ரூ.10 லட்சத்திற்குள் கிடைத்தாலும் பெருசா யாரும் கண்டுக்காத கார்! கஸ்டமர்ஸை ஈர்க்க புதிய முயற்சி!

சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்கிராஸ் காரில் புதியதாக கம்ஃபர்ட் எடிஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. குறுகிய காலம் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த லிமிடெட் எடிஷன் காரின் விலை ரூ.9.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோயன் இந்தியாவில் நுழைந்து வருடக்கணக்கில் ஆகிவிட்ட போதிலும், இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்த சி5 ஏர்கிராஸ் மட்டுமே சற்று விலைமிக்கது; மற்ற சிட்ரோயன் கார்கள் அனைத்தும் விலை குறைவானவை ஆக அறிமுகம் செய்யப்பட்டன.

citroen aircross comfort edition introduced

இருப்பினும், இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க சிட்ரோயன் போராடி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், எப்படியாவது வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் முயற்சியாக ஏர்கிராஸ் காரில் புதியதாக கம்ஃபர்ட் எடிஷனை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமான ஏர்கிராஸ் கார் உடன் ஒப்பிடுகையில் இது சற்று மேம்பட்ட உட்புற கேபின் உடன் கிடைக்கும்.

ஏற்கனவே கூறியதுபோல், குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஏர்கிராஸ் கம்ஃபர்ட் எடிஷன் காரின் விலை ரூ.9.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரம் ரூபாய்கள் அதிகமாக வரும். சிட்ரோயன் ஏர்கிராஸ் காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் யு மற்றும் மிட்-ரேஞ்ச் பிளஸ் வேரியண்ட்களின் அடிப்படையில் புதிய கம்ஃபர்ட் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

citroen aircross comfort edition introduced

அதாவது, யு மற்றும் பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கும் அம்சங்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் காரில் கிடைக்கும். அவற்றுடன், கூடுதல் வசதிகளும் கம்ஃபர்ட் எடிஷனில் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விலை ஆனது ஏர்கிராஸ் யு காரை விட அதன் கம்ஃபர்ட் எடிஷனில் ரூ.20,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏர்கிராஸ் பிளஸ் காருக்கும், அதன் அடிப்படையிலான புதிய கம்ஃபர்ட் எடிஷனுக்கும் இடையே விலையில் எந்த வித்தியாசமும் இல்லை.

மேலும், பிளஸ் வேரியண்ட்டில் டர்போ என்ஜின் உடனும் புதிய கம்ஃபர்ட் எடிஷன் கிடைக்கும். சிட்ரோயன் ஏர்கிராஸ் காரில் பலர் கூறும் முக்கிய குறைப்பாடுகளில் ஒன்று அதில் பிரீமியம் வசதிகள் இல்லை என்பதாகும். இதற்காகவே புதிய கம்ஃபர்ட் எடிஷனை சிட்ரோயன் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது இல்லாமல், இந்த ஸ்பெஷல் எடிஷனின் அறிமுகத்திற்கு முன்பு இருந்தே ஏர்கிராஸ் காரில் கூடுதல் தொகைக்கு கஸ்டம் பேக்குகளை சிட்ரோயன் நிறுவனம் வழங்கி வருகிறது.

ஏர்கிராஸ் காரின் ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் இந்த கஸ்டம் பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எண்ட்ரி-லெவல் யு வேரியண்ட்டில் ரூ.36,600 விலையில் வழங்கப்படும் கஸ்டம் பேக்கில் மென்மையான தொடுதல் கொண்ட இண்டிரீயர்கள், ஃபாக் விளக்குகள், 10 இன்ச்சில் தொடுதிரை, ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக கேமரா, க்ரோம் பொருத்தப்பட்ட கதவு கிளாடிங்குகள் மற்றும் வீல் கவர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

அதுவே, பிளஸ் வேரியண்ட்டிற்கான கஸ்டம் பேக்கில் ரிவர்ஸ் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், க்ரோம் பொருத்தப்பட்ட கதவு கிளாடிங்குகள் மற்றும் காரின் வெளிப்புறத்தில் கூடுதல் டச்கள் உள்ளிட்டவை மட்டுமே அடங்குகின்றன. ஏனெனில், மற்ற அம்சங்கள் எல்லாம் இந்த வேரியண்ட்டில் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக எந்தவொரு கூடுதல் தொகையும் இன்றி கிடைக்கின்றன. பிளஸ் கஸ்டம் பேக்கின் விலை ரூ.8,460 ஆக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் கம்ஃபர்ட் எடிஷனில் உட்புற கேபினில் லெதரேட்டட் அப்ஹோல்ஸ்டரி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுவாக பட்ஜெட் விலை கார்களின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆதலால், வழக்கமான சிட்ரோயன் ஏர்கிராஸை காட்டிலும் பிரீமியம் தரத்திலான உட்புற கேபினை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய கம்ஃபர்ட் எடிஷன் ஏற்றதாக இருக்கும்.

Article Published On: Wednesday, June 24, 2026, 6:15 [IST]
English summary
Citroen aircross comfort edition introduced in india price new features
மேலும்... #citroen #suv car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out