அற்ப விலையில் கிடைக்கும் டீசல் எஸ்யூவி கார்கள்... இன்னும் சில வருஷத்தில் இதில் பல மாடல்கள் கிடைக்காது!

இந்தியாவில் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. அதாவது, பல்வேறு காரணங்களினால் டீசல் கார்களின் விற்பனையை அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சொல்லலாம். இருப்பினும், டீசல் என்ஜின் உடன் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்காக சில கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹூண்டாய் கிரெட்டா/ கியா செல்டோஸ் (Hyundai Creta/ Kia Seltos): இந்த இரு கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி கார்களிலும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிக எரிபொருள் திறன், சிறந்த சுத்திகரிப்பு மற்றும் நேர்த்தியான செயல்படுதிறனுக்கு பெயர் பெற்றதாக உள்ளது.

cheapest diesel suv cars

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N): இந்திய சந்தையில் பவர்ஃபுல்லான டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் மற்றொரு கார், ஸ்கார்பியோ-என் ஆகும். பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கார்பியோ காரின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாக ஸ்கார்பியோ-என் சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

கியா சொனெட் (Kia Sonet): இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் மிகவும் சில அளவில்-சிறியதான சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று, சொனெட் ஆகும். இந்த காரில் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆனது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது.

cheapest diesel suv cars

மஹிந்திரா தார் (Mahindra Thar): கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கான ஒரு டீசல் எஸ்யூவி காரை தேடுகிறீர்கள் என்றால், தார் ஏற்றதாக இருக்கும். 3 கதவுகளை மட்டுமே கொண்ட எஸ்யூவி வாகனமான இதில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஆஃப்-ரோடு பயணங்களுக்காக மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஷியலை இந்த வாகனம் பெறுகிறது.

டாடா சஃபாரி (Tata Safari): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார், சஃபாரி ஆகும். இந்த காரில் ஃபியட் நிறுவனத்தின் 2 லிட்டர் க்றையோஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. சஃபாரி டீசல் கார் மென்மையான மற்றும் இலகுவான பயண அனுபவத்தை வழங்கக்கூடியதாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700): ஸ்கார்பியோ-என், தார் வாகனங்களில் வழங்கப்படும் அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் தான் இந்த மஹிந்திரா எஸ்யூவி காரிலும் வழங்கப்படுகிறது. தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்றதாக விளங்கும் இந்த டீசல் என்ஜின் ஆனது 450 என்.எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): இன்னோவா கிரிஸ்டா காரை காட்டிலும் பிரீமியம் தரத்திலான டொயோட்டா எம்பிவி காரை வாங்க நினைப்பவர்களுக்கு ஃபார்ச்சூனர் ஏற்றதாக இருக்கும். லேடார்-ஃபிரேமில் உருவாக்கப்படும் ஃபார்ச்சூனரின் முக்கிய சிறப்பம்சமே அதன் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆகும். இதனால், ஃபார்ச்சூனருக்கு எந்த காலத்திலும் ஒரு நல்ல மதிப்பு கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாசு உமிழ்வு விதிமுறை கட்டுப்பாடுகளினால் தான் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை வரும் காலங்களிலும் தொடரும் என்றாலும், டீசல் கார்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அத்தகையவர்கள் வாங்குவதற்கான ஏழு எஸ்யூவி கார் மாடல்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இதில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Article Published On: Sunday, May 17, 2026, 10:22 [IST]
English summary
Cheapest diesel suv cars in india hyundai creta and kia seltos to toyota fortuner
மேலும்... #diesel cars #suv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+