சீப்பான விலையில் கிடைக்கும் 3 எலெக்ட்ரிக் கார்கள்... பெட்ரோல் செலவில் இருந்து தப்பிக்க சரியான சாய்ஸ்!

பெட்ரோல் விலை இந்தியாவின் நிறைய மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் கார்களே வேண்டாம் என நிறைய பேர் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்களின் மனநிலை எலெக்ட்ரிக் கார்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அத்தகையவர்களுக்காக, இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் அளவில் சிறியதான எலெக்ட்ரிக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): JSW எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் இரு கதவுகளை மட்டுமே கொண்ட எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இதில் 17.3kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

cheapest electric cars in india

கோமெட் இவி காரில் அதிகப்பட்சமாக 41.43 பிஎச்பி மற்றும் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 230கிமீ தொலைவிற்கு பயணம் செய்யலாம். கோமெட் இவி காரின் நீளம் 2,974மிமீ, அகலம் 1,505மிமீ மற்றும் உயரம் 1,640மிமீ ஆகும்.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ-எஸ்யூவி காரான பன்ச் ஆனது எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 30kWh மற்றும் 40kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பேட்டரியை பொறுத்து இயக்க ஆற்றல் ஆனது 87.16 பிஎச்பி மற்றும் 154 என்.எம் டார்க் திறன் மற்றும் 127.3 பிஎச்பி மற்றும் 154 என்.எம் டார்க் திறன் அளவிற்கு இந்த காரில் கிடைக்கிறது.

cheapest electric cars in india

அதேபோல், ரேஞ்சும் 30kWh பேட்டரியில் 375கிமீ தொலைவிற்கும், 40kWh பேட்டரியில் 468கிமீ தொலைவிற்கும் கிடைக்கிறது. பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் நீளம் 3,880மிமீ, அகலம் 1,742மிமீ மற்றும் உயரம் 1,622மிமீ ஆகும். இந்த காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,445மிமீ ஆக உள்ளது.

டியாகோ இவி (Tiago EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மற்றொரு சிறிய அளவிலான எலெக்ட்ரிக் கார் இதுவாகும். 5 கதவுகளை கொண்ட இது நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஹேட்ச்பேக் வகை எலெக்ட்ரிக் கார் ஆகும். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மே 28ஆம் தேதியான இன்று அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

cheapest electric cars in india

இந்த காரில் 19.2kWh மற்றும் 24kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 19.2kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 223கிமீ ரேஞ்சையும், 24kWh பேட்டரியில் 293கிமீ ரேஞ்சையும் பெறலாம். ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.11.14 லட்சம் வரையிலான விலையில் டியாகோ இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்படியாவது குறைந்த விலையிலாவது ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட விரும்புபவர்களுக்கு இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்கள் சிறந்தவை ஆகும். இதில் எங்களது சாய்ஸ், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் ஆகும். ஏனெனில் இது நிமிர்ந்த தோற்றம் கொண்ட மற்றும் போதுமான உட்புற இடவசதி வழங்கக்கூடிய எஸ்யூவி வகை கார் ஆகும்.

Article Published On: Thursday, May 28, 2026, 11:35 [IST]
English summary
Cheapest electric cars in india amid high petrol prices mg comet ev to tata tiago ev
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X