இப்பதான் 5 ஆயிரம் குடுத்தாங்க! அதுக்குள்ள இதுவா! தமிழக மக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்க போகும் அரசு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு வேகமாக உயர்ந்து வருகிறது. காற்று மாசுபாட்டுடன் (Air Pollution) சேர்த்து, ஒலி மாசுபாடு (Noise Pollution) பிரச்சனையையும் அவை கட்டுப்படுத்துவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. 65 டெசிபல்களுக்கு (decibels - dB) மேலான சத்தத்தை ஒலி மாசுபாடு என உலக சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) வரையறுத்துள்ளது.

ஆனால் டீசல் மூலமாக இயங்கும் பஸ்கள் பெரும்பாலான சமயங்களில், 85 டெசிபல்களுக்கும் மேலான ஒலியை எழுப்புகின்றன. குறிப்பாக நின்று விட்டு மீண்டும் கிளம்பும்போதும், வேகமாக ஆக்ஸலரேஷன் செய்யும்போதும், டீசல் பஸ்களால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. ஆனால் டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்கள் 20 டெசிபல்களுக்கும் அதிகமான சத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.

M K Stalin

எனவே எலெக்ட்ரிக் பஸ்கள் மிகவும் அமைதியானவையாக கருதப்படுகின்றன. இது பெரு நகரங்களில் வாகனங்களால் ஏற்படும் இரைச்சலில் இருந்து மக்களை காப்பாற்றுகிறது. அத்துடன் டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்கள் 90 சதவீதம் குறைவான பசுமை இல்ல வாயுக்களை (Green House Gases) உற்பத்தி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

ஆனால் டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்கள் விலை (Price) உயர்ந்தவைதான். எனினும் நீண்ட கால அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ்களே அதிக லாபம் (Profit) தரும். ஏனெனில் டீசல் பஸ்களை போல், எலெக்ட்ரிக் பஸ்களில் இன்ஜின் போன்ற பாகங்கள் எல்லாம் இருக்காது. எனவே எலெக்ட்ரிக் பஸ்களை பராமரிப்பதற்கு மிகவும் குறைவான செலவுதான் ஆகும். அத்துடன் டீசல் உடன் ஒப்பிடும்போது, மின்சாரத்திற்கான செலவும் குறைவுதான்.

Delhi Electric Buses

அதாவது பராமரிப்பதற்கான (Maintenance Cost) மற்றும் இயக்குவதற்கான செலவு (Operation Cost) மிகவும் குறைவு. எனவே நீண்ட கால அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ்கள் நல்ல லாபத்தை தரும். டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்கள் தினமும் 82 சதவீதம் அதிக லாபம் ஈட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பதால், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைய நிலையில் டெல்லியில்தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு ஒட்டுமொத்தமாக 4,286 எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கி வருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 4,001 எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்கி கொண்டுள்ளன. இந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் 1,989 எலெக்ட்ரிக் பஸ்களும், குஜராத் மாநிலத்தில் 1,041 எலெக்ட்ரிக் பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் (Tamil Nadu) போதிய அளவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் (Chennai), 120 எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சென்னை நகரில் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டது.

தற்போதைய நிலையில் சென்னையில் ஒட்டுமொத்தமாக 380 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 625 எலெக்ட்ரிக் பஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 380 எலெக்ட்ரிக் பஸ்கள்தான் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எஞ்சிய 245 எலெக்ட்ரிக் பஸ்களும் நடப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக பயன்பாட்டிற்கு வந்து விடும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கூடிய விரைவில் மேலும் 600 எலெக்ட்ரிக் பஸ்களை சென்னையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் கூடுதலாக 845 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் சென்னையில் இயக்கப்படும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 1,225 ஆக உயரவுள்ளது.

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை (Kalaingar Magalir Urimai Thogai) வடிவில், பெண்களின் வங்கி கணக்கில், சமீபத்தில் 5 ஆயிரம் ரூபாயை செலுத்தி, அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. இதற்கு அடுத்தபடியாக கூடிய விரைவில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி, அரசு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாட்டில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஆனால் சென்னையில் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதிகளிலும், எலெக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 16, 2026, 17:08 [IST]
English summary
Chennai to get 845 more electric buses soon check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+