டாடா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக மீண்டும் ஒரு புதிய கார்! 5 பேர் பயணிப்பதற்கு பொருத்தமானது!

சிட்ரோன் நிறுவனம் தனது இசி3 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அப்கிரேட் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதியதாக டீசர் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

சிட்ரோன் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காராக இசி3 எக்ஸ் விளங்குகிறது. இதற்கு 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேடாக காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் மேம்படுத்தப்பட உள்ளது. சிட்ரோன் இந்தியாவில் தனது கார்களுக்கு கடந்த 2025ஆம் ஆண்டில் அப்கிரேட்களை் வழங்கி இருந்தது. அதன் ஒருபகுதியாகவே சிட்ரோன் கார்களின் பெயருக்கு இறுதியில் 'X' என சேர்க்கப்பட்டது.

citroen ec3 x electric car tease

இருப்பினும், அப்போது இசி3 எலெக்ட்ரிக் காருக்கு அப்கிரேட் வழங்கப்படவில்லை. அது தற்போது வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக, இசி3 காரின் பெயர் இசி3 எக்ஸ் என மாறவுள்ளது. இதன்படி, வெளிப்புறத்தில் இந்த கார் சிட்ரோன் எக்ஸ்-வரிசை கார்களுக்கே உண்டான DRL-கள் உடன் புதிய எல்இடி ஹெட்லைட்களை பெற்றுவர உள்ளது.

அதேபோல், இந்த எலெக்ட்ரிக் காருக்கு உட்புறத்திலும் டாஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் மெட்டீரியல்கள் உள்ளிட்டவை பிரீமியம் தரத்திற்கு மாற்றப்பட்டு, பயண அனுபவம் மேம்படுத்தப்பட உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் சி3 காரின் டாப் வேரியண்ட்டில் இருந்து சில அம்சங்களை புதிய இசி3 எக்ஸ் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

citroen ec3 x electric car tease

இதன்படி, முழுவதும் டிஜிட்டல் தரத்திலான டிரைவர் டிஸ்பிளே, பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM, 6 ஏர்பேக்குகள், ரீடிசைனிலான இருக்கைகள் மற்றும் புதிய ஏசி காற்றுத்துளைகள் உள்ளிட்டவை அடங்கலாம். இவற்றுடன் காரின் ஒட்டுமொத்த கேபினின் அலங்கரிப்பும் பிரீமியம் தரத்திற்கு மாற்றப்படலாம்.

மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட், அப்கிரேட் செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் டிரைவ் மோட் செலெக்டர் உள்ளிட்டவையும் புதிய இசி3 எக்ஸ் காரில் வழங்கப்படலாம். மற்றப்படி, காரின் பேட்டரி பேக்கில் எந்த மாற்றமும் செய்யப்பட போவதில்லை.

இதனால், வழக்கமான 29.2kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தான் புதிய இசி3 எக்ஸ் காரிலும் வழங்கப்பட உள்ளது. இந்த பேட்டரி ஆனது ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டாரில் இணைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 57 எச்பி மற்றும் 143 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது.

இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 246 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இசி3 எலெக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு தற்சமயம் லிட்டருக்கு 106 கிமீ ஆக உள்ளது. விற்பனையில் இந்த சிட்ரோன் எலெக்ட்ரிக் காருக்கு டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எம்ஜி கோமெட் இவி உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய இசி3 எக்ஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது தற்போதைய இசி3 இவி காரின் புத்துணர்ச்சியான வெர்சனாக களமிறக்கப்படுகிறது. இதன் மூலமாக, இந்த காரின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் மூலமாக, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் காருக்கு இந்த சிட்ரோன் எலெக்ட்ரிக் கார் சவாலான போட்டியாக விளங்கும்.

Article Published On: Thursday, June 4, 2026, 11:34 [IST]
English summary
Citroen ec3 x electric car teased ahead of launch in india
மேலும்... #citroen #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out