பைக்கிற்கு இணையான மைலேஜை வழங்கும் 7 சிஎன்ஜி கார்கள்! மாருதி சுஸுகியில் மட்டும் இத்தனை மாடல்கள் இருக்கா?

சிஎன்ஜி கார்கள் (CNG Cars) மெல்ல மெல்ல மக்களிடையே அதிகமாக பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனை செய்வதுதான் அதற்கு காரணமாகும்.

தற்போதைக்கு இந்த மூன்று கார் நிறுவனங்கள் மட்டுமே நேரடியாக தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி செட்-அப்பை பொருத்தி கார்களை விற்பனை செய்கின்றன. அவ்வாறு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிஎன்ஜி கார்களுள் அதிக மைலேஜ் (Mileage)-ஐ வழங்கும் சிஎன்ஜி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சிறந்த சிஎன்ஜி காரை நீங்கள் தேர்வு செய்ய இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.

cheapest cng cars with best mileage figures

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 எஸ்-சிஎன்ஜி (Maruti Suzuki Alto K10 S-CNG): மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்கக்கூடிய சிஎன்ஜி காரை வாங்குவதற்கு ஆல்டோ கே10 சிஎன்ஜி கார் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், இந்த சிஎன்ஜி காரில் 33.85kmpkg மைலேஜ் கிடைக்கிறது. இந்த காரில் 1 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல்-ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி (Tata Altroz iCNG): டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸின் ஐ-சிஎன்ஜி வேரியண்ட்டில் இரட்டை-சிலிண்டர் செட்-அப் உடன் ஐசிஎன்ஜி தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் உடன் இந்த காரில் வழங்கப்படும் சிஎன்ஜி செட்-அப் மூலம் அதிகப்பட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 27.8கிமீ மைலேஜை பெறலாம்.

cheapest cng cars with best mileage figures

டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி (Toyota Glanza CNG): க்ளான்ஸாவில் இ-சிஎன்ஜி (E-CNG) தொழிற்நுட்பத்துடன் சிஎன்ஜி வேரியண்ட் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உடன் க்ளான்ஸா சிஎன்ஜி காரில் 30.61கிமீ மைலேஜை ஒரு கிலோ சிஎன்ஜி-இல் பெற முடிகிறது. க்ளான்ஸா சிஎன்ஜி காரின் விலைகள் ரூ.6.46 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.

மாருதி சுஸுகி பலேனோ எஸ்-சிஎன்ஜி (Maruti Suzuki Baleno S-CNG): மேலே கூறப்பட்ட டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி மற்றும் டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி கார்களுக்கு விற்பனையில் போட்டியாக பலேனோ சிஎன்ஜி கார் விளங்குகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 30.61kmpkg மைலேஜை வழங்கக் கூடியதாக உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி (Maruti Suzuki Dzire CNG): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் (Sedan) ரக காரான டிசையரையும் சிஎன்ஜி ஆப்ஷனில் வாங்கலாம். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி கிட் பொருத்தி வழங்கப்படுகிறது. டிசையர் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.03 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி (Maruti Suzuki WagonR CNG): இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் காரும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாருதி சிஎன்ஜி கார்களை போலவே இந்த காரிலும் சிஎன்ஜி கிட் ஆனது மாருதி சுஸுகி தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி செலேரியோ சிஎன்ஜி (Maruti Suzuki Celerio CNG): இந்தியாவில் தற்போதைக்கு அதிக மைலேஜை வழங்கும் சிஎன்ஜி காராக செலேரியோ சிஎன்ஜி விளங்குகிறது. ஏனெனில், இந்த சிஎன்ஜி கார் ஆனது அதிகப்பட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 34.03கிமீ மைலேஜை வழங்குகிறது. செலேரியோ சிஎன்ஜி காரில் கே10சி என்ஜின் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் சிஎன்ஜி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அதிக மைலேஜை வழங்கும் சிஎன்ஜி காரை வாங்குவதற்கு மேற்கூறப்பட்ட சிஎன்ஜி கார்களுள் ஒன்றை வாங்கலாம். இந்த தொகுப்பின் மூலமாக, சிறந்த சிஎன்ஜி காரை தேர்வு செய்வது குறித்த தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.

Article Published On: Tuesday, May 5, 2026, 23:48 [IST]
English summary
Cheapest cng cars in india with best mileage figures maruti suzuki alto k10 cng to celerio cng
மேலும்... #cng car #mileage #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+