ஏக்கசக்க மைலேஜ்! பெட்ரோல் மாதிரி காசு செலவாகாது! இந்த காரை இத்தனை லட்சம் பேர் வாங்கிட்டாங்களா?
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு மொத்தம் 45,29,913 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் 18.5 சதவீதம் வாகனங்கள் சிஎன்ஜிவாகனங்களாக உள்ளன. இந்தியாவில் அதிகம் சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியுள்ளது. இது மைலேஜ் குறித்து மக்கள் மத்தியில் எவ்வளவு நம்பிக்கை வருகிறது என்பதை காட்டுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையான சிஎன்ஜி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்படியாக கடந்தாண்டு விற்பனையான டாப் 25 சிஎன்ஜி கார்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி மாருதி எஸ்-பிரஸ்ஸோ 1575 கார்களும், மாருதி செலிரியோ 4193 கார்குளம், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 4960 கார்களும், டொயோட்டா அர்பன் டைசர் 5380 கார்களும், மாருதி ஆல்டோ 6210 கார்களும், டொயோட்டா கிளான்ஸா 6612 கார்களும், டாடா டிகோர் 7029 கார்களும், டாடா அல்ட்ராஸ் 10,831 கார்களும், டொயோட்டா ரூமியான் 11,137 கார்களும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 11,275 கார்களும், டாடா டியாகோ 15,775 காருகளும் விற்பனையாகியுள்ளுது.
மாருதி ஸ்விஃப்ட் 18,054 கார்களும், ஹூண்டாய் எக்ஸ்டர் 18,528 கார்களும், மாருதி எக்ஸ்எல் 6 கார் 19,879 கார்களும், மாருதி கிராண்ட் விட்டாரா 24,037 கார்களும், மாருதி பலேனோ 24,220 கார்களும், டாடா நெக்ஸான் 34,712 கார்களும், மாருதி ஃபிராங்க்ஸ் 42,051 கார்களும், ஹூண்டாய் ஆரா 49,464 கார்களும், மாருதி ஈக்கோ 59,520 கார்களும், மாருதி பிரெஸ்ஸா 70,928 கார்களும், டாடா பஞ்ச் 71,113 கார்களும், மாருதி டிசையர் 89,015 கார்களும், மாருதி வேகன்ஆர் 1,02,128 கார்களும், மாருதி எர்டிகா 1,29,920 கார்களும் விற்பனையாகியுள்ளது.

சிஎன்ஜி கார்களில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி காராக இருகு்கிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு மட்டும் மொத்தம் 1,29,920 கார்கள் விற்பனவையாகியுள்ளது. சிஎன்ஜி மார்கெட்டில் மாருதி நிறுவனம் தான்ஆதிக்கம் செலுத்த வருகிறது.
இந்நிறுவனம் வேகன் ஆர், டிசையர், கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, ஈக்கோ உள்ளிட்ட கார்களை சிஎன்ஜியில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம மொத்தமாக 5,91,730 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவதுஇந்த செக்மெணட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் மட்டும் 70.6 சதவீதம் விற்பனையாகியுள்ளது.

இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருகு்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 5 மாடல்களில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறுது. இந்நிறுவனம் டியாகோ, டிகோர், பஞ்ச், அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது.
3வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 79,267 வாகனத்துடன் 9.5 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. எக்ஸ்டர், கிராண்ட் ஐ10, ஆரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஆரா கார் சிறப்பாக சிஎன்ஜி செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.அதற்கு இந்த சிஎன்ஜி கார்களின் விற்பனையே சாட்சி. இன்னும் இந்த கார்களின் விற்பனை இந்தாண்டு அதிகமாகும். தற்போது சிஎன்ஜி கேஸ் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications









