டாடா ஹாரியருக்கு போட்டியாக வரும் புதிய ஜேஎஸ்டபிள்யூ கார்... இந்தியாவில் அறிமுகமாகும் செரி டிகோ 7?

இந்திய கார் சந்தையில் புதிய நிறுவனமாக தடம் பதிக்கத் தயாராகி வரும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ், தனது எதிர்கால கார் வரிசையை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே சீனாவின் செரி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு புதிய கார் கவனம் ஈர்த்துள்ளது.

அதாவது, செரி டிகோ 7 (Chery Tiggo 7) எஸ்யூவியை தனது பிராண்டில் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த 5 சீட்டர் கார் மாடலானது டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு புதிய போட்டியாக இது அமையும்.

Chery Tiggo 7

இந்தியாவில் காப்புரிமை

செரி நிறுவனம் ஏற்கெனவே தனது டிகோ 7L மாடலின் வடிவமைப்புக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றிருந்தது. தற்போது அதன் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கமான டிகோ 7 மாடலுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த கார் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் ரீபேட்ஜ் முறையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

செரி டிகோ 7 மற்றும் டிகோ 7L ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எஸ்யூவிகளாக இருந்தாலும், அவற்றின் வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, டிகோ 7L சற்று நீளமான தோற்றத்தையும் அதிக வீல்பேஸையும் கொண்டுள்ளது. வழக்கமான டிகோ 7 அளவில் சிறியதாக இருக்கிறது.

Also Read

வெளிப்புற வடிவமைப்பு

டிகோ 7 காரின் முன்பகுதியில் அதிக குரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான கிரில் இடம்பெற்றுள்ளது. இதனுடன் எல்இடி ஹெட்லைட்டுகள், தனித்துவமான பனி விளக்கு அமைப்பு மற்றும் அழுத்தமான வடிவமைப்புடன் கூடிய முன்பக்க பம்பர் ஆகியவை காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன.

பக்கவாட்டில் பெரிய அலாய் வீல்கள், வழக்கமான கதவு கைப்பிடிகள், ரூஃப் ரெயில்கள் மற்றும் அழுத்தமான பாடி லைன்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் வித்தியாசமான பம்பர் வடிவமைப்பு ஆகியவை இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

அளவுகளைப் பொறுத்தவரையில், செரி டிகோ 7 கார் 4,553 மிமீ நீளமும், 2,670 மிமீ வீல்பேஸும் கொண்டுள்ளது. அதே குடும்பத்தின் பெரிய மாடலான டிகோ 7L, 4,655 மிமீ நீளத்தையும் 2,720 மிமீ வீல்பேஸையும் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு மாடல்களுக்கும் இடையே அளவில் வித்தியாசம் உள்ளது.

Chery Tiggo 7

என்னென்ன வசதிகள்?

காரின் உட்புறத்தில் எளிமையான அதேசமயம் நவீனமான டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு 12.3 இன்ச் திரைகள் ஒரே அமைப்பில் இடம்பெற்றுள்ளன. ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் திரையாகவும் செயல்படுகிறது.

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், டூயல் ஸோன் ஏசி, முன்பக்க இருக்கைகளில் வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், சோனி ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகளும் சர்வதேச மாடலில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, எட்டு ஏர்பேக்குகள், மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் (ADAS) உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. மேலும், இந்த காரின் சர்வதேச மாடல் யூரோ என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.

Also Read

எஞ்சின் மற்றும் செயல்திறன்

சர்வதேச சந்தையில் செரி டிகோ 7 காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக சுமார் 145 எச்பி பவரையும், 275 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வரக்கூடிய காரில் இதே எஞ்சின் வழங்கப்படுமா அல்லது இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வேறு பவர்டிரெயின் தேர்வு செய்யப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை. குறிப்பாக, தற்போது வெளியாகியுள்ள வடிவமைப்பு காப்புரிமை விவரங்களின்படி இது பிளக்-இன் ஹைபிரிட் மாடல் என்பதற்கான அடையாளங்கள் தென்படவில்லை.

டாடா ஹாரியருக்கு போட்டி

இந்தியாவில் அறிமுகமானால், டிகோ 7 தனது அளவு, வசதிகள் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு அடிப்படையில் டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இதன் விலை, இந்தியாவிற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் விற்பனைத் திட்டம் ஆகியவை முக்கியமானதாக இருக்கும்.

Article Published On: Monday, November 16, 2026, 13:23 [IST]
English summary
Chery tiggo 7 india launch jsw motors brand tata harrier rival
மேலும்... #chery motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out