hatchback cars

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாயின் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக காரான இது, 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. விற்பனையில் ஸ்விஃப்ட் ஏஎம்டி காருக்கு போட்டியாக விளங்கும் இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் செட்-அப் ஆனது நன்றாக வடிவமைக்கப்படுகிறது. இதனால், மற்ற ஏஎம்டி கார்களில் ஏற்படும் அதிர்வுகளை இந்த காரில் உணர முடிவதில்லை.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): மேலே கூறப்பட்ட ஐ20 காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் டாடா ஹேட்ச்பேக் கார் இதுவாகும். இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட்-மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) மற்றும் 6-ஸ்பீடு டிசிடி என இரு விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஏஎம்டி ஆனது குறைந்த விலையில் இந்த காரை விரும்புபவர்களுக்கானது. அல்ட்ராஸின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் டிசிடி அதிக மைலேஜை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டதாக உள்ளது.

டாடா டியாகோ ஏஎம்டி (Tata Tiago AMT): பாதுகாப்பு சோதனைகளில் 5க்கு 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று பாதுகாப்பான ஹேட்ச்பேக் காராக விளங்கும் டியாகோவில் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மென்மையாக பிரேக் கொடுக்கும்போது பிரேக் அழுத்தத்தை சீராக வைத்து, காரை மணிக்கு 5- 7 கிமீ என்கிற சீரான வேகத்தில் மெதுவாக இயக்குகிறது. இது நெரிசல் மிகுந்த சாலையில் நின்று நின்று செல்லும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிட்ரோன் சி3 (Citroen C3): இந்த பிரெஞ்சு-ஸ்டைல் ஹேட்ச்பேக் காரில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இவ்வாறான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு ஹேட்ச்பேக் கார் இது ஆகும். இருப்பினும், இந்த டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷனை சி3 காரின் விலைமிக்க 'ஷைன்' (Shine) வேரியண்ட்டில் மட்டும்தான் பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹேட்ச்பேக் உடலமைப்புக் கொண்ட கார்களில் எஸ்யூவி கார்களின் விசாலமான கேபினையும், செடான் கார்களின் எதிர்காற்றில் நுழைந்து செல்லக்கூடிய ஏரோடைனமிக் (Aerodynamic) தோற்றத்தையும் பெறலாம். இத்தகைய ஹேட்ச்பேக் கார்களை ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்குவதன் மூலம் காரை குறுகலான நகர்புற சாலைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

Article Published On: Monday, May 11, 2026, 7:20 [IST]
English summary
Cheapest automatic hatchback cars in india maruti suzuki baleno to citroen c3
மேலும்... #hatchback car #automatic cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+