கம்மி விலையில் பிரம்மாண்ட சன்ரூஃப்! உங்க பட்ஜெட்டிற்குள் அடங்கும் இந்தியாவின் மலிவான எஸ்யூவி கார்கள்!

பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof), இன்றைய கால மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் அம்சமாக மாறிவிட்ட ஒன்று. காரின் மைலேஜை பார்க்கிறார்களோ இல்லையோ வாங்கும் காரில் சன்ரூஃப் உள்ளதா என்பதை தான் நிறைய பேர் கவனிக்கிறார்கள். இதனால், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களிலும் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்க ஆரம்பித்துள்ளனர். அவ்வாறான விலை குறைவான கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் (Kia Seltos): கிரெட்டாவை போன்று கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காரான செல்டோஸில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை அப்கிரேடின் மூலம் குறைந்த விலையில் இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன்படி, ரூ.14.19 லட்சத்தில் கிடைக்கும் எச்டிகே (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்தே சன்ரூஃப்-ஐ பெறலாம்.

cheapest suv cars with sunroof

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): தற்சமயம் இந்திய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக இது உள்ளது. இதற்கு காரணம், கிரெட்டாவின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் கூட பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இதன் சன்ரூஃப்-ஐ குரல் மூலமாகவும் கண்ட்ரோல் செய்ய முடிகிறது. ரூ.13.13 லட்சத்தில் கிடைக்கும் இந்த காரின் இஎக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து பனோராமிக் சன்ரூஃப் கிடைக்கிறது.

டாடா கர்வ் (Tata Curvv): டாடா மோட்டார்ஸின் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காரான கர்வ் -இல் 'ப்யூர்+ எஸ்' (Pure+ S) வேரியண்ட்டில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது தற்சமயம் ரூ.11.65 லட்சமாக உள்ளது. இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப்-இன் கண்ணாடிகளை காருக்குள் இருந்து பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.

cheapest suv cars with sunroof

எம்ஜி அஸ்டர் (MG Astor): இந்தியாவில் குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) வகை கார் அஸ்டர் ஆகும். அதாவது, இதன்பின் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் எஸ்யூவி கார்கள் அனைத்தும் அஸ்டரை காட்டிலும் அளவில் சற்று சிறியவை ஆகும். ரூ.11.34 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் அஸ்டரின் ஷைன் வேரியண்ட்டில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரில் பனோராமிக் சன்ரூஃப் எதுவும் வழங்கப்படவில்லை. அதனை கடந்த 2025 ஜூலை மாதத்தில் புதியதாக இந்த காரில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. இதற்காக ரெவ் எக்ஸ் (RevX) வேரியண்ட்கள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதில், ரெவ் எக்ஸ் ஏ வேரியண்ட் ஆனது குறைந்தப்பட்சமாக ரூ.11.17 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

கியா சிரோஸ் (Kia Syros): இந்த கியா எஸ்யூவி காரின் அடையாளமே அதன் விசாலமான உட்புற கேபின் ஆகும். அப்படியிருக்க, இந்த காரில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஆனால், வெறும் ரூ.10.74 லட்சத்தில் கிடைப்பதுதான் சற்று ஆச்சிரியத்தை தருகிறது. சிரோஸின் மிட்-வேரியண்ட்டான எச்டிகே+ -இல் இருந்து பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): நெக்ஸான் காரில் குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் ரூ.9.59 லட்சத்தில் நெக்ஸானின் ப்யூர் பிளஸ் பிஎஸ் வேரியண்டில் அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவிலேயே குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் காராக நெக்ஸான் ப்யூர் பிளஸ் பிஎஸ் உருவெடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் ப்யூர் பிளஸ் பிஎஸ் வேரியண்ட்டின் அறிமுகத்தை சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த தொகுப்பை பார்த்துள்ளோம். இவை தான் தற்போதைக்கு இந்தியாவில் குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் உடன் கிடைக்கும் எஸ்யூவி கார்கள் ஆகும். நெக்ஸானின் விற்பனை ஏற்கனவே சிறப்பாக இருக்கும் நிலையில், குறைந்த விலையில் பனோராமிக் சன்ரூஃப் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது நெக்ஸானின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

Article Published On: Tuesday, May 12, 2026, 9:52 [IST]
English summary
Cheapest suv cars with panoramic sunroof in india kia seltos to tata nexon
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+