பிசியான சாலையில் சுற்றித் திரிந்த சீன எலெக்ட்ரிக் கார்! யாரோட வேலையா இருக்கும்?

சீனாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார் ஒன்று நம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்துள்ளது. இந்த எந்த கார் என்பதை யாரும் அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காக முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த சீன கார் இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களது கண்ணில் இருந்து தப்புமா? வாருங்கள் இந்த சீன எலெக்ட்ரிக் கார் என்ன என்பதை இந்த தொகுப்பில் அக்குவேர் ஆணிவேராக பார்ப்போம்.

சீன பொருட்களுக்கு தடை என சில வருடங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவில் கூறப்பட்டு வந்தாலும், சீன கார்களுக்கு தடை எதுவும் விதிக்கப்பட்டது போல் தெரியவில்லை. ஏனெனில், சில கார் நிறுவனங்களில் இருந்து சீன கார்கள் வேறொரு பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, எம்ஜி மோட்டார் நிறுவனத்தை சொல்லலாம்.

chinese wuling starlight 560 spotted

எம்ஜியில் இருந்து இந்தியாவில் தற்சமயம் சிறப்பாக விற்பனையாகி வரும் விண்ட்சர் இவி மற்றும் கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் சீனாவில் வேறொரு பெயரில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களே ஆகும். இதற்கெல்லாம் காரணம், பிரிட்டிஷ் நாட்டில் தோன்றிய கார் நிறுவனமாக எம்ஜி மோட்டார் இருந்தாலும், அதனை தற்சமயம் நிர்வகிப்பது சீனாவின் பிரபலமான SAIC நிறுவனம் ஆகும்.

அந்த வகையில் மற்றொரு சீன எலெக்ட்ரிக் காரை இந்தியாவிற்கு எம்ஜி கொண்டு வருகிறது. அதுதான் தற்போது குஜராத்தில் பொது சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இந்திய காலச் சூழல்களுக்கும், தட்ப வெப்பநிலைகளுக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியும் விதமாக இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

chinese wuling starlight 560 spotted

குஜராத் மாநிலத்தில் ஹலோல் என்கிற பகுதியில் உள்ள எம்ஜி மோட்டாரின் தொழிற்சாலைக்கு அருகே இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எலெக்ட்ரிக் கார் சீனாவில் 'வுல்லிங் ஸ்டார்லைட் 560' என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் பக்கவாட்டை பார்த்தவுடனே கண்டுப்பிடித்து விட்டோம் இது வுல்லிங் நிறுவனத்தின் ஸ்டார்லைட் 560 கார் என்று. மேலும், காரின் பின்புறமும் இது ஸ்டார்ட்லைட் 560 கார் என்பதை வெளிக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இது தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெக்டர் பிளஸ் (Hector Plus) காருக்கு இணையான உடல் அளவில் உள்ளது.

யாருக்கு தெரியும்... ஹெக்டர் பிளஸ் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு அந்த இடத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படலாம். வுல்லிங் ஸ்டார்லைட் 560 காரில் எல்இடி விளக்குகள், ஸ்கிட் பிளேட்கள், மேற்கூரையில் ரூஃப் ரெயில்கள், 18 இன்ச்சில் 215/55-பிரிவு டயர்கள், இரட்டை-நிறங்களில் அலாய் சக்கரங்கள் மற்றும் பிளவுப்பட்ட டெயில்லேம்ப் செய்-அப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

உட்புறத்தில் டாஷ்போர்டில் 3.5 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, வயர்லெஸ் கனெக்டிவிட்டி உடன் 12.8 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் லெதரேட்டட் அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்டவற்றை பெறுகிறது. சீனாவில் வுல்லிங் ஸ்டார்லைட் 560 ஆனது எலெக்ட்ரிக் காராக மட்டுமின்றி, பிளக்-இன் ஹைப்ரீட் காராகவும் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் ஸ்டார்லைட் 560 என்கிற பெயரில் தான் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். வுல்லிங்கிற்கு பதிலாக, எம்ஜி பெயர் இடம்பெறும் அவ்வளவுதான். ஆனால், பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப் இந்திய சந்தைக்கு ஏற்ப வழங்கப்படும். சீனாவை போன்று இந்தியாவிலும் எதிர்காலத்தில் பிளக்-இன் ஹைப்ரீட் ஆப்ஷனில் ஸ்டார்லைட் 560 அறிமுகம் செய்யப்படலாம்.

Article Published On: Wednesday, May 13, 2026, 16:08 [IST]
English summary
Chinese wuling starlight 560 electric car spotted in gujarat india check all details here
மேலும்... #mg motor #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+