5 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி.. இப்போ கொஞ்சம் விலை கூடிருச்சு!

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான C3X காரின் விலையை சற்று உயர்த்தியிருக்கிறது சிட்ரன். மாருதியின் ஃபார்முலாவைப் பின்பற்றி இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் C3 காரை வெளியிட்டது சிட்ரன். குறைவான விற்பனை காரணமாக இந்தக் காரின் விலை 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் விலையை கணிமான அளவில் உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.

எஸ்யூவி போன்ற ஸ்டைலைக் கொண்டிருந்த C3 காரை 2022ம் ஆண்டு வெளியிட்ட போது ஹை-ரைடிங் ஹேட்ச்பேக் என்றே கூறியது. அப்போதே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எஸ்யூவிக்களே மிகவும் பிரபலமாக இருந்தன. ஆனால் C3-யை எஸ்யூவி என சிட்ரன் கூறவில்லை. தற்போது காம்பேக்ட் எஸ்யூவி என்றே C3X காரை தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

Citroen C3X

மேலும், கடந்த சில ஆண்டுகளில் பல முறை விலை குறைக்கப்பட்டதையடுத்து 4.99 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையிலேயே இந்தக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த C3X காரின் குறிப்பிட்ட வேரியன்ட்களின் விலையை மட்டும் சிட்ரன் உயர்த்தியிருக்கிறது.

C3X-ஐ லைவ், லைவ்(O), ஃபீல், ஃபீல்(O), ஷைன் மற்றும் ஷைன் டர்போ எனப் பல்வேறு வேரியன்ட்களாக சிட்ரன் விற்பனை செய்து வருகிறது. இதில் லைவ் வேரியன்ட் தான் குறைந்தபட்சமாக 4.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வேரியன்டின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால் C3X-ன் தொடக்க விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

Citroen C3X

லைவ்(O) பெட்ரோல் வெர்ஷனின் விலையை 6,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது சிட்ரன். தொடர்ந்து ஃபீல்(O) மற்றும் ஷைன் வேரியன்ட்களின் விலையை 8,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது. ஃபீல் CNG வெர்ஷனின் விலையை 31,000 ரூபாய் வரை குறைத்திருக்கிறது சிட்ரன். இவற்றைத் தவிர்த்து மற்ற வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இனி இந்தக் காரை 4.99 லட்சம் ரூபாய் முதல் 9.68 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

குறைவான விலையில் நல்ல பெர்ஃபான்ஸைக் கொடுக்கக்கூடிய ஒரு காரை வாங்க வேண்டும் என்றால் இந்த சிட்ரன் C3X ஒரு சிறப்பான சாய்ஸ் என்றே கூறலாம். இந்தக் காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது சிட்ரன். 1.2 லிட்டர் NA பெட்ரோல் + CNG பவர்ட்ரெயினும் உண்டு.

இதன் NA பெட்ரோல் இன்ஜினானது 82 hp பவர் மற்றும் 115 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினானது 110 hp பவரை உற்பத்தி செய்யும் நிலையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் 190 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

அதேபோல் இதே டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் 205 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. டாப் எண்டான ஷைன் டர்போ வேரியன்டில் மட்டுமே இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற வேரியன்ட்களை மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே நாம் வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெக்கானிக்கலாக வைத்துப் பார்த்தோமானால் சிறப்பான இன்ஜினைக் கொண்ட சிறப்பான ஒரு காராக இந்த சிட்ரனை நாம் கூற முடியும். ஆனால் மிகவும் குறைவான, அடிப்படையான வசதிகளை மட்டுமே தொடக்கநிலை C3X வேரியன்ட்களில் கொடுத்திருப்பது மற்றும் போதுமான அளவில் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இல்லாதது ஆகியவை இந்த நிறுவனத்தின் கார் விற்பனைக்கு முக்கிய தடைக்கற்கலாக இருக்கின்றன.

Article Published On: Monday, July 13, 2026, 10:48 [IST]
English summary
Citroen c3x compact suv price hiked for select variants in india
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out