இந்த 5 எலெக்ட்ரிக் கார்களின் விலையை பார்த்தால், ஒருத்தரும் பெட்ரோல்/ டீசல் காரை வாங்க மாட்டாங்க!!
சர்வதேச போர் பதற்ற சூழல்களினால் வருங்காலங்களில் பெட்ரோல், டீசலை பெற முடியுமா என்கிற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவது புதிய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
தற்சமயம், அனைவரும் வாங்கக்கூடிய பட்ஜெட் விலையில் இருந்து சொகுசான லக்சரி எலெக்ட்ரிக் கார்கள் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களை பற்றி ஆகும். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் இதுவாகும். 17.3kWh பேட்டரி உடன் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 41.43 பிஎச்பி மற்றும் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். ரூ.7.62 லட்சத்தில் இருந்து தற்சமயம் கோமெட் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) துவங்குகின்றன. அதேநேரம், பேட்டரியை குத்தகை முறையில் பெற்றால், காரின் ஆரம்ப விலை ரூ.4.99 லட்சம் மட்டுமே ஆகும்.
டாடா டியாகோ இவி (Tata Tiago EV): டாடா மோட்டார்ஸில் இருந்து பல விதமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுள் விலை குறைவானது இதுவாகும். 19.2kWh மற்றும் 24kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக பன்ச் இவி விளங்குகிறது. 30kWh மற்றும் 40kWh இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த டாடா எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.69 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. மேலும், பேட்டரி குத்தகை முறையிலும் இந்த கார் ரூ.6.49 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
சிட்ரோன் இசி3 (Citroen eC3): பிரெஞ்சு நாட்டு கார் நிறுவனமான சிட்ரோனில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எலெக்ட்ரிக் காராக தற்போதைக்கு இசி3 விளங்குகிறது. 29.2kWh என்கிற ஒரேயொரு அதிக அடர்த்தி கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் விற்பனை செய்யப்படும் இசி3 காரின் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். 39.4kWh பேட்டரி பேக் உடன் விற்பனைக்கு கிடைக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.89 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV): இந்த லிஸ்ட்டில் கடைசியாக பார்த்தாலும், இந்தியாவில் தற்போதைக்கு அதிக பேர் வாங்கும் எலெக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அளவில் பெரியதான இந்த கார் குறைந்த விலையில் கிடைப்பதாகும். இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து துவங்கினாலும், பேட்டரி குத்தகை முறையில் ரூ.9.99 லட்சத்தில் இந்த காரை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையிலாவது எப்படியாவது எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கிவிட வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றவையாக இருக்கும். இதில் எங்களது சாய்ஸ் எதுவென்றால், கடைசியாக பார்த்த எம்ஜி விண்ட்சர் இவி ஆகும். இந்த காரை BaaS எனப்படும் பேட்டரி குத்தகைய முறையில் குறைந்த விலையில் வாங்குவது நல்ல முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications